Header Ads



கல்முனையை 3 ஆக பிரிக்க, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் யோசனை

உத்தேச கல்முனை வடக்குப் பிரதேச செயலக உருவாக்கம் தொடர்பில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் நடைமுறைச் சாத்தியமான தீர்வு யோசனையொன்று உரிய பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

அவருடன் கலாநிதி பி.விக்னேஸ்வரனும் சமுகமளித்திருந்தார்.

உரிய கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.ஜே.அதிசயராஜிடம் கையளிக்கப்பட்ட தீர்வுத் திட்டம் பற்றிய தெளிவூட்டலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின்படி எந்தவொரு இனமும் பாதிக்கப்படாது என அவர் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் கூறியதாவது;

பழைய நிருவாக அலகான இறைவரி உத்தியோகத்தர் பிரிவு அல்லது பிரிவுக் காரியாதிகாரி பிரிவு (D.R.O. DIVISION) முறை நீக்கப்பட்டு பதிலாக உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் (A.G.A.Division) ஏற்படுத்தப்பட்டபோது முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும் ஒரு தனியான ஒற்றை உதவி அரசாங்க அதிபர் பிரிவான கரவாகுப்பற்று (கல்முனை) உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இது சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மருதமுனை மற்றும் பெரியநீலாவணை ஆகிய தமிழ் - முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கியிருந்தது.

இப்பிரிவு உருவான ஆரம்பகாலத்திலிருந்தே அதாவது 1980களிலிருந்தே கல்முனைத் தமிழர்களின் கோரிக்கை என்னவாக இருந்தது என்றால் இத் தனியான ஒற்றை உதவி அரசாங்க அதிபர் பிரிவைக் கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு இரு தனித்தனி உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாக அதாவது சாய்ந்தமருது மற்றும் கல்முனைக்குடிக் கிராமங்களை உள்ளடக்கிய தென்பகுதியை நூறுவீதம் முஸ்லிம் பெரும்பான்மை உதவி அரசாங்க அதிபர் பிரிவாகவும், கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மருதமுனை மற்றும் பெரியநீலாவணைக் கிராமங்களை உள்ளடக்கிய வடபகுதியைத் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் வாழும் தமிழ்ப் பெரும்பான்மை உதவி அரசாங்க அதிபர் பிரிவாகவும் ஆக்கித்தரும்படியே.

இக்கோரிக்கையை அடுத்தே 12.04.1989 அன்று ஒரு தற்காலிக ஏற்பாடாகத்தான் கல்முனை வடக்குக்கென்று உப செயலகம் ஒன்று திறக்கப்பெற்று அதற்குப் பொறுப்பாகத் தமிழ் உதவி அரசாங்க அதிபர் ஒருவரும் நியமிக்கப்பெற்றார். இவர் முழுமையான அதிகாரம் கொண்ட அலுவலர் அல்ல.

மேலே குறிப்பிட்ட வடபகுதியில் அமைந்த கிராம சேவகர்களில் தமிழ்ப் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றிய கிராம சேவகர்கள் கல்முனை வடக்கு உப செயலகத்திற்குப் பொறுப்பான உதவி அரசாங்க அதிபரின் கீழும் முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பாகக் கடமையாற்றிய கிராம சேவகர்கள் பிரதான அலுவலகத்திற்குப் பொறுப்பான அதாவது முழுக் கரவாகுப்பற்று (கல்முனை) உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரம் படைத்த உதவி அரசாங்க அதிபரின் கீழும் கடமையாற்றப் பணிக்கப்பட்டனர். இந்த ஏற்பாடு அன்றிருந்த களநிலையில் ஒரு தற்காலிக ஏற்பாடே தவிர இது வழமையான அல்லது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிருவாக ரீதியான நடைமுறை அல்ல.

இவ்வாறு 12.04.1989 இல் ஏற்படுத்தப்பெற்ற கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தான் இன்றுவரை கடந்த முப்பது வருடகாலமாகப் பெயரளவில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

பின்னாளில் கிராமசேவகர் பிரிவுகளில் ஏற்பட்ட எல்லைகள் மீள்நிர்ணயத்தின் விளைவாகத் தற்போது இவ் உப-பிரதேச செயலகத்திற்குப் பொறுப்பான பிரதேச செயலாளரின் கீழ் (உதவி அரசாங்க அதிபர் பிரிவு பின்பு பிரதேச செயலகப் பிரிவு என்றும் உதவி அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் என்றும் பெயர் மாற்றம் அடைந்தது) 29 தமிழ்ப் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பான கிராமசேவகர்கள் கடமையாற்றுகின்றனர். இந்த 29 கிராம சேவகர் பிரிவுகளும் தற்போது பெரியநீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை, சேனைக்குடியிருப்பு மற்றும் நற்பிட்டிமுனைத் தமிழ்ப் பிரிவு ஆகியவற்றில் பூகோள ரீதியாக நிலத்தொடர்புள்ள வகையிலே அடங்கியுள்ளவை.

