June 14, 2019

முஸ்லிம்கள் சரியான முடிவுகளை எடுத்தால் மட்டுமே, எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும்...!

- வ,ஐ,ச,ஜெயபாலன் -

இலங்கையில் இனத்துவ உறவுகளில் சிங்களவர் முஸ்லிம்கள் உறவும் தமிழர் முஸ்லிம்களின் உறவும் பற்றிய உரையாடல்களின் போக்கை ஈஸ்ட்டர் 2019 அடியோடு மாற்றிவிட்டது. இதுபற்றிய உரையாடல்கள் சிங்களவர் மத்திலும் இலகை ஆர்வமுள்ள சர்வதேச சமூகங்கள் மத்தியில் தீவிரப்படுள்ளது. எனினும் முஸ்லிம்கள் மத்தியில் பெரிதாக உரையாடல்களும் ஆய்வுகளும் இடம்பெறவில்லை என்பது அதிற்ச்சி தருகிறது.
.
ஈஸ்டர் தாக்குதலின் முன் பின் என இலங்கையின் இன சமன்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈஸ்ட்டர் தாக்குதலின் பின் சூழல்கள் இலங்கையில் வடகிழகில் மட்டும்தான் ஒப்பீட்டுரீதியாக தமிழர்களும் முஸ்லிம்களும் பாதுகாப்பாக உள்ளனர். இதறக்கு தமிழ் மொழிதான் காரணம். இத்தகைய சூழல் மலையக தமிழ் பகுதிகளிலும் காணப்படுகிறது. சிங்கள பகுதிகளில் முஸ்லிம்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ளபகுதிகளாக ஈஸ்ட்டர் 2019 தாக்குதல்கள் வரைக்கும் சிங்களகிறிஸ்தவர்கள் அதிகம் வாழ்கிற பகுதிகள் இருந்தது. இன்றைய நிலை பற்றிய உறுதிசெய்ய போதிய தரவுகள் இல்லை.

அண்மைக்கால வரலாற்றில் முஸ்லிம்கள் மத்தியில் இடம்பெற்ற மதவிவாதங்களும் மாற்றங்கள் சிங்களவரதும் தமிழரதும் கவனத்தை ஈர்த்தபோதும் குறிப்பாக போர் முடியும்வரைக்கும் அவை முஸ்லிம்களின் உள் இனபிரசினையாகவே கருதப்பட்டது. போருக்குபின் நிலமை மாற்றமடைந்தது. எனினும் ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர்தான் முஸ்லிம்களின் உள் மத விவாதங்களில் நிலவும் மோதல்கள் உள்விவகாரமல்ல அது அரேபிய மையவாத மத அணிகளின் பயங்கரவாத அச்சுறுத்தல் என அடையாளபடுத்தபட்டது. சிங்கள தரப்பும் அயல்நாடுகளும் தெளிவாக வஹாபிய சார்பு அமைப்புகளை குற்றம் சாட்டுகின்றன. இதன் அடிப்படையில் தென் இந்தியாவிலும் தேடல்கள் விசாரணைகள் இடம்பெறுகின்றது. இந்த அரபிய மையவாத அணிகள் மீதான எதிர்ப்பே அரபு மொழி ஆடைகள் என்பவற்றின் மீதான எதிர்ப்பாக உருமாற்றம் பெறுகின்றது. 

சிங்களவர் மிக தெளிவாக வஹாபிய அமைப்புகளுக்கு எதிராக சூபிகளோடு மட்டுமே சமரசம் என்கிற நிலைபட்டை எடுத்துள்ளனர். இந்தச் சூழல் கிழக்கு தமிழரை ஏற்கனவே பாதிக்க ஆரம்பித்துவிட்டது. எதிர்காலத்தில் முஸ்லிம்களுடனான சிங்களவர்களதும் தமிழரதும் உறவுகளும் நிலைபாடுகளும் சூபிஅமைப்புகளூடாகவே தீர்மானமாகும் என்பது மிக தெளிவாக தெரிகிறது. சூபிகளா வகாபிகளா என்கிற விவாதம் முஸ்லிகளின் உள்விவகாரம் என்பதுதான் இக் கட்டுரையாளரிஎன்னுடைய நிலைபாடு. ஆனால் என்போல சிந்திக்கிற பலர் இருப்பதாக தெரியவில்லை.

