Header Ads



முஸ்லிம்களே யாருக்கும் பணம் கொடுக்காதீர்கள் - சட்டத்தரணிகளே அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

பயங்கவாத தடை சட்டம் மற்றும் ICCPR அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையின்றி விளக்கமறியலில் உள்ளவர்களை வெளியில் எடுப்பதற்காக நாங்கள் கொழும்பிலே எங்களுடைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் அமைப்பு மற்றும் MLA MUSLIM LAW ASSOCIATION என்ற இந்த இரண்டு அமைப்புகளும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் எந்தவிதமான பொருளாதார கொடுப்பணவுகளையும் கோராமல் அவர்களை வெளியில் எடுப்பதற்காக முயற்சிகளை செய்து கொண்டு வருகிறோம்.

எமது முயற்சிக்கு பலனாக அல்லாஹ்வின் உதவியால் இதுவரை பயங்கவாத தடை சட்டம் மற்றும் ICCPR அவசரகால சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் 50% சகோதரர்களை வெளியில் எடுத்த நிலையில் நான் இன்று இந்த பதிவை இடுகின்றேன்.

குருணாகல் மாவட்டத்தில் பிளஸ்ஸ நீதிமன்றம், குருணாகல் நீதிமன்றம், வாரியபொல நீதிமன்றம், நிக்கவெரட்டிய போன்ற நீதிமன்றங்களின் ஊடாக சிறையில் எங்களுடைய சகோதரர்கள் பிணையின்றி தவிக்கின்றார்கள்.

இவர்களை பிணையில் விடுவிப்பதற்கு ஒரேயொரு தடையாக இருப்பது இந்த பயங்கவாத தடை சட்டம் மற்றும் ICCPR அவசரகால சட்டம். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருப்பவர்களுக்கு பிணை வழங்குவதற்கான அதிகாரம் அந்த குறிப்பிட்ட நீதிமன்றங்களுக்கு இல்லை. எனவே இந்த பயங்கவாத தடை சட்டமும் மற்றும் ICCPR அவசரகால சட்டமும் கூறுகின்ற ஒரேயொரு விதிவிலக்கான சந்தர்ப்பம் அதாவது, பிணை இல்லாவிட்டாலும் கூட பயங்கவாத தடை சட்டம் மற்றும் ICCPR அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சட்டமா அதிபரின் விசேட எழுத்து மூலமான பரிந்துரை கிடைக்கப்பெறுமிடத்து அதாவது பிணை வழங்கப்பட வேண்டும் என்று எழுத்து மூலமாக சட்டமா அதிபர் அறிவிக்கும் பட்சத்தில் MAGISTRATE அந்த நீதவான்கள் கட்டாயமாக குறித்த சந்தேக நபருக்கு பிணை வழங்க வேண்டும்.

அந்த அமைப்பை மிகத் தெளிவாக இவர்களை பிணையில் வெளியில் எடுப்பதாக இருந்தால் முதல்கட்டமாக இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் போலியானது எனவும் சோடிக்கப்பட்டவை என்ற விடயங்கள் எல்லாம் இருக்கின்ற அதேவேளை அவற்றை நாங்கள் வழக்கு விசாரணைக்கு வருகின்ற போது நாங்கள் முகங்கொடுக்கத் தாயார உள்ளோம்.

ஆனால் முதலிலே இவர்களை வெளியில் எடுப்பதாக இருந்தால் பிணையில் எடுக்க வேண்டும். பிணையில் எடுப்பதாக இருந்தால் கட்டாயமாக சட்டமா அதிபரின் எழுத்து மூல பரிந்துரையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தினை நாங்கள் தெளிவாக உணர்ந்தவர்களாக அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு அதற்கான ஆவணங்களை தயார் செய்து சட்டமா அதிபர் திணைக்களத்திலே கொண்டு போய் ஒப்படைத்து அதற்கான உரிய இலக்கங்களை REFERENCE NUMBER களைப் பெற்றுக் கொண்டு அதற்குப் பிறகு அந்த வழக்குகளை ஒவ்வொரு பைல்களாக நாங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சென்று பேசி பேசி கைது செய்யப்பட்டவர்களை விடுவித்துக் கொண்டிருக்கின்றோம்.

எங்களுடைய இந்த முயறசிக்கு நாங்கள் யாரிடமும் எந்த விதமான கட்டணமும் கேட்கவும் இல்லை யாருக்கும் பணம் கொடுக்குமாறு சொல்லவும் இல்லை.

