June 08, 2019

அமைச்சரவை புறக்கணிப்பும், அதன் பின்னரான பதகழிப்பும்

இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் ஒரு அபூர்வமான வித்தியாச நிகழ்வு இடம்பெற்று முடிந்திருக்கின்றது , அதாவது அரசாங்க அமைச்சரவையில் கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற காரணத்தினால் தமது பதவியை புறக்கணிக்கும் தீர்மானத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்து சாதனை புரிந்து இருக்கின்றனர், முதற்கண் பாராட்டுக்கள் இதைத் தொடர்ந்து இடம்பெற்றிருக்கும் நடவடிக்கைகளையும், அதன் தொடர்ச்சியையுமே இப்பதிவு ஆராய்கின்றது,
#முஸ்லிம்_அரசியல்,
இலங்கை வரலாற்றில் மிக நீண்ட பாரம்பரியத்தை கொண்டதாக முஸ்லிம் அரசியல் வகிபங்கு உண்டு, மன்னராட்சி காலத்திலும், காலனித்துவம், மற்றும் சுதந்திர இலங்கையின் அரசுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் முஸ்லிம்கள் பலமான பங்களிப்பை வழங்கி வந்துள்ளனர், தேசிய அரசுகளில் பெரும்பான்மை கட்சிகளில் இணைந்து பல சேவைகளை நாட்டிற்கும், சமூகத்திற்கும் ஆற்றி வந்துள்ளனர்,
#பேரம்_பேசல்_Politics,
அஷ்ரஃப் அவர்களின் வகிபங்கைத் தொடர்ந்தே பேரம்பேசல் ஆரம்பிக்கின்றது, இது தமிழர் தரப்பின் அனுபவங்களை பாடமாகக் கொண்ட முஸ்லிம் அரசியலின் வளர்ச்சிப் படிமுறை எனலாம் தமிழர் தரப்பு ஆயுதப் போராட்ட வடிவத்தை ஆதாரமாகக் கொண்டிருந்த வேளை முஸ்லிம் அரசியல்வாதிகள் பேரம் பேசலை தமக்கான அரசியல் முறையாகக் கொண்டு செயற்பட்டனர்.
#நல்லாட்சிஅரசும்_முஸ்லிம்_வகிபங்கும்,
நல்லாட்சிக்கான அரச கட்டமைப்பில் முஸ்லிம்களின் பங்கும் எதிர்பார்க்கையும் அதிகம் இருந்த போதிலும், முஸ்லிம்களுக்கு செய்கூலியை விட இந்த அரசில் சேதாரமே அதிகமாக இருந்தது, மட்டுமல்ல பல்வேறு வகையான குழப்பகரமான ஆடசிக்கு மத்தியில் அரசில் முஸ்லிம்கள் தொடர்பான கொள்கை வெளிப்படையானதாக அமையவில்லை, அதேவேளை 51 நாள் ஜனநாயக பாதுகாப்பிலும் முஸ்லிம்அரசியல்வாதிகள் முட்டுக்கொடுத்து காப்பாற்றினர் இந்த வகையில் நல்லாட்சி முஸ்லிம்களைக் காப்பாற்றாவிட்டாலும் ,முஸ்லிம்கள் நல்லாட்சியை "மூச்சுப்பிடித்து" காப்பாற்றினர்.
#தௌகீத்_பயங்கரவாதம்,
இலங்கையில் இடம்பெற்ற தௌகீத் பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் பல புதிய அனுபவங்களையும், வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது, அத்தோடு ஒரு பயங்கரவாத செயற்பாடு தமது சமூகத்தை சார்ந்தவர்களால் நடாத்தப்பட்ட போதும் அதனை ஒழிப்பதற்கானதும், இன்னும் ஒரு பயங்கர நடவடிக்கை எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதற்குமான உச்சகட்ட ஒத்துழைப்பை இந்நாட்டு முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு வழங்கி இருந்தனர்,
#விளைவும்_முரண்பாடும்,
முஸ்லிம்கள் படையினருக்கும், அரசுக்கும் போதிய ஒத்துழைப்பை வழங்கிய போதும் சட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டியவர்களின் கவனயீனமும், தாக்குதலை வைத்து முஸ்லிம்களை ஒழித்துக்கட்ட தருணம் பார்த்த "பல்லினவாதிகளின் " நடவடிக்கைகளும், அரசின் குழப்பமான சுற்றறிக்கைகளும், குருநாகல, மினுவாங்கொடை தாக்குதல்களும், படையினரின் பிழையான அணுகுமுறைகளும் முஸ்லிம்களை அச்சமடையவும், ஆத்திரப்படவும் தூண்டின,
#சமய_தலைமைகளின்பங்கு,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின்பின்னர் பழிவாங்கல்களைத் தடுத்த பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் வழிகாட்டலை மாதிரியாக்க்கொண்டு ACJU தலைமையும் பல வழிகாட்டல்களை மேற்கொண்டது, அதே போல். ஏனைய இன தலைவர்களும் தம்மாலான பணிகளைச் செய்திருந்தனர்,
ஆனாலும் ஞானசார தேரரின் விடுதலையை நாட்டின்தலைவர் மேற்கொண்ட பின்னர் இவை அனைத்தும் தலை கீழானதுடன், மீண்டும் இனவாதமும், வன்முறையும் பகிரங்கமாக வெளிவந்தமுடன், முஸ்லிம்களின் எதிர்காலமும் இருள் மயமானது
#பல்முனைத்_தாக்குதல்,
இனவாதிகள் இம்முறை வித்தியாசமான ஒரு அணுகுமுறையைக் கையாண்டனர், அதாவது இந்த சந்தர்ப்பத்துடன் முஸ்லிம்களை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற நிலையில், அரசியல்வாதிகள், உலமாக்கள், சமூக அமைப்புக்கள், புத்திஜீவிகள், அரச அதிகாரிகள், பொதுமக்கள் என்ற அனைத்து மட்டங்களிலும் தமது "களை எடுப்பை" மேற்கொண்டனர், இதற்கு பல மட்ட ஒத்துழைப்பு பெறப்பட்டது, ஆனால் இது நாட்டின் பிரச்சினைக்கான தீர்வின் ஆணி வேரை விட்டு வேறு ஒரு திசையை நோக்கி பயணிக்க வைத்தது,
#வதந்தி_இலங்கை
முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையின் அவலக்குரலையும், அபாண்டங்களின் மீதான நியாயங்களையும் உணர முடியாத "#திமித்த" மனநிலையில் பெரும்பான்மை இன சமூகம் தன்னை நிறுத்தி இருந்தது அத்தோடு நாளுக்கு நாள் பரவிய கருக்கலைப்பு, வியாபார மோசடி ,வாள்கள் போன்ற வதந்திகள் உண்மைகளை , மூடி மறைத்ததுடன் ஊடகங்களும் ஒரு வதந்தி இலங்கையை உருவாக்கி இருந்தன.

