June 30, 2019

ஜம்மியத்துல் உலமா தலைவராக றிஸ்வி முப்தி, தொடர வேண்டுமென உலமாக்கள் விருப்பம்


- AAM. Anzir -

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவராக, றிஸ்வி முப்தி தொடர வேண்டுமென மூத்த உலமாக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜம்மியத்துல் உலமாவின் முக்கிய பதவி வகிக்கும் ஒரு மூத்த உலமா Jaffna Muslim இணையத்திடம் தமது கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

மொழி ஆற்றல், ஆளுமை, வாதத்திறமை, மார்க்க அறிவு,  அனுபவம், நெருக்கடி நிலைகளில் நிதானம் தவறாமை உள்ளிட்ட பல தகுதிகளைக் கொண்ட ஒருவரே றிஸ்வி முப்தி.

தலைமைத்துவம் வகிக்க, தகுதியான நபரும் றிஸ்வி முப்தியே. கடந்த காலங்களில் அவர் மிகச்சிறப்பான முறையில் சேவையாற்றியிருந்தார். 

அவர்   ஜம்மியத்துல் உலமாவின் தலைவராக தொடருவதே, காலத்திற்கு பொருத்தமானதாகும். உலமா சபைக்குள்ளும் இவ்வாறான ஒரு நிலைப்பாடே காணப்படுகிறது.

அந்தவகையில் தற்போதுள்ள நெருக்கடியான நிலையில்,  ஜம்மியத்துல் உலமாவின் தலைவராக றிஸ்வி முப்தி தொடருவதையே தாம் உள்ளிட்ட மூத்த உலமாக்கள் விரும்புவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 14 ஆம் திகதி உலமா சபையின், நிர்வாகத் தெரிவு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 கருத்துரைகள்:

றிஸ்வி முப்தியைவிட்டால்
வேறு தகுதியான உலமாக்கள் இல்லை என்பது
உலமாக்களுக்கு மட்டுமண்றி முழுநாட்டுக்குமே கேவலம்

ஜாஹிலிய்யத் என்று கூறுவதா அல்லது மடையர்கள் என்பதா? jafna முஸ்லிமுக்கு கருத்தை பகிர்ந்து கொண்டவரும் மற்றும் இவர் போன்றவர்களும் நிர்வாகத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என்பதை அன்புடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்

அப்படி என்றால் எங்கள் சமூகத்தில் ஒருவர் மாத்திரம் தான் தலைவராவதற்கு தகுதியாக இருப்பதாக அர்த்தம். இவருக்கு சிங்களத்தில் என்ன மொழி ஆற்றல் இருக்கிறது. மூத்த உலமாக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எந்த ஜமாத்தை சேர்ந்தவர்கள்??

ஆமாம் கண்டிப்பாக தொடர வேண்டும் அடுத்த தேர்தலில் கோட்டா வந்தால் ஐநாவுக்கு போய் வக்காலத்து வாங்க வேண்டுமே தலைவராக தொடர்ந்து ஒருவர் இருந்தால் அது பிரச்சினை தான் கண்டிப்பாக அவரை அடுத்த முறை பரிந்துரை செய்யக் கூடாது அதற்கு அவர் தகுந்தவரும் இல்லை சுழற்சி முறையில் தலைவர்கள் வர வேண்டும் இல்லை என்றால் தலைக்கணம் வந்துவிடும் அதோடு கூடிய உலக ஆசையும் வந்து விடும்

அப்ப இந்தத் திறமைகளெல்லாம் இலங்கையில் கொண்டுள்ள ஒரேயொரு உலமா அவர் மட்டும்தானா? மற்றவர்களிடம் இல்லையா? அதிகமான மக்களின் விருப்பம் புதிய தலைவர்தான்.

correct person is Agar sir for next president

மாஷா அல்லாஹ், ஜஸாக்கல்லாஹ், நாங்களும் இதைத்தான் விரும்புகின்றோம், அல்லாஹ்வின் மீது ஆதரவு வைப்போம். இலங்கைவாழ் முஸ்லீம்களும் இதனையே விரும்புகிறார்கள்.
நாம் அவரை நேசிப்பதெல்லாம் அவர் அல்லாஹ்வின் தீனுக்குச் செய்யும் பணிவிடைக்காக அன்றி வேறு எதற்காகவும் அல்ல. இதுதான் எங்களின் தெளிவான முடிவு.

