Header Ads



கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை, முழு செயலகமாக தரமுயர்த்துவதில் என்ன தவறு இருக்கிறது?

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தமிழ் - முஸ்லிம் ஐக்கியத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எனவே கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் நீண்ட கால கோரிக்கைக்கு உடன்பட்டு முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் தமிழ் - முஸ்லிம் ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கல்முனை வடக்கு பிரதேசம், சாய்ந்தமருது பிரதேசம், கல்முனை தெற்கு பிரதேசம் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதுதான் கல்முனை மாநகரசபையாக இருக்கின்றது.

இதில் சாய்ந்தமருது, கல்முனை தெற்கு ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது, கல்முனை வடக்கு பிரதேசத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.

இந்த நிலையில் சாய்ந்தமருது பிரதேசம், ஏற்கனவே தனியொரு பிரதேச செயலகமாக மாற்றப்பட்டு, இன்று சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர்கள் தலைமையில் அங்கு வாழும் முஸ்லிம் மக்கள், தமது பிரதேச செயலக பிரதேசத்தை, கல்முனை மாநகரசபைக்கு முற்றிலும் வெளியே பிரித்தெடுத்து முழுமையான நகரசபையாக்கும்படி போராடுகிறார்கள்.

அதுபோல் கல்முனை வடக்கு தமிழ் சமூக தலைவர்கள் தமது உப பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோரி கடந்த பல்லாண்டுகளாக போராடுகிறார்கள்.

ஒரே இனத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள், கல்முனை மாநகரசபையில் இருந்து முற்றாக பிரிந்து தனி நகரசபை வேண்டும் என போராடும் போது, சகோதர இனத்தை சார்ந்த தமிழ் மக்கள், தமது உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர வேண்டும் என போராடுவதில் என்ன தவறு இருக்கின்றது.

இந்த விடயத்தை கல்முனை வடக்கு தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் தர்க்க ரீதியாக எடுத்து கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நேற்று இரவு தேசிய பாதுகாப்பு சபையிலும், நாம் கருத்துகளை பறிமாற்றி கொண்டோம். அத்துடன் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மக்கள் என்னை சந்தித்து இதுபற்றி தீர்ர்கமாக உரையாடியுள்ளனர்.

இப்பிரச்சினை தொடர்பில், துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடனும், நான் தேசிய ஒருமைப்பாட்டு துறைசார் அமைச்சர் என்ற முறையில் கலந்தாலோசித்துள்ளேன்.

அம்பாறை மாவட்ட அமைச்சரவை அமைச்சர் தயா கமகேயும், நானும் இதுபற்றி பேசியுள்ளோம். இதை இனியும் தொடர்ந்து நீடிக்க விடுவது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகமாக அமைந்துவிடும் என இவர்களுக்கு தெரிவித்துள்ளேன்.

இன, மத அடிப்படைகளில் கல்வி வலய, பிரதேச செயலக, உள்ளூராட்சி மன்ற எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு மாவட்டங்களில், இன அடிப்படையிலான பிரதேச செயலகங்கள், கல்வி வலயங்கள், நில தொடர்பற்றும், நில தொடர்புடனும் நடைமுறையில் இருக்கின்றன.

எனவே கல்முனை வடக்கு தமிழ் மக்கள், தமது உப பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோருவதில் மாத்திரம் என்ன தவறு இருக்கிறது என எனக்கு விளங்கவில்லை.

அத்துடன் ஏற்கனவே இயங்கி வரும் ஒரு உப பிரதேச செயலகத்தையே, முழு பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி இக்கோரிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இது பிழை என்றால், கிழக்கில் இருக்கும் எத்தனையோ இனரீதியான பிரதேச செயலகங்களை, கல்வி வலயங்களை கலைக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், அதற்கு இன, மத சாயம் பூசுவதில் என்ன நியாயம் இருக்கிறது என எனக்கு விளங்கவில்லை.

இன்று தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் இனத்தவர் மத்தியில் கிழக்கில் இந்த பிரச்சினை மெல்ல, மெல்ல பூதாகரமாகி கொண்டு வருகிறது. இதை பார்க்காமல், கேட்காமல், ஆராயாமல் இருப்பது பொறுப்பற்றமையாகும்.

மேலும் இனங்களிடையே சச்சரவு புள்ளிகளை அடையாளம் கண்டு நிவர்த்திக்கும், தேசிய ஒருமைபாடும், ஏனைய பொறுப்புகளுக்கு மத்தியில், ஒரு பொறுப்பாக எனக்கு இருக்கிறது என்பதையும் நான் மனதில் கொண்டுள்ளேன்.

