Header Ads



இப்படியும் நல்ல, மனிதர்கள் இருக்கிறார்கள்


தனது பிள்ளைகளின் திருமண வைபவத்தை முன்னிட்டு 30 குடும்பத்தினருக்கு வாழ்வாதாரம் வழங்க நிய்யத் வைத்த தந்தையின் முடிவுக்கு மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்த குடும்பத்தினர்... 

கேரள மாநிலம் முண்டக்கயம் பகுதியை சேர்ந்தவரும், கோட்டயம் மாவட்ட முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான அஸீஸ்... 

தனது பிள்ளைகளான டாக்டர் நசீது மற்றும் டாக்டர் நாசியா இருவருக்கும் திருமணம் பேசி முடித்து இன்ஷா அல்லாஹ் வருகிற ஆகஸ்ட் மாதம் ஒரே நேரத்தில் நிக்காஹ் நடைபெறவுள்ளது.. 

தனது பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு தனது ஊரில் உள்ள ஏழைகளுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று நிய்யத் வைத்த அஸீஸ், அந்த முடிவை மனைவி  மற்றும் இரண்டு பிள்ளைகளிடமும் தெரிவித்தவுடன் முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தனர்.. 

மூவாற்றுப்புழா பூந்தாறு நெடுஞ்சாலையில் உள்ள, தனக்கு சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள ஒன்றே கால் ஏக்கர் நிலத்தை முப்பது ஏழைகள் வீடு வைப்பதற்கு தலா நான்கு சென்று வீதம் வழங்க நிய்யத் வைத்துள்ளார்.. 

இதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை முறையாக பரிசீலித்து பல்வேறு சமூகங்களை சேர்ந்த தகுதியுள்ள 30 ஏழைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தனது பிள்ளைகளின் திருமணத்திற்கு முன்பே இவர்கள் அனைவருக்கும் பத்திரப்பதிவு செய்து கொடுக்கவுள்ளதாக அஸீஸ் பெருமிதத்துடன் கூறினார்.!

பதிவு செய்தவர் 
Colachel Azheem

3 comments:

  1. Islam never shows differentiation between human. Whoever needs, they have priority. Insha Allah, we also will follow this philosophy.

    ReplyDelete

Powered by Blogger.