Header Ads



ருகுணு பல்கலைக்கழகத்தில், பாலியல் ரீதியாக பகிடிவதை - உப வேந்தரே ஒப்புக்கொண்டார்

ருகுணு பல்கலைகழகம் என்பது பகிடிவதைக்கு பெயர் போன ஒரு இடம் என பல்கலைகழகத்தின் உப வேந்தர் காமினி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். 

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற ருகுணு பல்கலைகழகத்தின் ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலேட்டமாக மாத்திரம் பார்த்து பகிடிவதையை இல்லாமல் ஆக்கவே அல்லது அது தொடர்பில் புரிந்து கொள்ளவே முடியாது என அவர் தெரிவித்துள்ளார். 

பல்கலைகழக மாணவர்கள் ஒரு வருட காலத்திற்கு பகிடிவதை செய்வதாகவும் இதன்போது புதிய மாணவர்களை ஆர்ப்பாட்டங்களிற்கு அழைத்து செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

புதிய மாணவர்கள் எத்தனை பேர் ஆர்ப்பாட்டங்களிற்கு சென்று விரிவுரைகளுக்கு காலதாமதமாக வருகின்றனர் என்ற அனைத்து தரவுகளும் தன்னிடம் இருப்பதாக தெரிவித்த அவர், சிரேஷ்ட மாணவர்கள் யாரும் ஆர்ப்பாட்டத்திற்கு செல்வதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

புதிய மாணவர்கள் பலவந்தமாக இவ்வாறான செயற்பாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 

பகிடிவதைக்காக பல்கலைகழகத்தில் அறை ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவித்த அவர், புதிய மாணவர்கள் பாலியல் ரீதியாகவும் பகிடிவதை செய்யப்படுவது தொடர்பில் தான் கண்டுபிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

தான் குறித்த இரும்புக் கதவுகளை உடைத்து உள்ளே சென்றதாகவும், அப்பகுதிக்குள் 15 வருடங்களான எந்தவொரு பேராசிரியரே அல்லது பாதுகாப்பு பிரிவினரே சென்றதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.