Header Ads



முஸ்லிம் திருமண வயது 18 ஆகிறது, பெண்களும்­ காதி நீதி­ப­தி­யாகலம், மத்தாஹ் பெற நடவடிக்கை

முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்­லையை 18 ஆக அதி­க­ரிப்­ப­தற்கும், முஸ்லிம் பெண்­களை காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிப்­ப­தற்கும், விவா­க­ரத்து வழக்­கு­களில் பாதிக்­கப்­படும் பெண்­க­ளுக்கு மத்தாஹ் (நஷ்­ட­ஈடு) பெற்றுக் கொடுப்­ப­தற்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று தங்­க­ளது ஏக­ம­ன­தான செய்து கொண்ட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்கள் முன்­னைய அமைச்சுப் பத­வி­களை மீண்டும் பொறுப்­பேற்றுக் கொள்­வ­தாக நேற்றுத் தீர்­மா­னித்­தனர்.

தங்­க­ளது முன்­னைய அமைச்சுப் பொறுப்­பு­களை மீண்டும் ஏற்றுக் கொள்­வதா? இல்­லையா? என்று அவர்கள் நேற்று மாலை பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் ஒன்­று­கூடி ஆராய்ந்­தனர். நிலைமை ஓர­ளவு சீர­டைந்­துள்­ள­மையைக் கருத்திற் கொண்டும் சமூ­கத்தின் நலன் கரு­தியும் மீண்டும் அமைச்சுப் பொறுப்­பு­களை ஏற்றுக் கொள்­வ­தாகத் தீர்­மா­னித்­தனர்.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் அமைச்சர் கபீர் ஹாஷிமைத் தவிர ஏனைய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர். அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமும் கலந்து கொண்­டி­ருந்தார்.

ஜனா­தி­பதி தனிப்­பட்ட வெளி­நாட்டு விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டி­ருப்­பதால் அவர் நாடு திரும்­பி­யதும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தியின் முன்­னி­லையில் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து முன்­னைய அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்றுக் கொள்­வார்கள் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி 4 அமைச்­சர்­களும் 4 இரா­ஜாங்க அமைச்­சர்­களும் ஒரு பிர­தி­ய­மைச்­ச­ரு­மாக 9 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்கள் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தனர்.

அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், கபீர் ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம், ரிசாத் பதி­யுதீன், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.எஸ்.அமீர்­அலி, அலி­சாஹிர் மௌலானா, பிர­தி­ய­மைச்­ச­ரான அப்­துல்லாஹ் மஹ்ரூப் ஆகி­யோரே தங்­க­ளது பத­வி­களைத் துறந்­த­வர்­க­ளாவர்.
இவர்­களில் ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகிய இரு­வரும் அண்­மையில் கட்சித் தலை­வ­ரான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்றுக் கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்பினர்கள் தங்கள் அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

vidivelli 

5 comments:

  1. AMAICHU PAZAWIHALUKKU NEER
    WADIKKURA UNGALUKKU, MUSLIM
    SHATTAM PATRI ENNA THERIUM.

    RANILIN VENDUHOLUKKU ISLATHAI
    KOCHAI PADUTHUHIREERHALA.

    ORUNAAL MARANAM VARUM. KAVANAM

    ReplyDelete
  2. திருமணத்தில் ஆரம்பித்து பதவி பெறுவதுல முடிகிறது செய்தி. அப்போ செய்தியின் படி இவர்கள் பதவி துறந்து திருமணப் பிரச்சினை காரணமாகவா?

    ReplyDelete
  3. வரலாற்றுத்தவறு ஒன்றை செய்ய எத்தனிக்கின்றார்கள்.
    அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்.நீங்கள் யாரை திருப்திப்படுத்த இந்த முடிவை எடுத்துள்ளீர் என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள்.

    ReplyDelete
  4. வரவேற்க தக்க விடயம்.பெண்களுக்கு கல்வி மிக மிக அவசியம்.எனவே 18 வயது என்பதும்,பெண் காதி நீதிபதிகளும்,பெண்களுக்கு கனவனினால் விவாகரத்து செய்யப்படும் போது அந்த பெண்ணுக்கும்,அவளின் பிள்ளைகலுக்கும் வாழ்வாதார பணமும் மிக அவசியம்.இது ஏற்றுகொல்லக்கூடிய ஒரு சட்டம்.

    ReplyDelete
  5. Yes, it's a good decision about age limit, we are muslims not going to effect on it, when we cheked previous datas analysis we very small number of people only has got married below 18 years old.
    Other then that the lady judges of (Kaadhi) is not excepted, better to make a group of judges more then Two and include one lady , who can advice and involved in judgment. I hope this will work.

    ReplyDelete

Powered by Blogger.