Header Ads



IS பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்லவென்றால், சஹ்ரான் என்ன இந்துவா..? பௌத்தனா..? - விமல் வீரவன்ச

தெமட்டகொடையில் குண்டை வெடிக்கவைத்து உயிரிழந்தவர் ரிஷாத் பதியுதீனின் சகோதரி. இஸ்லாமிய பயங்கரவாதிகளை பாதுகாக்க இன்னும் சிலர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என எதிர்க்கட்சி எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்தார். 

இதன்போது அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்,பி குறுக்கிட்டபோது, நீங்கள் சஹ்ரானின் சித்தப்பாவா என கேட்டபோது இருவருக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற மதுவரி கட்டளை சட்ட விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலே இவ்வாறு இரண்டுபேருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.

விமல் வீரவன்ச எம்.பி, அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

தெமட்டகொட குண்டு வெடிப்பில் ரிஷாத் பதியுதீனின் தாயாரின் சகோதரியே கொல்லப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்த பொது அதனை  அப்துல்லா மஹ்ரூப் எம்.பி மறுத்தார். அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்லவெனவும் கூறினார். 

இதன்போது விமல் வீரவன்ச, நீங்களா சஹ்ரானின் சித்தப்பா? ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்லவென்றால் சஹ்ரான்  என்ன இந்துவா அல்லது பௌத்தனா? ஐ.எஸ் .ஐ.எஸ் .பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் இல்லையா? சிரியாவில் கொள்வது முஸ்லிம்கள் இல்லையா? அதனால் நீங்கள்தான் அடிப்படைவாதிகளை பாதுகாப்பவர்கள். அதனால்தான் ரிஷாத் பதியுதீன்னுக்கு எதிராக குற்றம் தெரிவிக்கப்படுகின்றது. பெளசிக்கோ எம்.பிக்கோ ஹக்கீம் எம்.பிக்கோ இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதில்லை.

அதனால் இந்த நாட்டில் அடிப்படைவாதம் எந்த இனத்தில் இருந்து வந்தாலும் அதனை நாங்கள் தடுத்து நிறுத்தவேண்டும். அதற்கு தமிழ் முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்து போராடவேண்டும். அப்போதுதான் இந்த நாட்டை பாதுகாக்கலாம் என்றார்.

3 comments:

  1. isis என்பது முஸ்லீம் பெயரில் ஒரு தீவிரவாத இயக்கமாகும் அந்த இயக்கம் இஸ்லாமிய நாடுகளின் தான் நிறைய அட்டூழியங்கள் செய்து மனிதப்படுகொலைகளை செய்து\செய்தும் வருகின்றன ஆனால் அவர்களுக்கும் சாதாரண முஸ்லிம்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை.

    மேல படத்தில் இருப்பவர் jvp யின் முன்னாள் பயங்கரவாதி ஒருவர் இப்ப நல்லவர் போல பேசுறாரு.

    ReplyDelete
  2. மிக பெரிய கண்டு பிடிப்பு

    ReplyDelete
  3. முதலில் நீங்கல் ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை பற்றி எதுவும் பேசவில்லை,ஆனால் ஆயுதமே ஏந்தாதவர்கலை குற்றவாளி என எவ்வாறு கூற முடியும்?

    ReplyDelete

Powered by Blogger.