Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக, இனப்பாகுபாடு காட்டுவதை நிறுத்துங்கள் - மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சில உள்ளுர் அதிகாரிகள் இனப்பாகுபாடு காட்டப்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. 

சட்ட ரீதியாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் முஸ்லிம் சமூக உறுப்பினர்களுக்கு பொது இடங்களில், முக்கியமாக வார கிராம சந்தைகளில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு உள்ளூர் அதிகாரிகளால் குறிப்பிட்ட முஸ்லிம்கள் உரிய பதிவை மேற்கொண்டும் கட்டணத்தை செலுத்திய பின்னரும் அவர்களுக்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கனவத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இவ்விடயம் இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. குறிப்பாக இந்த வகையில் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதில் சிரமங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. 

இது தொடர்பாக அனைத்து உள்ளூராட்சி அரசாங்கத்தின் ஆணையாளர்களிடமிருந்து மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை கோரியுள்ளது. 

No comments

Powered by Blogger.