போருக்குப்பின் என்னை ஆச்சரியபடுத்திய விடயம் பொதுவாக நான் சந்திக்கும் சிங்களவர் பலர் முஸ்லிம்கள் பற்றிய பரந்த வாசிப்பையும் தரவுகளையும் கொண்டிருப்பதுதான். முஸ்லிம்களைப்பற்றி சிங்களவர் மத்தியில் இடம்பெறும் விவாதங்கள் ஆய்வுகள் அள்வுக்குக்கூட முஸ்லிம்கள் மத்தியில் தம்மைப் பற்றிய உரையாடல் இல்லையென்பதை என்னால் நம்ப முடியவில்லை.

புதிய சூழல் 1987ல் இனபிரச்சினை தீர்வுக்கு அடிப்படையாக இந்தியாவால் முன்வைக்கபட்டு புலிகளால் தடைப்பட்ட வடகிழக்கு இணைப்பு பற்றிய உரையாடல் மீண்டும் ஆரம்பித்துள்ளது. புத்த பிக்குகள் சிலரே இத்தகைய கருத்துகளை பேசுவதுதான் காலத்தின் கோலம் முஸ்லிம்கள் எந்த முடிவை எத்தாலும் என்னைப்போன்ற வர்களின் ஆதரவிருக்கும். முஸ்லிம்கள் சரியான முடிவுகளை எடுத்தால் மட்டுமே எதிர்காலம் சுபீட்சமாக இருக்கும்.

6 கருத்துரைகள்:

திருத்திய பதிவு சாத்தியமானால் முனைய பதிவுக்குப் பதிலாக இதனை ஏற்றுங்கள்.
.
https://www.facebook.com/jaya.palan.9/posts/10156691229054332?notif_id=1560545637670986&notif_t=feedback_reaction_generic

ஜயா,வட,கிழக்கை இணைக்க எந்த Muslim கும் விருப்பமில்லை.ஒவ்வோர் மாகாணமும் தனித் தனியாக இயங்கும் போது,ஏன் வட,கிழக்கு இனைய வேண்டும்.புலிகளை அரசியல் நீரோட்டத்தில் இணைக்கும் முயர்சியால்தான் Sri Lanka வில் சுமார் 30 வருடங்களுக்குள் உருவாக்கப்பட்ட கன்னாமூச்சி ஆட்டம்தான் இந்த மாகாண சபை.எம்மை பொறுத்த வரை வடக்கும்,கிழக்கும் வேறு வேறு மாகாணங்களாக இருக்க வேண்டும் அல்லது மாகாண சபை என ஒரு விடயம் தேவையில்லை.தமிழ் நாட்டை விட எவ்வளவோ பரப்பிலும் சரி, சனத்தோகையிலும் சரி எவ்வளவோ சிறிய Sri Lanka வுக்கு தேவையில்லை மாகாண சபை.எனவே மாகாண சபை இல்லாமல் ஆக்கப்பட வேண்டும். அல்லது வடக்கும் கிழக்கும் Sri Lanka வின் அடுத்த மாகனங்கலை போல் பிரிந்து இருக்க வேண்டும்.

