June 07, 2019

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியமையானது, நடுநிலையான முஸ்லிம்களை ஆபத்தில் தள்ளியுள்ளது

ரிசார்ட் பதியுதீன் கடந்த காலங்களில் விளைச்சிகுளம் காட்டுப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து உருவாக்கியுள்ள முஸ்லிம் கிராமங்களில் வஹாபிசா பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வீடுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனால், பதியுதீனை உடனடியாக கைது செய்து, சட்டத்திற்கு முன் நிறுத்த இந்த விடயம் போதுமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உதயசாந்த குணசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், ரிசார்ட் பதியுதீன், ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகிய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடும் மக்கள் எதிர்ப்பு ஏற்பட்டது. இவர்கள் வஹாபிச பயங்கரவாதத்தை பரப்பிய பயங்கரவாதிகளை பாதுகாத்த குள்ளநரிகள் என்பதே இதற்கு காரணம். இவ்வாறான குற்றச்சாட்டை எதிர்நோக்காத முஸ்லிம் அமைச்சர்கள் எதற்காக பதவிகளில் இருந்து விலகினர்.

கூட்டாக அறிக்கையிட்டு, பொறுப்புடன் நடந்துக்கொள்ள முஸ்லிம் அமைச்சர்களுக்கு சந்தர்ப்பங்கள் இருந்தன. அதனை செய்யாது, சிறப்புரிமைகளை அனுபவித்துக்கொண்டு காலத்தை கடத்தினர்.

மாவனெல்லையில் புத்தர் சிலைகளை உடைத்தவர்கள் சம்பந்தமாக பொலிஸாருக்கு தகவல் வழங்கிய கபீர் ஹாசிமின் இணைப்புச் செயலாளரை வஹாபிச பயங்கரவாதிகள் சுட்டனர். வண்ணாத்துவில்லு பிரதேசத்தில் வெடி பொருட்களுடன் வஹாபிச பயங்கரவாத முகாம் கண்டுபிடிக்கப்பட்டது. ஏப்ரல் 21 ஆம் திகதி வஹாபிச பயங்கரவாதிகளின் தாக்குதலில் 400 மேற்பட்டோர் கொல்லப்பட்ட போது, இந்த முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகவில்லை. கூட்டாக அறிக்கையிடவும் இல்லை.

எனினும் வஹாபிச பயங்கரவாதிகளுக்கு பாலூட்டிய ரிசார்ட் பதியுதீனை காப்பாற்ற முஸ்லிம் அமைச்சர்கள் அவருடன் இருந்துக்கொண்டு பதவி விலகியமையானது, சிங்களம், தமிழ் மக்களை மாத்திரமல்ல, நடுநிலையான முஸ்லிம் மக்களையும் ஆபத்தில் தள்ளுவதாகும்.

சஹ்ரான் மற்றும் ரிசார்ட் பதியுதீன் இணைந்து நாட்டின் முழு முஸ்லிம் சமூகத்தையும் வஹாபிச பயங்கரவாதத்திற்குள் தள்ளினர். ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம் உட்பட 19 முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் இனத்தின் முடிவு எனவும் உதயசாந்த குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

10 கருத்துரைகள்:

இவன் ஒரு யானையைப் பார்த்த குருடன்

சரியான தகவல், மற்றும் விடயங்கள் தெரிந்தவர்கள் கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகர அவர்களுக்கு உண்மை தகவலை சொல்லுங்கள் ஏன் என்றால் அவரது குற்றச்சாட்டு தகவல்களில் ஒன்றான 21 ஆம் திகதிய பயங்கரவாத தாக்குதலில் 400 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் தகவல் பற்றி அரசாங்க அறிக்கையில் குறிப்பிடப்படவில்லையே இலங்கை மக்கள் தகவல் அறிவதில் மிக தெளிவாக உள்ளனர்.

Unnapola mediala pesura 4.per wanthutta intha naadu poolohamthaan....neeyellaam.naattu patru...
Muslim makkalin udamayhala naasamaakkiye neram ungalaala 1 arikkay uda naadhi illa..ippo itha mattum ennada thonduringa.....

உங்களுக்கு குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க ரிசாட் அவர்கள் ஆதரவு தரவில்லை.இதுதான் உங்களுக்கு உள்ள மிகப் பெரும் கோபம் என்பது முழு நாட்டுக்கும் தெரியும்.நீங்கள் கனவிலும் நினைக்கவில்லை Muslim அரசியல் வாதிகளின் ஒற்றுமையை.அதிர்ச்சியில் புலம்புவதை பெரும்பாண்மையான மக்கள் பார்த்து சிரிக்கிறார்கள்

Thank you for this info.. Wimala Hapana.. Rishad illa enru sonna mattum than niroopippeenga.. appadi thane? Good try..

கையாலாகாத அரசியல் அனாதைகள், மட்டுமல்லாது பொண்ணையர் கூட்டம் கூச்சல் போடுகிறது.

He is talking nonsense lol

Poda panni, mulu Muslimkalin ottumai Singala payangaravathihalukkum,pasisa motta panni halukkum vayitthil puliyai karaitthu vittathu, mokku modayarhala 100 veetha muslim makkalum engalathu arasiyal thalaimaihalum etthani thadavada solhiroam. engalukkum engal arasiyal thalaimaihalukkum antha payangara vathiyana Sahran(Hukapalla) vukkum entha vitha sampanthamum illai enru. Antha nayai uruvakkinathu aatchiyai kavilka ninaikkun Singala perinavatha, Nattai kollayaditthu seeralittha arasiyal pannihalum intha nattai nesikkatha Singala thuravihalume karanam ithu ungalukku Mulumaiyaha therinthum eanda engalai aniyayamaha vambukku ilukkihireerhal.

SHUMMA SHATHAM POTTU, WILAMBARAM THEDAMAL, ÀWANANGALUDAN POY, MURAPADU SHEIYA WENDIYA IDATHIL, MURAIPADU SHEIYAVU.

Post a Comment