Header Ads



நீங்கள் முன்வராவிட்டால், சாரி உடுத்திச் செல்லுங்கள் - அபாயா குறித்து பேச வேண்டாம்...!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

அன்புக்குரிய உலமாக்களே, பெரியோர்களே, சகோதரர்களே, நான் சட்டத்தரணி ஸிஹார் ஹஸன். 

எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், 

அரசாங்கத்தால் அபாயாவை போட முடியாமல் செய்வதற்காக போடப்பட்ட சுற்றுநிருபத்தை, பொது நிர்வாக அமைச்சு இன்னமும் தடை செய்ய அல்லது பின்வாங்கப்படவில்லை என்று பல இடங்களில் இருந்தும் தகவல் வந்துள்ளது.

இது வெளியிடப்பட்டு மூன்று வாரங்கள் முடிவடைந்து விட்டது. ஒரு மாதத்திற்குள் அடிப்படை மனித உரிமை வழக்கு போடப்படாவிட்டால், எங்களால் அந்த சுற்று நிருபத்தை தடைசெய்யப்பட வைக்க முடியாது. ஏனென்றால் எல்லா வகையிலும், ராஜதந்திர ரீதியாகவும், அமைச்சர்களுடன் பேசியும், பிரதமமந்திரியுடன் பேசியும், எல்லோருடன் பேசியும் ஒன்றுமே நடக்கவில்லை.

இப்போழுது என்ன பிரச்சனையென்றால், என்னைக்கூட பலர், சுமார் 50 பேர் அளவில் தொடர்பு கொண்டு. சேர் எங்களுக்கு அபாய போட இயலாமல் இருக்கின்றது, ஏதாவது உதவி செய்யுங்களேன் என்று, நான் கூறினேன் சட்ட ரீதியாகத்தான் உதவி செய்ய முடியும் என்று, அத்தோடு மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஒரு முறைப்பாட்டை செய்யுங்கள், அதனுடன் சேர்த்து இயலாமல் போனால், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினேன்.

இன்று வரைக்கும் எங்கள் அனைத்து வழக்கறிஞ்ஞர்களும், கிட்டத்தட்ட 20 முதல் 25 வழக்கறிஞ்ஞர்கள் இது சம்பந்தமாக மிகவும் கரிசணையுடன் வேலைசெய்து கொண்டிருந்தார்கள்.

அதில் முக்கியமாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், சட்டத்தரணி ஷிராஸ் நூர்டீன், சட்டத்தரணி நளீம், ஆகியோர் மிகவும் முன்னின்று இதற்காக உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். அதே நேரம் வெய்ஸ் மூவ்மன்ட் என்று இருக்கின்ற குரல்கள் அமைப்பு கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்றது, அவர்களுடைய சட்டத்தரணிகள் கூட மிகவும் கரிசணையுடன் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் கடைசியில் பார்த்தால், ஒரே ஒரு பெண்மனியைத் தவிர வேறு யாறும் கூட அடிப்படை உரிமை வழக்கை தாக்கல் பண்ணுவதற்கு தயாராக வரவில்லை. இறுதியில் எங்களது சில சட்டத்தரணிகள் கேட்டார்கள் 'இவர்களுக்கு எதற்கு அபாய அணிய வேண்டும், அபாயாவை இல்லாமல் செய்தால் அதற்கு எதிராக குரல் கொடுக்க முடியாவிட்டால் அல்லது அது சம்பந்தமாக எவ்வித முயற்சியும் எடுக்கமுடியாவிட்டால், அல்லது நீதி கேட்டு நீதிமன்றத்திற்கு போக முடியாவிட்டால், இவ்வளவு பயம் என்றால் எதற்கு இவர்களுக்கெல்லாம் அபாயா?' என்று கேட்கின்ற அளவிற்கு எங்களை கவலை கொள்ள செய்துவிட்டார்கள்.

இன்று வரை நானும் பார்த்தேன், பலரிடமும் கேட்டு, முஸ்லிமல்லாதவர்களிடமும் கேட்டு, எங்களவர்களிடமும் கேட்டு இன்று வரை ஒரு வழக்குத்தொடுணர் எங்களுக்கு முன்வரவில்லை. இருக்கின்ற ஒரேயொரு பெண்மணி, அந்த ஒரு வழக்குப்பதிவை மாத்திரம் வைத்துக்கொண்டு எங்காளால் தோல்வியடைய முடியாது, என்னவென்றால், நாலைந்து வழக்குப்பதிவுகளை முன்வைத்து வழக்காடினால் தான் எங்களால் அதனை வெற்றி பெற செய்ய முடியும் என்று, ஆனால் அந்த ஒருவர் கூட வழக்கு தொடுப்பதற்கு தயாரா என்று எங்களுக்கு இதுவரை தெரியாது. கிட்டத்தட் ஆறுஏழு மாதங்களாக நான் ஒரு ஒலிப்பதிவையும் போடவில்லை. ஆனால் சட்டத்தில் இருக்கின்ற இப்படியான பிரச்சனையொன்றை நாங்கள் சட்ட ரீதியாக அணுக முடியாமல் எங்கள் சமூகம் கோழைகளாக சமூகவலைத்தளங்களில் மாத்திரம் பதிவைப்போட்டு, எங்களுக்கு அநீதி நடக்கின்றது, அநீதி நடக்கின்றது என்று அழுது, புலம்பி விட்டு இருக்கின்ற ஆட்களாக, கோழை சமூகமாக இருக்கின்றோமா? என்ற கவலையும் ஆதங்கத்துடனும் இந்த ஒலிப்பதிவை இடுகின்றேன். 