அதேவேளை கல்முனை வடக்கு எனக் குறிக்கப்படும் உப பிரதேச செயலகப் பிரிவு எல்லைக்குள் தற்போது 15 முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகள் மேலே குறிப்பிடப்பட்ட 29 தமிழ்ப் பெரும்பான்மைக் கிராமசேவைகள் பிரிவுகளுக்கும் மேலதிகமாக உள்ளன. இவற்றிற்குப் பொறுப்பான கிராம சேவகர்கள் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதான பிரதேச செயலகப் பிரிவுக்குப் (கரவாகுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவு அல்லது கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவு) பொறுப்பான அதிகாரம் படைத்த பிரதேச செயலாளரின் கீழ் கடமையாற்றுகின்றனர்.

இந்த 15 முஸ்லிம் பெரும்பான்மை கிராம சேகர் பிரிவுகளும் தற்போது பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவு, மருதமுனை, நற்பிட்டிமுனை முஸ்லிம்பிரிவு மற்றும் இஸ்லாமாபாத் ஆகியவற்றில் பூகோளரீதியாக நிலத்தொடர்பற்ற வகையிலே அடங்கியுள்ளவை.

இப்பிரதான முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின்கீழ் (கல்முனை முஸ்லிம் செயலகப் பிரிவு) மேற்கூறப்பட்ட கல்முனை வடக்குப் பிரதேசத்தில் அமைந்த ஆனால் நிலத்தொடர்பற்ற 15 முஸ்லிம் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளுடன் கல்முனைக் குடிக் கிராமத்தில் நிலத்தொடர்புள்ள வகையில் அமைந்துள்ள 14 முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகளுடன் சேர்த்து அதிலும் மொத்தம் 29 கிராமசேவகர் பிரிவுகள் உள்ளன.

இப்படியிருக்கையில் கடந்த முப்பது வருட காலத்தில் இரண்டு முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ஒன்று : முழுக்கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவிலிருந்து பிரித்தெடுக்கப்பெற்றுச் சாய்ந்தமருதுக்கெனத் தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவு 2001 இல் உருவாக்கப்பட்டது. இது தற்போது முழு அதிகாரம் படைத்த பிரதேச செயலகப் பிரிவாக இயங்கிவருகிறது. இது 100% முஸ்லிம்களைக் கொண்டதாகும். அதன் தற்போதைய சனத்தொகை 31,055 ஆகும்.

மற்றது : மேற்குறிப்பிட்ட கல்முனை வடக்குப் பிரதேசத்தில் நிகழ்ந்த தமிழ் முஸ்லிம் மக்களின் குடிப்பரம்பல் மாற்றம்.

12.04.1989 இல் நிறுவப்பெற்ற உபசெயலகப் பிரிவின் கீழ் தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட மேற்குறிப்பிட்ட 29 தமிழ்ப்பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகளை மட்டுமே உள்ளடக்கியதான உபபிரதேச செயலகத்தையே தரமுயர்த்தித் தருமாறு எழுந்தமானமாகத் தமிழர்தரப்புக்கோருவது 'கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு' என்பதன் உண்மையான தாற்பரியத்தை உணர்த்துவதாயில்லை.

மேற்படி 29 தமிழ்ப்பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகளை மட்டுமே உள்ளடக்கியதாக உத்தேச கல்முனை வடக்குப் (தமிழ்) பிரதேச செயலகப்பிரிவு உருவானால் மேலே குறிப்பிட்ட 15 முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமசேவகர் பிரிவுகளும் நிலத்தொடர்பற்ற வகையிலே கல்முனை முஸ்லிம் செயலகப் பிரிவின் கீழ் தொடர்ந்திருப்பது ஒரு பிழையான முன்னுதாரணமும் நிர்வாகச் சிக்கல் நிறைந்ததுமாகும். இந்த விடயம்தான் தீர்வுக்குத் தடையாகவும் உள்ளது. எனவே நடைமுறைச் சாத்தியமான பின்வரும் தீர்வு யோசனைகளை முன்வைப்பது நோக்கமாகும்.           

கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு எனும்போது பூகோள ரீதியாக அதன் வரையறுக்கப்பெற்ற எல்லைகள் வருமாறு.            
வடக்கு : மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் எல்லை அதாவது பெரிய கல்லாறு கிராமம் (பெரியநீலாவணைக் கிராமம் வரை)
தெற்கு : கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதி (கல்முனைக்குடிக் கிராமம்)
கிழக்கு : வங்காள விரிகுடாக் கடல்
மேற்கு : கிட்டங்கி வாவி

இந்த எல்லைகளால் வரையறுக்கப்பட்ட கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு என்பது பூகோளரீதியாக நிலத்தொடர்புள்ள வகையிலே மேற்குறிப்பிடப்பட்ட 29 தமிழ்ப் பெரும்பான்மைக்; கிராமசேவகர் பிரிவுகளையும் 15 முஸ்லிம் கிராமசேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மொத்தம் 44 கிராமசேவகர் பிரிகளை உள்ளடக்கியதாக அமைகிறது. அதாவது இந்த 44 கிராம சேவகர் பிரிவுகளும் நிலத்தொடர்புள்ள வகையிலேயே அமைந்துள்ளன.

ஆனால் இதன் குடிப்பரம்பல் பின்வருமாறு அமைகிறது.

முஸ்லிம் :     31,338
தமிழர்     :     31,199
சிங்களவர்:       168
ஏனையோர்:   1,083
மொத்தம்  :   63,788

இது முஸ்லிம் பெரும்பான்மையாகவும் தமிழர்களும் முஸ்லிம்களும் எண்ணிக்கையில் கிட்டத்தட்டச் சமனாகவும் அமைவதால் கடந்த முப்பதுவருடகால கல்முனைத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யமாட்டாது.

ஆகவே இது திருப்தியான தீர்வாகமாட்டாது. அனால் இதற்குள் பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவும் (KP72 மற்றும் KP72A ஆகிய கிராமசேவகர் பிரிவுகள்) மருதமுனைக் கிராமமும் (KP/67, KP/67A ,KP/67B, KP/67C,KP/67D ,KP/68 ஆகிய கிராமசேவகர் பிரிவுகள்) மொத்தம் 08 கிராமசேவகர் பிரிவுகள் அடங்குகின்றன.

பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவும் மருதமுனைக் கிராமமும் அருகருகே நிலத்தொடர்புள்ளவை. இதன் மொத்த சனத் தொகை (100% முஸ்லிம்) 17,433 ஆகும். அதாவது மேலே குறிப்பிட்ட 15 முஸ்ஸிம் பெரும்பான்மைக் கிராம சேவகர் பிரிவுகளில் இந்த 8 கிராம சேவகர் பிரிவுகள் மட்டுமே நிலத்தொடர்புள்ளவை. இதனைத் தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவாக (இல: 1) உருவாக்கமுடியும். அப்படி ஆக்கும்போது கல்முனைவடக்குப் பிரதேசத்தில் எஞ்சிய 36  (44 – 08 = 36) நிலத்தொடர்போடு கூடிய கிராமசேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய பிரதேசத்தின் குடிப்பரம்பல் பின்வருமாறு அமைகிறது.

தமிழர்     :     31,999
முஸ்லிம்  :     13,895 (31,338 – 17,433 = 13,895)
சிங்களவர்:     168
ஏனையவர்கள்   :     1,083
மொத்தம்  46,345 (63,788 – 17,443 = 46,345)

இது நிலத்தொடர்புடையதாக இருப்பதனாலும் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதாகவும் தமிழ், முஸ்லிம், சிங்களவர் என (ஏனையவர்களுள் பறங்கியர் அடங்குவர்) மூவின மக்களைக் கொண்டதாகவும் இருப்பதனாலும் இதனையும் தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவாக (இல.2) உருவாக்க முடியும். இது தமிழர்களுக்குத் திருப்தியான தீர்வாகும்.

அப்படி ஆக்கும்போது கல்முனை முஸ்லிம் பிரிவில் எஞ்சியிருக்கின்ற 14 கிராமசேவகர் பிரிவுகளையும் அதாவது கல்முனைக்குடியை இன்னுமொரு தனியான பிரதேச செயலகப் பிரிவாக (இல.3) உருவாக்க முடியும். அப்படி உருவாக்கும்போது இந்த உத்தேச மூன்றாது பிரிவின் மொத்த சனத்தொகை (100% முஸ்ஸிம்) 23,830 ஆகும்.

