Header Ads



தற்கொலை தாக்குதல் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் அல்ல, பிரபலமான அரசியல்வாதியாக இருக்கலாம்

ஈஸ்டர் ஞாயிறு தினம் இலங்கையில் பல இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் தொடர்பான பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹசீம் அல்ல எனவும் அது பிரபலமான அரசியல்வாதியாக இருக்கலாம் எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை கண்டறிய பக்கசார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்ய மக்கள் காத்திருக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமையும் புதிய அரசாங்கத்தின் கீழ் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்த அனைவருக்கும் தகுதிதராதரம் பாராது தண்டனை வழங்கப்படும் எனவும் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. நீங்க சொன்னா சரியாக இருக்கும் சார்......

    ReplyDelete
  2. ஆம் நிச்சயமாக. ராஜபக்ஷே குடும்பத்திலும் அவருடன் கேவலம் கெட்ட அரசியல் நடத்தும் அடிவருடிகளிலும் நிச்சயமாக இருப்பார்கள்.

    ReplyDelete
  3. Bullshit Why waiting until after Election. What the hell you all culprit politician did/can do/?
    01. Did you all put inside JAIL, Mahinda Rajapaksa
    02. Did you all put inside JAIL, Gothabaya
    03. Did you all put inside JAIL, Nimal Weerawans
    04. Did you all put inside JAIL, Thief Ravi K
    05. Did you all put inside JAIL,Ranil Wikramasingha

    How many politicians are inside JAIL NOW?
    “DIRTY POLITICS “

    ReplyDelete

Powered by Blogger.