Header Ads



முஸ்லிம் இனத்திற்கும், மதத்திற்கும் எதிராக எவ்வித வன்மங்களும் கட்டவிழ்த்து விடப்படவில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி விலகி பலமான தலைமைத்துவத்தை மக்கள் விரைவாக தெரிவு செய்ய இடமளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

 ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பாரிய கருத்து வேறுப்பாடுகள் தற்போது காணப்படுகின்றமை ஒன்றும் புதிதல்ல, ஆரம்பத்தில் இருந்து இவ்விருவரும் அதிகார போட்டிக்கமைய  முரன்பட்டுக் கொண்டமையின் விளைவாகவே தேசிய பாதுகாப்பு  இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. 

இவ்விருவரும் தங்களின் தனிப்பட்ட  பிணக்குகளை தீர்த்துக் கொள்வதற்கு  மக்களையும்,  நாட்டின் எதிர்காலத்தையும் பகடையாயாக்குவது ஏற்றுக் கொள்ள முடியாது.

முஸ்லிம் இனத்திற்கும், மதத்திற்கும் எதிராக அரசியல் அழுத்தங்கள்  காணப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் இணைந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.   

தற்போது முஸ்லிம் இனத்திற்கும், மதத்திற்கும் எதிராக எவ்வித வன்மங்களும் கட்டவிழ்த்து விடப்படவில்லை. மத போர்வையில் மதத்திற்கு அப்பாற்பட்டு  நல்லிணக்கத்துடன் வாழ முற்படும்  முஸ்லிம் மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள   அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிராகவே  நடவடிக்கைகள் முறையாக இடம்பெறுகின்றன என்பதை தெளிவாக புரிந்துக் கொள்வது அவசியமாகும் எனவும் குறிப்பிட்டார். 

2 comments:

  1. Mr...then what about Minuwangoda ? Muslim's shops, houses, Worshipping plcaces burnt by nature ?

    Lying is the norm of politicians... BUT world has seen all the evidences .. Do not lye any more to expose yourself.

    Invest in Peace.. Let us love for it.

    ReplyDelete
  2. You all are ignorant. During that period, thousands of foreigners like British, Americans, Belgians and many more came to these places and burnt the assets of Muslims to ashes.

    ReplyDelete

Powered by Blogger.