Header Ads



பிரபாகரனுடன், இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் - ஹக்கீம்

புலிகளின் தலைவர் பிரபாகரனுடன், இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் என, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவரின் இயக்கத்தினருக்கும் பெரும் ஆதரவுத் தளமிருந்தது என்றும் இப்போதும் இருக்கின்றது என்றும் கூறியுள்ள அவர், அவர்களுக்கென்று கட்டமைப்பு, அரசியல் கொள்கை இருந்தது என்றும் அவர்களுக்கென்று ஒரு விடுதலைப் போராட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளார்.

நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக் காலத்தில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கிளிநொச்சியில் தாங்கள் நேரில் சந்தித்ததாகவும் அவர், தனக்கும் தனது கட்சியினருக்கும் பலத்த வரவேற்பு வழங்கியிருந்தார் என்றும் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் எங்களுடன் அவர் மனம் விட்டுப் பேசியதாகவும் அவர் கூறினார்.

துரதிஷ்டவசமாக அந்தச் சமாதானக் காலம் நீடிக்கவில்லை என்று தெரிவித்த அவர்,  மீண்டும் போர் ஆரம்பமானபோதும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் குறுகிய நோக்கத்தில் இருந்ததில்லை என்றும் கூறினார்.

உரிமைகளைக் கேட்டு நிற்கும் தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர்களின் தாக்குதல்கள் இருந்தன என்றும் பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார் என்றும் இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது என்றும் எனவே, பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாக இடமளிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருப்பது அபத்தமான ஒன்று என்று கூறியுள்ள அவர், இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய கும்பலுக்கென்று எதுவுமே கிடையாது என்றும் இவர்களுக்கு முஸ்லிம் சமூகத்திட்டமிருந்து எந்த ஆதரவும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அப்படியான கும்பல் பிரபாகரன் எனும் தகுதிக்கு வந்து விடுவார்கள் என்று அச்சப்படுகின்ற அதீதமான அச்சப்போக்கு அபத்தமானது என்றும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை, இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

9 comments:

  1. டயஸ்பொறாவின் எச்சை எலும்பிற்கு கூட்டிக்கொடுக்க தயங்காதவன் நீ. ஏதோ முஸ்லிம்கள் ஒன்றாக இனைந்து தேர்தலை சந்தித்தால் உனக்கு அரசியல் எதிர்காலம் உண்டு. இல்லையெண்டா நயவஞ்சகன் உன் அரசியல் வாழ்க்கை இதோடு முடிந்துவிடும். பிடபாகரன் ஒரு மலம். அவனுக்கு வெள்ளையடிப்பதால் அவன் நல்லவனாகிவிட முடியாது

    ReplyDelete
  2. Great Speech. Prabagaran was a Great Talented man from One side (He became terrorist because of Racist Buddhist). Not like Dirty ISIS Terror Zahran.

    ReplyDelete
  3. Rauf Hakeem சொல்வாது போன்று பயங்கரவாதி பிரபாகரனுக்கு கொள்கை இருந்தது சரிதான் அனாலும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று நாட்டை அளித்து குட்டி சுவராக்கிய பயங்கரவாதியை சரிகாண முடியாது.
    Naseer

    ReplyDelete
  4. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதன் கருத்து வடக்கையும் கிழக்கையும் இணைப்பது அல்ல என்பதனை தலைவர் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பொதுவெளியில் தெளிவாகக் கூற வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இன்னுமொரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தமிழ் மக்களின் கோரிக்கைகளை வழங்குவதற்கு எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை எனக் கூறிவிட்டார் என்று புலம்பினாலும் புலம்புவர்.

    ReplyDelete
  5. You are the most intelligent politician among muslim society.

    ReplyDelete
  6. தலைவர் ashraf அவர்களை கொல்ல எத்தனை முறை முயற்ச்சி செய்தது புலி பயங்கரவாதி பிரபாகரன்.உங்களுக்கு அது தெரிய வய்ப்பில்லை.நீங்கள் அப்போ கடையில் இல்லை.ஹசனலி,அதாஉல்லா,சேகு இக்ஷ்சதீன், அவர்களுக்கு. தெரியும்.ஆனால் அலுங்காமல்,குலுங்காமல் கட்சிக்குள் வந்த உங்களுக்கு அந்த வலிகள் தெரியாது.போராடாமல் கிடைத்த பதவிதானே.அப்போ திரு.ஹக்கிம் அவர்களே புலிகலின் தலைவன் பயங்கரவாதி பிரபாகரன் நல்லவன்,Muslim கலுக்கு எந்த தீங்கும் செய்யவில்லை.ஜயா,இறுதி நேரத்தில் வந்து பெரியால் பத்தும் நீங்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும்.விலாங்கு மீன் போல் இருக்க வேண்டாம்.Muslim கலின் இப்போதய அரசியல்,சமூகப் பிரச்சினக்கு வித்திட்டதே நீங்கள்தான்.சரியாக நீங்கல் இருந்திருந்தால் இப்போதும் ஒரே கட்சிதான்.உங்கள் சர்வச்திகார போக்கினால்தான்,பல அரசியல் பிளவுகள் எமது சமூகத்தில்.உருவானது.

    ReplyDelete
  7. யஹூதிக்கூட்டம் செய்த அராஅராஜகத்தை இஸ்லாமிய பயங்கரவாதம் என்கிறார்.கொலைவெறி பிடித்த பயங்கரவாதிகளை நியாயப்படுத்துகிறார் இவர்கள் தான முஸ்லிம் தலைவர்கள் வெட்கக் கேடு

    ReplyDelete
  8. இவர் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற வேண்டும் என்று பிரபாகரன் பெயரை பயன்படுத்தினார்.
    இவர் நன்றாக தொப்பி பிரட்ட கூடியவர் என்று பாவம் ஸ்டாலினுக்கு தெரியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.