Header Ads



முஸ்லிம் சமூகம் கொண்டாட வேண்டிய, ஒரு சிங்கள அரசியல்வாதி

- Rumaiz Mohammed -

இலங்கை முஸ்லிம் சமூகம் பல தரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இன்றைய காலகட்டத்தில் சிங்கள பேரினவாதிகளுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு சார்பாகவும் பேசிவரும் ஒரு சிங்கள அரசியல்வாதி.

* முஸ்லிம் கடைகள், வீடுகள் அண்மையில் தீயிட்டு கொளுத்தப்பட்ட போது முஸ்லிம் சமூகம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு எவ்வாறு உதவுகின்றனர் என்று புள்ளிவிபரத்தோடு பாராளுமன்றத்தில் பேசியமை.

* இனவாதத்தை வளர்ப்பதில் பெரும்பங்காற்றிய ஹிரு , தெரண சேனல்களுக்கு நிதியமைச்சின் விளம்பரங்களை இனி வழங்க மாட்டோம் என்று தடை செய்தமை.

* நோன்புப் பெருநாளை முஸ்லிம் குடும்பத்தோடு போய் கொண்டாடியமை.

* நேற்று திங்கட்கிழமை மாத்தறையில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக முஸ்லிம்களோடு சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை

என்று இவருடைய முஸ்லிம்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.
சில சிங்கள பக்கங்களின் பதிவுகளை வாசித்தால் விளங்கும் இவரை எப்படியெல்லாம் கழுவி ஊற்றுகின்றனர் என்று.

ஓரிரு நாட்களின் முன் இவருக்கு கம்பஹா மாவட்டத்தில் உள்ள பன்சலைகளுக்கு போவதற்கு தடைவிதிக்கப்பட்டது எத்தனை பேருக்கு தெரியும்.

ஒரு மாற்றுமத அரசியல்வாதி முஸ்லிம்களுக்கெதிராக என்ன சரி கருத்து கூறி விட்டால் பேஸ்புக்கில் அவருக்கு எப்படியெல்லாம் ஏச முடியுமோ அப்படியெல்லாம் ஏசி போடப்பட்ட நூற்றுக்கணக்கான பதிவுகளை பார்க்க முடியும். ஆனால் இவரைப் போன்று முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசியவர்களுக்கு ஆதரவான பதிவுகளை காண்பது அரிதிலும் அரிது. புரியாணியில் போடப்பட்ட முந்திரிக்கொட்டை போன்று ஓரிரண்டு பதிவுகளை மட்டும் பார்க்க முடியும்.

இனவாதத்திற்கு எதிராக பேசும் முஸ்லிம்களை விட இனவாதத்தை தோலுரித்து பேசும் பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் மிகவும் பெறுமதியானவர்கள்.

பெரும்பான்மை இன வாக்குகள் இன்றி, ஒரு முஸ்லிம் மாகாண சபை உறுப்பினரைக்கூட பெற கடினமாக இருக்கும் தென்மாகாணத்தில் இப்படி ஒரு அரசியல்வாதி இருப்பது காலத்தின் தேவை ஆகும்.

தயவுசெய்து இவர் போன்றவர்களுக்கு எங்களுடைய ஆதரவினையும் காண்பிப்பற்காக அவருக்கு ஆதரவான பதிவுகளை போடுங்கள்/ ஷெயார் செய்யுங்கள்.

6 comments:

  1. Yes of course we do remember his helpness for our communities.We muslims always with him.

    ReplyDelete
  2. He is a Gentleman politician, Never uses racism in his politics. During Chandirika's times he was dedicating to work for a national unity among all communities.

    He is an opposite of MR & Co and deserves for our support.

    ReplyDelete
  3. மங்கள போல் கல்வியறிவும்,பரந்த சிந்தனை கொண்டவர்கள் இந்த நாட்டின் அரசியலில் அதிகமாக இடம் பிடிக்க வேண்டும்.அப்போதுதான் இந்த நாடு இனவாதம் இல்லாமல் போன அப்விருத்தி அடைந்த பூமியாக மாறும்.

    ReplyDelete
  4. மங்கள சமரவீர அவர்கள் அமைச்சர் அஷ்ரப் அவர்களின் மிக நெருங்கிய நண்பன். அன்னாரது ஜனாசா வீட்டிற்கு முதலில் வந்த மிகச் சிலரில் இவர்களும் ஒருவராவார். துவேசம் என்பதே கடுகளவும் இல்லாத ஒரு கண்ணியவான். முஸ்லிம் ஆதரவு போக்கினால் தனது சிங்கள வாக்கு வங்கியில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் எனத் தெரிந்தும் நீதி நியாயத்தின் பக்கம் நிற்கும் ஒரு பெருந்தகை.

    ReplyDelete
  5. why he didn't contest presidental election

    ReplyDelete

Powered by Blogger.