Dear Rizard, வடகிழக்கு இணைப்பு முஸ்லிம்களுக்கு சம்மதமில்லை என்று நீங்கள் சொல்வது உண்மை. அதுபோலவே 1987ல் இணைக்கபட்ட வடகிழக்கு புலிகள் உருவாக்கிய சிக்கல்களால் 19 வருடங்களின் பின் துண்டிக்கப்பட்டது தமிழருக்கு சமதமில்லை. நண்பா வடகிழக்கை நாமோ இலங்கை அரசோ இணைக்கவில்லை. பிரபாகரன் எங்கள் தலைவர் என்கிற பிரேமதாசவின் பேச்சை நம்பி புலிகள் இந்தியாவுடன் முரண்படால இருந்திருந்தால் இணைப்பும் புலிகளும் இன்றும் இருந்திருப்பார்கள். 2006ல் புலிகள் மேற்கு உலகுடன் முரண்படும் வரைக்கும் இலங்கை அரசால் வடகிழக்கு இணைப்பில் கைவைக்க முடியவில்லை. இன்று பிரபாகரன் இல்லையென்பது புதிய சூழலை உருவாக்கியுள்ளது. தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற வகையில் வடகிழக்கு இணைப்பை வலியுறுத்துகிறார்கள். இன்னொரு ஒரு தேசிய இனமான முஸ்லிம்கள் நாமது அலகுகள் வடகிழக்கு இணைப்பில் சேரமாட்டாது என்கிற நிலைபாட்டை எடுத்தால் என்போன்ற பலரது ஆதரவு நிச்சயம் கிடைக்கும். சிங்களவரோடோ தென்பகுதி முஸ்லிம்களோடோ அல்லது தனித்தோ போகும் அதிகாரமுள்ள வடகிழக்கு முஸ்லிம் அலகுகள் பற்றி முஸ்லிம்கள் முடிவெடுக்க வேணும். அத்தகைய முஸ்லிம்களின் முடிவுக்கும் போராட்டத்துக்கும் நிச்சயம் எனது ஆதரவிருக்கும். போர்காலத்தில் முஸ்லிம்கள் பற்றி தமிழர் முடிவெடுக்கக்கூடாது என துப்பாக்கிகளுக்கு அஞ்சாமல் குரல்கொடுத்தன் நான். அதே நாவால் தமிழர் பற்றி முஸ்லிம்கள் முடிவெடுக்கலாம் என எப்படி சொல்வேன்? வடகிழக்கு முஸ்லிம்கள் தாங்கள் தமிழரோடு இருப்பதா சிங்களவரோடு சேருவதா தனித்துப்போவதா என முடிவெடுத்துப் போராடும்போது நிச்சயம் முஸ்லிம்கள் பக்கமே நான் இருப்பேன்.

இருந்து பாருங்க அண்ணே! அந்த பிக்கு ரத்தின தேரரரே நீங்கள் எதிர்பார்க்கும் வட கிழக்கு இணைப்புக்காக வேண்டி ஒரு நிபந்தனையுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார். புத்தரின் சிலைகளை இந்துக் கோயில்களில் வைக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும். இந்துக்களின் நல்லெண்ணத்தை தேரர் பிழையாக விளங்கிவிட்டார் என நினைக்கின்றேன்.

ஐயா !. தயவு செய்து உங்கள் கருத்துக்களை உங்களுடன் மாத்திரம் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நினைப்பது போன்ற முஸ்லிம்கள் உங்கள் காலத்தில் இருந்திருக்கலாம் . இப்பொழுது உள்ளவர்கள் உடல் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாத வெறி ஏற்றப்பட்டவர்கள். இந்த இனைய பக்கத்தில் எப்படியெல்லாம் கேவலமாக /இழிவாக கீழ்த்தனமாக செய்திகளை/பதிவுகளை வெளியிடுகிறார்கள். உங்களுக்கு எல்லாம் வெட்கம் ,மானம் ரோசம் எதுவுமே இல்லையா ?. முஸ்லிம்களுடன் இனி எந்த ஒரு காலத்திலும், சந்தர்ப்பத்திலும் தமிழர்கள் இணைந்து செயற்படுவதென்பது சாத்தியமே இல்லை . சிங்களவர்கள் எமது எதிரி தான் ஆனால் முஸ்லிம்கள் உலகின், மனித குலத்தின் மனித நாகரீகத்தின் எதிரிகள்.

இணைப்பு மீண்டும் இலங்கைக்கு வெளியில் தீர்மானிக்கபடுகிற சூழல் உருவாகி வருகிறது. என் சொந்த விருப்பம் -அதிகாரமுள்ள மாவட்ட மட்ட தமிழ் முஸ்லிம் அலகுகள் தீர்மானங்களை எடுக்கும் வகையில் - வட கிழக்கு மாவட்ட ஆட்சிகளின் தொகுப்பாக வடகிழக்கு மாநில அரசு அமைய வேண்டும் என்பதுதான். அல்லது தமிழ் அலகுகள் முஸ்லிம் அலகுகள் என பிரிய வேண்டும். மற்றபடி ரத்தின தேரர் உண்னாவிரதம் இருந்தாலென்ன ஜனாதிபதி குடைபிடித்தாலென்ன. எனக்கு அக்கறையில்லை;

Post a comment