இதுவே தற்போது கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதிலுள்ள (நிலத்தொடர்பற்ற பிரச்சினை உட்பட) பிரச்சினைகளைத் தீர்த்துப் புதிய பிரதேசசெயலகங்களை உருவாக்குவதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வாகும். மேற்கூறப்பட்ட இல:1(உத்தேச மருதமுனை பிரதேச செயலகப் பிரிவு), இல:2 (உத்தேச கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவு), இல: 3 (உத்தேச கல்முனை தெற்குப் பிரதேச செயலகப் பிரிவு என மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளை உருவாக்குவது நடைமுறைச் சாத்தியமானது.

அப்படி உருவாக்கும் போது முஸ்லிம்களுக்கென்று 100%முஸ்ஸிம்களைக் கொண்ட இரு பிரதேச செயலகப் பிரிவுகளும் (இல:1, இல. 3) தமிழர்களுக்கென்று தமிழ், முஸ்லிம், சிங்களவர்களைக் கொண்ட தனியான தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவொன்றும் (இல: 2) அமைய வாய்ப்புள்ளது என்றார்.

(சகா)

7 comments:

  1. ஆம் உங்களுடைய தீர்வை ஏற்றுக்கொண்டு கை கட்டி, வாய் மூடி நிற்கின்றோம் அப்படியே மயிரையும் பிடுங்கி விடுங்கள். கல்முனையில் கடைசி முஸ்லீம் இருக்கும்வரை இது நிகழாது

    ReplyDelete
  2. இங்கு முன்மொழியப்பட்ட தீர்வானது இப்பொழுது தமிழர்கள் கேட்கும் விடயத்தை விட முஸ்லிம்களிட்கு மிகவும் ஆபத்தானது.
    தமிழர்களின் உள்நோக்கை வெளிப்படையாக காட்டி நிட்கும் ஒரு முன்மொழிவாகும்.

    இங்குள்ள ஆபத்தையும், தமிழர்களின் உள்நோக்கையும் தெளிவாக புடம்போட்டு காட்டும் ஒரு ஆக்கம் வெகுவிரைவில் வெளியிடுகின்றேன் இன்ஷாஅல்லாஹ் .

    Regards
    Abdul Basith MY

    ReplyDelete
  3. இந்த பேப்பரை சுருட்டி கல்முனை மா நகர சபை குப்பை தொட்டியில் போடுவது மிக மிக சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  4. ஏதோ அப்பனே, தமிழர் முஸ்லிம்களிடையே வடக்கு கிழக்கில் பிரிவினைகள் வராமல் இருந்தால் போதும். அதன் அடிப்படையில் பிரிப்பதற்கு முயற்சி எடுக்கவும்.

    ReplyDelete
  5. யாழ் முஸ்லிம் ஆசிரியருக்கு, கல்முனையை 3 றாக பிரிப்பது பற்றிய புதிய திட்ட அறிக்கைபற்றி விரிவான விவாதங்களை ஊக்குவிக்குமாறு கோருகிறேன். கல்முனை தொடர்பாக தமிழ் முஸ்லிம் மக்களிடமிருந்து கற்றுக்கொள்வது அவசியமாக இருக்கிறது. கல்முனை பிரிவுபற்றிய இப்புதி திட்டத்தின் சாதக பாதங்கள் பற்றி விவாதிப்பது அவசியமாக இருப்பதால் தொடர்ந்தும் ஓரிரு வாரங்களுக்கு கட்ட்ரையை முகப்பு பக்கத்தில் வைத்திருக்குமாறு பணிவன்புடன் கோருகிறேன்.

    ReplyDelete
  6. இங்கு முஸ்லிம்களோடு பின்னி வாழமுடியாது என பிரித்துக்கேட்கும் தமிழர்கள் ஏன் சில முஸ்லிம் கிராமங்களை சேர்க்கிறீர்கள் உங்களுக்கு தேவையென்றால் தமிழர் கிராமங்களை சேர்த்து தனியாக பிரிந்து செல்லுங்கள் அதற்கு எந்தத் தடையுமில்லை அதவிட்டுட்டு தமிழ் பிரதேசபை என்றும் வேண்டும் அதற்குள் முஸ்லிம் மக்களும் வேண்டும்! போங்கடா மாங்கா மடையனுகாள்! முந்தி காரைதீவு, நாவிதன்வெளிய விட்டுத்தந்தாப்போல இதையும் தாறத்துக்கு இப்ப உள்ள மக்கள் அந்தளவுக்கு முட்டாள்களில்லை!

    ReplyDelete
  7. வந்தான் வராத்தான் சோனகர்களுக்கு என்ன உரிமை இருக்கு கல்முனை தமிழனின் மண்

    ReplyDelete

Powered by Blogger.