அதுதான் இனவாதிகளின் விருப்பமும் கூட

பழைய குருடி கதவை திறடி.srilankan Muslims will never change.

முகம் மூடுதல், ஹலால், முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் போண்ற பல விடயங்களில் தூர நோக்கு அற்ற அவரின் நிலைப்பாடு சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தலைவர் மாறி இன்னொருவருக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்பதே காலத்தின் தேவை என நினைக்கிறேன்.

இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
முதல் காரணம் தலைவர் ஒருவருக்கு உரிய காலம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும், இந்த விடயத்தில் முப்தி அவர்கள் இரண்டு தசாப்தங்களையே நெருங்கி விட்டார்.

புதிய தலைவர் மற்றும் தலைமை நாட்டிலும், முஸ்லிம் சமூகத்திலும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

புதிய தலைவருக்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள தடைகள் குறைவு, மற்றும் சத்தியப் பாடுகளும் அதிகம்.

பல்துறை நிபுணத்துவம் வாய்ந்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்.

ஜனநாயக பண்பு இல்லை என்ற விமர்சனம் ஏற்படாமல் தடுக்க தலைவர் மற்றும் தலைமை மாற வேண்டும்.

முப்தி அவர்களின் நீண்ட கால பணியில் அவருடன் ஒட்டி இருந்து பிழைப்பு நடத்தியவர்கள், முன்னேற்ற பாதையில் தடையாக இருந்தவர்கள், புல்லுருவிகள் என பலரும் நீக்கப்பட வேண்டும் அதற்கான சந்தர்ப்பமும் இதுவாகும்.

இன்னும் பல காரணங்கள் நிமித்தம் தலைவர் மற்றும் தலைமை மாற்றம் தேவை என்பது எனது தாழ்மையான கருத்து.

மொழி வளமிக்கவர், பெரும் அறிவாளி, மற்றவரகளை மதிக்கத் தெரிந்தவர், சீரிய முறையினில் கடுப்பான விடயங்களையும் விளக்கமாக தெளிவுடன் மக்களுக்கும் அறிஞர்களுக்கும் சிறப்பாக எடுத்துக் கூறக்கூடியவர் இன்னும் பல விடயங்கள் ஜம்மியாவின் தலைமைப் பதவியைப் மீண்டும் பெற இவரகளுக்கு உதவினாலும் கடந்த காலங்களில் தலைமைத்துவத்தை ஒழுங்காகச் சிறப்பித்தார் என்ற முடிவுக்கு உலமாப் பெருந்தகைகள் வந்தால் தலைமையை அவர்களுக்கே கொடுத்து விடுங்கள். நாங்கள் வழிகாட்டிகள் அல்ல. வழிகாட்டக்கூடியவன் சீராக வழிகாட்டுவான். இன்ஷா அல்லாஹ்.

My comments did not publish yet..
Wt a terrible action JM.

Do not any person attached any group. It would be disaster. No to Rizwi M ,Agar M
.....we need new face .

May thableeq sheezevis only want him back!

இவ்வளவு காலமும் இந்த Mufti சிறப்பாக செயல் பட்டதன் விளைவுதான் இன்று முஸ்லீம்கள் சகலத்தையும் இழந்து பௌத்த பயங்கரவாதத்துக்கு அடிமையாக்கப்பட்டுளோம். இன்னும் மிஞ்சி இருப்பதையும் இல்லாமல் ஆக்கிக்கொள்ளவேண்டுமென்றால் இந்த யூசுப் பச்சோந்தியை தலையில் தூக்க வையுங்கள்.