எனவே எங்களுடன் தொடர்பில் இருக்கின்ற சகோதரர்கள் விளக்கமறியலில் இருக்கின்றவர்களின் உறவினர்கள், குடும்பங்கள் யாரும் எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம்.

உங்களுடைய ஊர்களிலே உள்ளவர்கள் யாராவது அந்த LAWYERக்கு இரண்டு இலட்சம் கொட்த்தால் மூன்று நாட்களில் எடுக்கலாம் இந்த பொலிஸ் அதிகாரிக்கு ஐந்து இலட்சம் கொடுத்தால் ஐந்து நாட்களில் எடுக்கலாம் என்று சொல்வதைக் கேட்டு யாரிடமும் பணத்தைக் கொடுத்து முயற்சிகள் செய்ய வேண்டாம்.

இவர்கள் அனைவரும் இன்ஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு தினங்களில் பிணையில் விடுதலை செய்யப்பட உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து விட்டோம்.

குறிப்பாக குருணாகல் மாவட்டத்திலே இந்த வாரம் (இன்று நான் இதைப்பதிவிடுகின்ற தினம் 2019.06.21 வெள்ளிக்கிழமை) மாத்திரம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூலமாக நிறைய பேரை பிணையில் விடுவிப்பதற்கான எழுத்து மூல பரிந்துரைகளை பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

குறிப்பாக பிளஸ்ஸ நீதிமன்றத்தில் வழக்கு இலக்கம் 254 அக்ரம் உட்பட 04 சந்தேக நபர்கள் மற்றும் வழக்கு இலக்கம் 256 சகோதரர் நிஸ்தார் இவர்களுக்கான பரிந்துரையும் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

அதே போன்று குருணாகல் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் வழக்கு இலக்கம் 1192, 1193, 1195, 1199, 1200, 1234 (தள்கஸ்பிட்டி அஸாட் நஸீர், வதிரவலான வெள்ளவையைச் சேர்ந்த மஸாஹிர், சமீர், ரிஸ்வி, ஆஷிக், ரபீக் ஆகாயோர் உற்பட) இவ்வாறு நிறைய பேருக்கான பரிந்துரைகளை ஏற்கனவே நாங்கள் பெற்றிருக்கிறோம்.

அதனை பெக்ஸ் மூலமும் தபால் மூலமும் அனுப்புகின்ற வேளைகளைத்தான் தற்போது செய்து கொண்டிருக்கிறோம்.

இந்த குறித்த வழக்குகளுக்கான பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றிருக்கின்ற காரணத்தினால் அவர்களுடைய உறவினர்கள் அல்லது அந்த வழக்கு தொடர்பாக ஈடுபடுகின்றவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் பிணையை பெற்றுக் கொள்வதற்காக அல்லது அவர்களை வெளியில் எடுப்பதற்காக பாரிய தொகைகளை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனவே எனது அன்புக்குரிய சட்டத்தரணி நண்பர்களே, இந்த பாதிக்கப்பட்டவர்களின் விடயத்தில் மிகவும் நீதமுடனும் அல்லாஹ்விற்கு பயந்தும் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

காரணம் இந்த கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் எந்த தவறும் செய்யாதவர்கள், பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியவர்கள் குடும்பத் தலைவர் சிறையில் இருப்பதால் கைக் குழந்தைகளையும் சிறுவர்களையும் வைத்துக் கொண்டு ஒரு நேர சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையை எனது கண்களால் நான் கண்டதன் காரணமாகத் தான் இந்த வேணடுகோளை விடுக்கிறேன்.


ரிஸ்வி ஜவஹர்ஷா
உயர் நீதிமன்ற சட்டத்தரணி

3 comments:

  1. இன்ஷா அல்லாஹ் ஏழைகளுக்காகவும் நீதிக்காகவும் கஷ்டப்படும் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் (ளறவ) அருளும் றஹ்மத்தும் நிச்சயமாகக் கிடைக்கும். நாங்கள் இருக்கின்றோம் உங்களுக்காக துஆ செய்வதற்கு. சர்வலோகத்திலும் “துஆ” விற்கு மிஞ்சிய சக்தி வேறு எதற்கும் இல்லை. அல்லாஹ் அக்பர்! லாஇலாஹ இல்லல்லாஹ். முஹம்மதுர் ரஸ_லுல்லாஹ்!

    ReplyDelete
  2. Allah the almighty bless all of you? you are great...

    ReplyDelete

Powered by Blogger.