Header Ads



"பாவற்காய் பந்தலில் விழுந்த புழு, பாவற்காய் கொடியை அழிப்பது போல"

நாடு எந்தளவுக்கு வீழ்ச்சியடைந்தாலும் அரசாங்கத்தை கைவிட ஐக்கிய தேசியக் கட்சி தயாரில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -18- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் புகைத்தல் மற்றும் மதுபான பாவனை குறைக்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விருதும் வழங்கப்பட்டது. ஜனாதிபதி இம்மியளவும் மதிக்காத நிதியமைச்சர் சீனாவில் இருந்து சிகரட்டை இறக்குமதி செய்ய முயற்சிக்கின்றார்.

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து அமைச்சர் ராஜித சேனாரத்ன அணி மாற முயற்சித்து வருகிறார். சிகரட் இறக்குமதியை நிறுத்தாவிட்டால், அமைச்சர் பதவியில் இருந்து விலக போவதாக ராஜித கூறிள்ளார்.

கப்பல் மூழ்க போகின்றது என்று அறிந்துக்கொண்டு தவளை குதிக்க பார்க்கின்றது. இப்படியான தவளைகளை எமக்கு தெரியாது. பாவற்காய் பந்தலில் விழுந்த புழு பாவற்காய் கொடியை அழிப்பது போல் ராஜித தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும்.

எந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போகிறார் என்ற பெரிய பிரச்சினை அரசாங்கத்திற்கு இருந்தது. ராஜபக்ச குடும்பத்தில் போட்டி நிலவுவதாக அவர்கள் கூறினர்.

எந்த போட்டியும் இன்றி ஒரே பயணத்தை நாங்கள் மேற்கொள்வோம். கரு ஜயசூரிய தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகி வருகிறார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தயாராகி வருகின்றனர்.

அஜித் பீ. பெரேரா உட்பட சிலர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று கூறுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய முடியாத நிலையில் உள்ளது.

அவர்கள் வேட்பாளரை தெரிவு செய்யும் போது ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு மூன்றாக உடையும் எனவும் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.