அல்ஹம்துலில்லாஹ் உண்மைலேயே ரிஷ்வி முப்த்தி அவர்களே தலமை பொருப்பிள் தொடர வேண்டும் அது தான் சிறந்தது தலமை மாற வேண்டிய அவசியம் எதுவும் இல்லை இப்போது ரிஷ்வி முப்த்தி சிறந்த தலைவர்

ரிஷ்வி முப்தியே தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து

"The Muslim Voice" did not wish to make any comments on this news item. Because "The Muslim Voice" believes that only God AllMighty Allah can decide whether Rizvi Mufthi will be the next President of the ACJU or NOT. "The Muslim Voice" has been praying God AllMighty Allah every day and asking "DUA" that the Leadership of the ACJU has to change for the betterment of the Sri Lanka Muslim Community.
"The Muslim Voice" is only trying to kindle the "aspirations and ispirations" of the Muslim community and the 3500 odd Moulavis and Uleama Members of the ACJU concerning the ACJU and Rizvi Mufthi in order to bring about a change and create a new "honest and dignified culture" within in the Sri Lanka Muslim Community. "THE MUSLIM VOICE" WISHES TO KEEP THISE ISSUES WITHIN OUR SELVES/OUR COMMUNITY AND GOING TO THE POLICE TO MAKE COMPLAINTS AS SUGGESTED BY SOME CONCERNED MUSLIMS IN THESE COLUMS WILL COMPLICATE MATTERS FOR ACJU AND RIZVI MUFTHI. LOOK AT THE QUESTIONS RAISED AT THE PSC AND THE TV REGARDING THE TYPES OF EXPENSIVE VECHILES USED BY OUR ACJU MOULAVIS? LOOK AT THE QUESTIONS RAISED REGARDING THE WEALTH AND LIFESTYLE OF THIS ULEMA LEADER IN TV TALK SHOWS AND NEW/WEB NEWS OUTLETS.
"THE MUSLIM VOICE" has been asking "DUA" from God AllMighty Allah after every daily prayers and Jumma's since the manner in which the so-called Mufthi Rizvi, the incumbent president started to flirt with politicians and made a "MOCKERY" of the "HALAL ISSUE" to amaze millions of rupees for his personal gains and benefits with the support of "DECEPTIVE/MUNAAFIK" and "HOODWINKING" Muslim politicians and some professionals. The ACJU and Rizvi Mufthi has still NOT answered the question raised by “The Muslim Voice” regarding their relationship with the Mahinda Rajapaksa regime during 2005 -1015. The ACJU received a large block of land in Colombo 12 from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda.
The ACJU and Rizvi Mufthi should answer the questions raised by “The Muslim Voice” before talking about other matters. “The Muslim Voice” has been asking this/these questions many times before this too. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has “DEFAULTED” nearly 2 million Muslims in Sri Lanka, especially with regards to the pig oil presence certification of the imported and distributed/marketed milk powder in Sri Lanka. The ACJU-The Halal Accreditation Council (Guarantee) Limited has commited the “BIGGEST CRIME” under “ISLAMIC FAITH/BELIEF” of committing the Muslims using these Milk poder to “HARAM” a religious crime that cannot be pardoned, except with the mercy of God AllMighty Allah. PLEASE KINDLY NOTE THAT THE ADVICE GIVEN BY THE ACJU/RIZVI MUFTHI TO THE MUSLIM MINISTERS, DEPUTY MINISTERS AND STATE MINISTERS HAS PLUNGED OUR COMMUNITY INTO GREAT POLITICAL AND COMMUNITY DISASTER. The Muslims in Sri Lanka need a "CHANGE" to the Leadership of the ACJU and our Political institutions, Insha Allah.
Noor Nizam – Convener “The Muslim Voice”.

Post a Comment