Header Ads



ISIS தீவிரவாதிகள் என மிரட்டி, வீடு புகுந்து கொள்ளை - யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி

- பாறுக் ஷிஹான்-

ஐ.எஸ். தீவிரவாதிகளாக தம்மை கூறி குப்பிளான் வடக்கு கடற்கரை கற்பக விநாயகர் கோயிலுக்கு அண்மையில்  வீடொன்றின் யன்னல் கம்பிகளை வளைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கு  தனித்திருந்த வயோதிபத் தம்பதியரை   தாக்கிவிட்டு  அங்கிருந்த 45 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துகொண்டு  தப்பிசென்றுள்ளனர். 

இச்சம்பவம்  வெள்ளிக்கிழமை (31) அதிகாலை  இடம்பெற்றுள்ளது.  

இதன்போது  வீட்டில் நுழைந்த கொள்ளையர்களை கண்டு வயோதிபத் தம்பதியினர் கத்தினர் .எனினும்   கொள்ளையரில் ஒருவர்  சத்தம் போட்டால் குண்டு வைப்போம் என மிரட்டியுள்ளார் என பாதிக்கப்பட்ட தம்பதிகள் தெரிவித்தனர்.

கதவுக்கு போட்ட ரீப்பையால் (வார்த்தடி) வயோதிபரை கொள்ளையர்களில் ஒருவன் பலமாக தாக்கியுள்ளான். இதன்பின்னரும் குறித்த வயோதிபர் கத்தவே மற்றைய கொள்ளையன் கையால் குறித்த வயோதிபரை தாக்கியுள்ளான். 

பின்னர் வீட்டை சல்லடை போட்டு தேடிய போது வீட்டில் எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துகொண்டு தப்பிவிட்டனர்.

கொள்ளையர்கள் இருவரும் கறுப்பு துணியால் தங்கள் முகங்களை மறைத்திருந்ததாக வீட்டில் இருந்தவர்கள் கூறினர். பாதிக்கப்பட்ட தம்பதியினர் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்களாவர்.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.