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, உங்களால் யாருக்காவது, அரசாங்க சேவையில் வேலை செய்கின்ற யாராவது பெண்களுக்கு, தமது நீதிக்குரலை கேட்பதற்கு, சட்ட ரீதியாக உங்களது உரிமையை வென்றெடுப்பதற்கு, உங்களால் ஒரு வழக்குத்தொடுனராகவாவது வர முடியாவிட்டால், அல்லாஹ்வுக்கா வேண்டி சாரியை அணிந்து செல்லுங்கள் (ஆதங்கம்). சுமூகவலைத்தளங்களில் மாத்திரம், எமக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்று கூறுவதால் மாத்திரம் எந்தப்பயணுமில்லை. இதனை வைத்துக்கொண்டு சட்டத்தரணியாகிய எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள், அநீதம் இழைக்கப்பட்ட பெண்கள், முன்வராவிட்டால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

இந்த ஒலிப்பதிவை கேட்டுவிட்டாவது, யாராவது என்னை தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொள்ளுங்கள், அல்லது நான் மேலே குறிப்பிட்ட சட்டத்தரணிகள் இருக்கின்றார்கள், அவர்களைத் தொடர்பு கொண்டு உங்களது பெயரை கொடுத்து, இயலுமென்றால், முதுகொலும்புல்ல சமூகமாக (ஆதங்கம்) இருந்தால் உங்களுக்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உங்களது உரிமைகளை வென்றெடுக்க தயாராகுங்கள். இன்றிலிருந்து இன்னும் பத்து நாட்கள் கூட இல்லை, இன்று 20ம் திகதி, கடந்த மாதம் 29ம் திகதி வர்த்மாணி அறிவித்தல் போடப்பட்டுள்ளது, எட்டு நாட்களுக்குள் நாம் உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும். அதாவது அடுத்த வாரம் 28ம் திகதிக்கு முன் நாம் செல்ல வேண்டும், அவ்வாறு செல்லாவிட்டால், எங்களால் இதன் பிறகு செல்ல முடியாது. இந்த வழக்கை தயார் செய்வதற்கு நாலைந்து நாட்கள் எடுக்கும்.

இதனால் அல்லாஹ்வுக்காக வேண்டி யாருக்காவது யோசனை இருந்தால் அவசரமாக முன்வரும்படி கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட ரீதியாக என்னையோ, இவ்விடயத்தில் தொடர்புபட்டிருக்கும் மேலேகூறியுள்ள சட்டத்தரணிகள் யாரையாவது, முன்னிருத்தி நீங்கள் வழக்குத்தொடுணராக கையொப்பமிட தயாராகுமாறு கேட்டுக்கொள்கின்றேன். 

இதற்கு முன்வரமுடியாவிட்டால் அல்லாஹ்வுக்கா வேண்டி சாரி உடுத்தி (ஆதங்கம்) செல்லுங்கள். இன்னும் சில நாட்களில் தலையை மறைக்கவும் வேண்டாம் என்று கூறுவார்கள், அப்பொழுது அதையும் செய்யுங்கள் (ஆதங்கம்). நீங்கள் ஒரு நாளும் முன்வரமாட்டீர்கள் (ஆதங்கம்). அவ்வாறு நீங்கள் முன்வராவிட்டால், இது சம்பந்தமாக பேசவும் வேண்டாம். (ஆதங்கம்).

குறிப்பு:
அன்பின் சகோதரிகளே, மேலேயுள்ள எமது சகோதரனின் உண்மையான ஆதங்கத்தை உணர்ந்தவர்களாக, உங்களதும் எமது சமூகத்தினதும், உரிமையையும், கௌரவத்தையும் வென்றெடுக்க தயவு செய்து முன்வாருங்கள். அநீதம் இழைக்கப்பட்டவர்களுடன் அல்லாஹ் என்றும் துணையிருப்பான்.

  

No comments

Powered by Blogger.