Header Ads



மகாநாயக்க தேரர்களிடம், முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறியது என்ன...?


குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனையை ஏற்றுக் கொள்வதற்கும் தயாராகவுள்ளோம். அதற்காக அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுத்தக் கூடாது என்று கூட்டாக பதவி விலகிய முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். 

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அஸ்கிரிய , மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று கண்டியில் இடம்பெற்றது. 

இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகியமை குறித்து மகா நாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்ட போதே இவ்விடயம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இனவாதத்தைத் தூண்டுவதற்காகவும், ரிஷாத் பதியுதீனை பாதுகாப்பதற்காகவும் அரசியல் நோக்கத்துடனும் நாம் அனைவரும் இந்த முடிவை எடுத்ததாக பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் நாம் அதற்காக இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை.

முஸ்லிஸ்களை அடிப்படைவாதிகளாகச் செயற்பட வேண்டாம் என்று கூறிவிட்டு சில பௌத்த மதகுருமார்கள் சிங்கள மக்களை தவறான முறையில் வழிநடத்துகின்றனர். மக்களும் அதற்கு ஏற்பட தவறான வழியில் செல்கின்றனர். பொலிஸாரும் இவற்றை கண்டுகொள்வதில்லை. இவ்வாறானவர்களால் தான் சில பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் போது மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதாகவும் பதவி விலகிய முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

2 comments:

  1. ஒரு தடவை மலேசியாவி
    ல் நான்இருந்த பொழுது...
    CITY ONE கட்டிடத்தின்
    Lift இலிருந்து இறங்கிக்
    கொண்டிருக்கிறேன்...
    தொப்பி அரைஜுப்பாவு
    டன் நான்..பக்கத்தில் நின்
    றுகொண்டிருக்கிறான்
    ஒரு மலாய்முஸ்லிம்
    இளைஞன்...தற்செயலாக
    அவன் கால் என்காலில்
    பட்டுவிட்டது..நான் எதிர்
    பார்க்காத நிலையில் மன்
    னிப்புக்கேட்டவாறு என்
    காலைத்தொட்டு முத்தமிட்
    டுக்கொள்கிறான்.(இது
    இஸ்லாத்தில் அங்கீகரிக்
    கப்படாத விடயம் என்றா
    லும்) ஒரு முஸ்லிமுக்கு
    இஸ்லாமிய நாடு ஒன்றில்
    இருக்கும் கண்ணியத்தை
    நினைத்து பிரமித்துப்போ
    னேன்..எப்பொழுதும் அது
    நினைவாகிறது.. முஸ்லி
    மின் கண்ணியம் முஸ்லி
    ம் உலகில் இவ்வாறெல்
    லாம் இருக்கும் நிலையில்
    இலங்கையில் இனவாத
    நெருப்பில் நாம் துன்புறு
    த்தப்படுவது மிக வேத
    னையாக உள்ளது...

    -றஸீ

    ReplyDelete

Powered by Blogger.