Header Ads



முஸ்லிம் அமைச்சர்களின் பிரச்சினை தீர்வு காணமுன், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும்

முஸ்லிம் அமைச்சர்களின் பிரச்சினை தீர்வு காணும் முன்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

எத்துல்கோட்டே விக்ரமசிங்க பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள அரசசார்பற்ற உயர் கல்வி பிரிவுக்கு இன்று -18- விஜயம் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசும் போதே ரதன தேரர் இதனை கூறியுள்ளார்.

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் கூறுவது போல், அவர்களின் பிரச்சினைக்கு இரண்டு மாதங்களில் பதிலளிக்க எந்த தரப்பும் கடமைப்பட்டிருக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆகின்றது. எனினும் அதில் சிக்கியவர்களுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வை தேடாமல், நாட்டிற்குள் நடந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அத்துரலியே ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. நாட்டின் பிரச்சினையோ அன்றி முஸ்லிம் அமைச்சர்களின் பிரச்சினையோ தற்போது மிக முக்கியமல்ல. ரத்ன தேரரின் பிரச்சினையே மிக மிக முக்கியமானதாகும் அவரது பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதத்திற்கு சென்றுவிடுவார். ஜாக்கிரதை.

    ReplyDelete
  2. Mr. monk of Rathna Thero, you should marry soon and getting more own children's for your self and earn much money for your respective life thereafter spend your money for your society powerty people later you come to political life then you know how is going on our country people's lives. It's didn't do your life why you are living this world. Go through to jungle or death your self. We are salute and respect our nation. We are devoloper our nation please give us to live my country without any problems we didn't ask any inch of land got seperate. These is Allah's earth any bloodys are getting down anyonce whole fully property owner Allah Only. mind it monk

    ReplyDelete
  3. RATNA TERAUDAYA KIDNEY
    PAZIPPADAYUM GLYPHOSATE,NADAHATHUKKU,
    ENNA NADANDUZU.

    ReplyDelete
  4. Iwarum point a pudichittaru.....so yaanasera konjam yosippaaru...awarda demaand aa

    ReplyDelete

Powered by Blogger.