Header Ads



றிசாத் பதியுதீன் பயங்கரவாத செயற்பாடுகளுடன், தொடர்புபட்டிருப்பார் என்று நான் நினைக்கவில்லை - பஸில்

றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழு ஆதரவையும் வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் பிரதிநிதியாகவே அமைச்சர் றிசாத் பதியுதீனை நாங்கள் பார்த்தோம். அவருக்கு நாங்கள் உதவி செய்யவில்லை. இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களுக்கே உதவினோம்.

தனிப்பட்ட நபர் குறித்து இங்கு எந்தப் பி்ரச்சினையும் இல்லை. மனிதர்களை நாம் மதிப்பிடுகின்றோம். ஆனால் இந்த அரசாங்கம் என்ன செய்தது என்பதனை பார்க்க வேண்டும்.

அதாவது இந்த அரசாங்கம் தனி நபருக்கு உதவி செய்ததா அல்லது மக்களுக்கு உதவி செய்ததா என்பதனை பார்க்க வேண்டும்.

அமைச்சருக்கு செய்த உதவிகள் தொடர்பில் பட்டியல் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நான் தற்போது பாராளுமன்றத்தில் இல்லை. அதனால், இந்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பேச விளையவில்லை.

எனினும் றிசாத் பதியுதீன் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

ஆனால் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாகவே குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும். அவர் எம்மிடம் இருந்து பிரிந்ததை நாங்கள் அரசியல் விடயமாகவே பார்க்கின்றோம்.

அதன்படி அரசியல் ரீதியில் அவர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும்" என்றார்.

2 comments:

  1. உங்கள் மனசாட்சியின் படி அவர் குற்றவாளி இல்லை என்பதை ஏற்றுகொண்டீர்கல்.ஆனால் அரசியலில் உங்கள் பக்கம் அமைச்சர் வரவில்லை,அதுதான் நீங்கள் அவருக்கு எதிராக பிரேரனை கொண்டு வந்தது என்பதையும் ஏற்றுக் கொண்டீர்கள்.ஆக இது ஒரு அரசியல் லாப நோக்கம்.

    ReplyDelete
  2. OK. Basil witnessed that Rishad is genuine but only getting revenge since he is opposition to their newly born party

    ReplyDelete

Powered by Blogger.