இந்த பிரச்சினையினால் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன நல்லுறவு சீர்கெடுவதை இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. மேன்முறையீட்டு நீதிமன்ரில் போய் கேளுங்கள் அமைச்சரே,அங்கே வழக்கு உள்ளது.வழக்கு இருக்கும் ஒரு விடயத்தை எவ்வாறு குறுக்கு வழியில் பெறுவது? ஒரு பிரதேச செயலகம் புதிதாக உருவாக்க தேவையான சில வரைமுறைகள் கூட அங்கே இல்லை.எனவே Muslim கள் மீது எப்போ பிரச்சினை வரும் என காத்திருந்து அதை சந்தர்ப்பமாக பயன்படுத்துவது அயோக்கியத்தனம்.தமிழ் இனத்தை காட்டி,கூட்டி கொடுத்த கருணா இதில் தலயிட முடியும்,இனவாதம் பேச முடியும் என்ரால் சாய்ந்தமருது Muslim கள் கல்முனை Muslim கலும் ஏன் முளு Muslim களுக்கும் உரிமை உள்ளது.கேவலம் தமிழர் தரப்பு இப்போது தேரர்கலை எமக்கு எதிராக பாவிக்கும் கோழை தனத்தை விட கேவலமானது இந்த உலகத்தில் வேறு இல்லை.வக்கிருந்தால் தனியே வரவேண்டும் அதை விடுத்து கோழைகல் தேரர்கலை சேர்ப்பது.அமச்சரே நீங்களும் வாருங்கள் 20 தேரர்கலினை அழைத்துக்கொண்டு ஒரு நீதிமன்ரில் இருக்கும் ஒரு பிரச்சினைக்காக.

    ReplyDelete
  2. நியாயமான கருத்து எப்போதோ இலகுவாக இந்த விடயத்தை முடித்திருக்க வேண்டும். வாக்குப்பிச்சை எடுப்பதற்காக புண்ணுக்கு மருந்து செய்யாமல் ஒடுகு விழ வைத்திருக்கிறார்கள். நியாயமான கோரிக்கையாயினும் உண்ணாவிரதம் இருந்து பெறப்படுவது என்பது பிழையான முன்மாதிரியாக அமைந்துவிடும். கல்முனைக்கு ஒரு செயலகம்தான் இருக்கவேண்டும் என்றால் அது கல்முனை தெற்கு செயலகமாக ஒரு செயலகம் இருந்து விட்டுப்போகட்டுமே. அதனால் ஒன்றும் ஆகப்போவதில்லையே.

    ReplyDelete
  3. Mr Minister

    Physical environment of this area is not known to you because you are from some where else. Therefore let the matter to be resolved among ourselves both Tamils and Muslims from this area. We will fight today and tommorrow we are friends.
    It is like confrontation between husband and wife.

    ReplyDelete
  4. மதிப்புக்குரிய Suhaib போன்ற நீதிமான்களைத்தான் தேடுகிறேன். நன்றி Suhaib. நட்புக்குரிய Seeni Mohamed Sideeque, சாய்ந்த மருது பிரதேச சபைக்கும் கல்முனை வடக்கு உப பிரதேச சபைக்கும் PHYSICAL ENVIRONMENT ஒன்றுதான். சாய்ந்தமருது முஸ்லிம் மக்களுக்கு வளங்கிய நீதியை கல்முனை வடக்கு தமிழருக்கு ஏன் மறுக்கிறீர்கள் என்றுதான் மனோகணேசன் கேட்க்கிறார். உள்ளூர் தமிழ் முஸ்லிம் தலைவர்களால் 30 வருடங்களாக தீர்க்க முடியாத சூழல்தான் இன்றைய நிலைமையை உருவாக்கியுள்ளது. அன்புக்குரிய Rizard, கருணா பற்றி தமிழர்தானே தீர்மானிக்க முடியும். சாய்ந்த மருது பிரதேச செயலகம்போல கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகமும் தரம் உயர்த்தப்பட வேண்டும் என் அமைச்சர் அவை கொள்கை முடிவை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தித்தான் அரசியல் போராட்டம் நடக்கிறது. வளக்குகள் தடையில்லை. இதற்க்குமேலும் இப்பிரச்சினையை இழுத்தடிக்கும் மார்க்கமில்லை. தமிழரும் முஸ்லிம்களும் சேர்ந்து சந்தோசமாக முடிவுகளை எடுக்க முடியுமென இப்பவும் நம்புகிறேன். முடியாதா?

    ReplyDelete

Powered by Blogger.