Header Ads



இஸ்லாம் பாட நூலுக்கு எதிராக, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

பாடசாலை இஸ்லாம் பாட நூல்களில் உள்ள அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான விபரங்களை நீக்குமாறு கோரி, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த தகவல் கேந்திர நிலையமும், சிங்கலே அமைப்பும் இந்த முறைப்பாட்டை இன்று -24- பதிவு செய்துள்ளன.

முஸ்லிம் மதத்திலிருந்து மாறுகின்றவர்களையும், முஸ்லிம் அல்லாதவர்களையும் கொலை செய்து தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் சமய பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அண்மையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேறிய நபர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்தினை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலை மட்டங்களிலேயே பயங்கரவாதம் போதிக்கப்பட்டு வந்துள்ளது எனப் பிக்குகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனைத் தடுத்து நிறுத்த கல்வி அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

1 comment:

  1. இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ளவைகள் கட்பித்து கொடுத்ததும் பாடப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதில் எந்தவிதமான தவறுமில்லை உதாரணமாக இஸ்லாமிய நாடுகளில் களவெடுத்தால் கை வெட்டப்படும்,மது அருந்தினால் கசையடி இவைகள் மாணவர்கள் தெரிந்துவைத்து இருப்பது எல்லோருக்கும் நல்லதே ஆனால் மேலே சொன்ன சட்டங்கள் இலங்கையில் அமுல் செய்யமாட்டாது மாறாக அவை முஸ்லீம் நாடுகளில் மட்டும் தான் அமுல் செய்யப்படும் உதாரணமாக அரபு நாடுகளில் இன்றைய மாணவர்கள் தான் நாளைக்கு ஏதோ ஒருவழியில் அங்கு தொழிலுக்கு சென்றால் மேல்சொன்ன சட்டங்கள் தெரிந்து அதனடிப்படையில் நல்லவர்களாக வாழபழகி கொள்வார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.