Header Ads



சிங்கள தலைவர் முஸ்லிம் சமூகத்தை மட்டும் நேசிக்காது, தேசத்தை நேசிக்கும் ஒருவராக உருவாக்கப்பட வேண்டும்

கொள்கைகளை காண்பித்து ஆட்சியை பிடிப்போர் பின்னர் கொள்கைகளை மறந்து விடுகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கல்வியறிவுடைய சிங்கள மக்கள் தலைவர் ஒருவரும் முஸ்லிம் சமூகத்தை மட்டும் நேசிக்காது, தேசத்தை நேசிக்கும் ஒருவராக உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு பொருத்தமான கொள்கைகளை காண்பித்து ஆட்சி பீடம் ஏறும் தலைவர்கள் நாட்டுக்கு விரோதமாக செயற்படும் போது அவர்களை மீளவும் நல்வழிப்படுத்தக் கூடிய பொறிமுறைமை அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டில் மல்வத்து பீடாதிபதியை இன்றைய தினம் -07- சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு நாட்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலம் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் கண்களை திறக்கக் கிடைத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. He must be prosecuted for stirring pot between communities by telling utter lies.

    ReplyDelete
  2. முற்றிலும் இல்லறத்தை துறந்த துறவிகள் ஏன் துறவறத்தில் நிலைத்திருக்காமல் மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் ,துறவறம் தம்மைத்தாமே ஏமாற்றுவதும் மற்றவனுடைய இயல்பு வாழ்க்கையை சீரழிப்பதும் இயற்கைக்கு மாற்றமானதுமே தவிர வேறொன்றுமில்லை.....

    ReplyDelete

Powered by Blogger.