June 19, 2019

முஸ்லிம்களை கல் அடித்து கொல்ல வேண்டுமென்ற, பிக்குவுக்கு மங்களவின் செருப்படி பதில்

பௌத்த தர்மத்தை தாலிபான் மயமாக்கப்படுவதற்கு எதிராக உண்மையான பௌத்தர்கள் ஒன்றிணைய வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய மாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள குறிப்பில் மங்கள இதனை குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மதம் என்பது அனைத்து நபர்களுக்கும் அன்பு மற்றும் அமைதியை போதிக்கும் உன்னதமான தர்மம் எனவும் எந்த பௌத்தனும் மற்றுமொரு நபரை கல்லெறிந்து கொள்ளுமாறு கூற முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிங்­க­ள­வர்கள் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­களைப் பகிஷ்­க­ரி­யுங்கள். முஸ்லிம் கடை­க­ளுக்குச் செல்­லா­தீர்கள். அந்தக் கடை­களில் உண்­ணவோ, அருந்­தவோ வேண்டாம்’ என கண்டி அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்க தேரர் வரக்­கா­கொட ஞான­ரத்ன தேரர் அறை கூவல் விடுத்­துள்ளார்.

கண்டி, யட்­டி­நு­வர, திய­கெ­லி­னாவ கித்­சி­ரி­மெவன் ரஜ­மகா விகா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில் தெரி­வித்­த­தா­வது;

“முஸ்­லிம்கள் சிங்­கள மக்­களை அழிப்­ப­தற்கு எடுத்த செயற்­பா­டுகள் இப்­போது வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன. சிங்­கள மக்கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும். சிங்­கள பெண்­க­ளுக்கு கருத்­தடை சத்­திர சிகிச்சை செய்த முஸ்லிம் டாக்டர் ஒருவர் தொடர்பில் ஊட­கங்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யுள்­ளன. அந்த முஸ்லிம் டாக்­டரை கல்­லெ­றிந்து கொல்ல வேண்­டு­மென பலர் என்­னிடம் கூறி­னார்கள்.

இவ்­வா­றான இனத்­து­ரோ­கி­களை சுதந்­தி­ர­மாக விடக்­கூ­டாது என சீலம் இருக்கும் (சில்) பெண்கள் என்­னிடம் கூறி­னார்கள். அவரை கல்லால் அடித்­துக்­கொல்ல வேண்டும் என்­றார்கள். நான் அப்­ப­டிக்­கூற மாட்டேன். ஆனால் செய்­யப்­பட வேண்­டி­யது அதுதான்.

9 கருத்துரைகள்:

Sri lanka goverment should avoid Islamic countries petrol oils and funds.

அப்போ அவர் கூட வேலை செய்த தாதியர்,வைத்தியர்கலை என்ன செய்ய வேண்டும் என கூறவில்லையே

வானத்தைப் பார்த்து உமிழ்கிறார்கள்

பதவி ஆசை கொண்ட பௌத்த சின்ஹல தலைவர்கள், வரலாறு நெடுகிலும் தமிழர்களை அழிக்க முஸ்லிம்களையும் முஸ்லிம்களை அழிக்க தமிழர்களையும் பயன்படுத்தியுள்ளனர்.
தங்களது ஆடம்பர வாழ்க்கை, அதிகாரம், ஆணவம், சண்டித்தனம், போன்றவற்றைக் காப்பாற்ற இதைத்தவிர வேறு வழியற்றவர்கள் பாவம்!
இதே ஆசையை துரும்பாக பெற்று, நமது நாட்டை அடித்து விழுங்கி விட புலிகள், சிங்கங்கள், கொடூர காட்டு மிருகங்களால் மிக மோசமாக நாம் இலங்கையர்கள், சுற்றி வளைக்கப்பட்டுள்ளோம். ஒரு நாள் சிங்கள தமிழ் முஸ்லீம் எல்லோரும் அவர்களால் அடிமையாக்கப்படுவோம். பாவம் நாங்கள்,

வானத்தைப் பார்த்து உமிழ்கிறார்கள்
இதை உணர்வார்களா இன வெறி பிடித்த, 500 க்கும், ஒரு போத்தலுக்கும் நாட்டையே தீமூட்டுபவர்கள்?
இவர்கள் சிந்தித்து புரிந்து கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.
அசல் வெல்லும், போலித் தோற்றங்களும் விம்பங்களும் கானல் நீராகிப்போகும்.
மறக்காதீர்கள், பயம் கொள்ள வேண்டாம்
பொறுமை தொழுகை
உதவி கேட்கலாம் படைத்தவனிடம். 1௦௦% …. நம்பியவர்களைக் கை விடமாட்டான்

kooda velai seytha thaadhiyar vaithiyargal muslimaaga irundhirunthaal udane kaithu seythiruppaargal

இதில் வேடிக்கை என்னவென்றால் இனவாதிகளுக்கு எதிராகவே நல்லாட்சி அரசு கொண்டுவரப்பட்டது ஆயினும் இனவாதிகளுக்கு எதிராக ஐனாதிபதியினாலும் பிரதமராகவும் எடுக்கப்பட்ட நடவடிகைகள்தான் என்ன?

இதில் வேடிக்கை என்னவென்றால் இனவாதிகளுக்கு எதிராகவே நல்லாட்சி அரசு கொண்டுவரப்பட்டது ஆயினும் இனவாதிகளுக்கு எதிராக ஐனாதிபதியினாலும் பிரதமராகவும் எடுக்கப்பட்ட நடவடிகைகள்தான் என்ன?

பௌத்த மதம் சரியாகத்தெரித்தவர்கள் அந்த தேரருக்கு அம்மதம் பற்றி விளக்கினால் என்ன?

PEYARALAWIL MAHAAAA NAYAKA.
BOUTHA MAZATHAI SHARIAHA
PADITHAWARTHAN.
AANAL THUVESAM INNUM, MANAZIL
VEROONRI IRUKKIRAZU. AVANAI
ARIAMALEI
POONAIKUTTI PAI IL IRUNDU,
WELIYE PAAINDAZU,
IZUVARAI ELLA SAMBAVANGALUKKU PINNALUM
YAAR IRUNDIRUKKIRARHAL, ENBAZU PULAPPADUHIRAZA????

Did Holy Buddah wherever tell to stone on anybody? YES / NO

Post a comment