June 23, 2019

பிமலின் நாசகார பேச்சு, JVP யின் நிலைப்பாடு இதுவா..? முஸ்லிம் வாக்குகளையும் இழந்தனர்

இலங்கையில் முஸ்லிம் சமூகம் தமது இறுக்கமான கொள்கையில் இருந்து விடுபட்டு ஜனநாயக கொள்கைக்கு மாறாக வரையில் முஸ்லிம்கள் மீதான அச்சமும்,இஸ்லாம் மீதான அவநம்பிக்கையும் மாறாது என மக்கள் விடுதலை முன்னணி யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சஹ்ரான் குழு மட்டும் அல்ல ஜனாதிபதி பிரதமர் பாதுகாப்பு அதிகாரிகள் என அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஒழுங்குதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குலுக்கு சஹ்ரான் மட்டும் அல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். அனைவரும் இதில் தொடர்பு பட்டவர்கள். 

இந்த தாக்குதலில் ஒன்று மட்டுமே குறைவாக உள்ளது. அது என்ன வென்றால் இந்த குண்டு தாக்குதல் நடந்த  நேரம் நேரடி ஒளிபரப்பு கொடுக்காத ஒன்று மட்டுமே குறையாகும், ஏனைய அனைத்து துமே இடம்பெற்றுள்ளன. தாக்குல் நடத்த  ஒரு நாளைக்கு முன்னர் கூட இது குறித்து  அறிவித்தல்கள் விடுக்கப்பட்டும் எவரும் கவனத்தில் கொள்ளாமை கேலிக்கூதாகும்.

முஸ்லிம் கொள்கை மிகவும் இருக்கமானது என்றால், சிறுவர்களை திருமணம் செய்ய வலியுறுத்தினால், ஏனைய மக்களை கொலை செய்ய தூண்டினால், பெண்களுக்கு சம உரிமை இல்லை என்றால் எவ்வாறு அந்த மதத்தை நம்புவது?

அன்று கிறிஸ்தவ அடக்குமுறை இருந்தது. கலிலியோ, பூர்டோ ஆகியோரை தரவைத்தது காலமெல்லாம் இருந்தது. இவற்றுக்கு எதிராக ரொபின் ஹூட் போராடுவது போல், இன்று மீண்டும் போராட்டம் எடுக்க வேண்டுமா என்ற கேள்வியும் உள்ளது.

பல திருமணங்கள், அடக்குமுறைகள் இஸ்லாத்தில் கையாளப்படுவதை தடுக்க வேண்டும். முஸ்லிம் பெண் என்ற அடக் குமுறை இல்லாது அரசியல் அமைப்பில் உள்ள பெண் உரிமையை பாதுகாக்க வேண்டும். 

முஸ்லிம் பெண்கள் உரிகைகள் பலமடைய வேண்டும். இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் தமது மதத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஆனால் மனிதன் மதத்துக்காக வாழ கூடாது, மனிதனை நெறிப்படுத்தவே மதம் அதை விளங்கிக் கொள்ள வேண்டும். இன்றுள்ள இஸ்லாமிய மத இறுக்குமுறை இனியும் தொடர்ந்தால் மிகவும் மோசமான மாதமாக இது அடையாளபடுத்தப்பட்டுவிடும். 

ஏனைய சமூகத்தினர் இஸ்லாம் குறித்து நினைக்கும் தவறான எண்ணம் உண்மை என்று ஆகிவிடும். இதனை இலங்கையில் முஸ்லிம்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார் ..

பிற்குறிப்பு இருபெரும் கட்சிகளினாலும் ஏமாற்றப்பட்ட முஸ்லிம்களில் ஒரு தொகுதியினர் எதிர்வரும் தேர்தல்களில் ஆதரவளிக்க தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் யின் அண்மைக்கால போக்குள் அவர்களின் இனவாதப் போக்குகளையும் இஸ்லாத்திற்கு எதிரான நகர்வுகளை மேற்கொண்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

3 கருத்துரைகள்:

JPG யினர் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள பேசுபவர்களாக இருந்தால் பேரினவாதம் பேசி ஆட்சியைப்பிடித்திருப்பார்கள். உள்ளிருந்து கொண்டு இனவாதம் பேச முடியாது என்பதனால்தான் வீரவன்ச போன்றோர் வெளியேறிச் சென்றனர்.

Title of this story is misleading. This is by no means a hatred speech against Muslims. He had certain misunderstanding about Islam and he expressed them openly. After all SL is supposed to be a country with freedom of speech and expression. His speech should be taken as a forum for discussion, not as hatred speech. There are truth in some of the things he said. Underage marriage, inequality of women are things happening in our society whether we like it or not. No one can deny that.
When people like Sharmila Syed tried to comment certain matters they received death threats denying their freedom of expression by people line Sahran. Thank god Sahran is no more. Muslims must now make themselves open for discussions.

செய்திக்கும் லைப்பிற்கும்நெறயெளிதெரிகிறது

Post a comment