Header Ads



இனவாதத்தை கட்டவிழ்த்து விட்டால், கடும் நடவடிக்கை - மனித உரிமை ஆணைக்குழு எச்சரிக்கை

தொழிற்சங்க பலத்தை பயன்படுத்தி இனவாதத்தை கட்டவிழ்த்துவிடும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடகம தெரிவித்தார்.  

நிறைவேற்று அல்லது நிர்வாக அதிகாரத்தை பயன்படுத்தி நபர்கள் இடையே வன்முறைகளை தூண்டுதல் அல்லது இனவாதத்தை கட்டவிழ்த்துவிடும் அரச அதிகாரிகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தால் பொலிஸாரின் ஊடாக முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கையெடுக்கப்படும்.  

முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்திவரும் பொலிஸார் அல்லது  உரிய நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத அரச அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கையெடுக்கப்படும். இலங்கை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கு இவ்வாறான சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் மாத்திரம் 8,000முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வருடம் 10,000 வரையான முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடுகின்றவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்டத்தை நிலைநாட்டுமாறு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். சட்ட மா அதிபர் திணைக்களம் வரை சென்று இதற்கான நடவடிக்கைகள் எடுக்க முடியும். மனிதவுரிமைகள் மீறப்பட்டுள்ள நிரூபணமானால் உயர் நீதிமன்றம் வரை செல்ல முடியும் என்றார்.

1 comment:

  1. அல்ஹம்துலில்லாஹ் சட்டம் எல்லோருக்கும் சமம் என்பதையும், நீதி எல்லா மனித அதிகாரங்களுக்கும் ஒருபடி மேலே என்பதையும் எல்லாம் வல்ல நாயனான அல்லாஹ் அவர்களுக்கு புரிய வைப்பானாக!

    ReplyDelete

Powered by Blogger.