#முஸ்லிம்_சமூக_ஒற்றுமை,
இவ்வாறான நிலைமை, முஸ்லிம் என்ற காரணத்திற்காகவே தாம் தண்டிக்கப்படுகின்றோம் என்ற மன்நிலையை முஸ்லிம்களிடம் உண்டு பண்ணியதுடன், இதற்கான அவசர தீர்வையும் காண வேண்டி இருந்ததுடன், இதன் அழுத்தம் அரசியல் தலைவர்களை தமது ஆடம்பர பதவியை விட்டும் ,அத்தியவசியமான தமது சமூகத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளியது,
#அமைச்சரவை_புறக்கணிப்பு,
குறித்த முடிவு ,இனவாதிகள் எதிர்பார்க்காத ஒன்று, ரத்ன தேரர் என்ற அம்பின் மூலம் தனித்தனியாக வேட்டையாட நினைத்த இனவாதிகளுக்கு எல்லோரும் இணைந்து கூண்டோடு பறந்து சென்றது அதிர்ச்சியான செய்தியே ஆகும், இந்த முடிவு முஸ்லிம்களின் பலவகையான அவலங்களுக்குத் தீர்வாக அமைந்துள்ளது,
1). முஸ்லிம் அரசியல்வாதிகள் "வாசி" சமூகம் என்ற மன நிலையில் இருந்து விடுபட வைத்திருக்கின்றது,
2).குற்ற விசாரணைக்கான ஒத்துழைப்பை சரியான முறையில் வழங்கி உள்ளது,
3) அரசுக்கும் நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் முஸ்லிம் பிரச்சினைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது,
4). கட்சி, நிற பதவி பேதங்களுக்கு அப்பால் முஸ்லிம் என்ற அந்தஸ்த்து உயர்வானது அது ஒன்றிணைக்கும் சக்தி என்பது இதில் வெளிக்காட்டப்பட்டுள்ளது,
5) தேவையற்ற வன்முறை, கலவரத்தில் இருந்து மக்களை பாதுகாத்து உள்ளது,
6).எல்லாவற்றுக்கும் மேலாக, அப்பாவி முஸ்லிம் சமூகத்தின் குற்றவுணர்வு, மற்றும் அச்ச மனநிலையை தூக்கி வீசி மீண்டும் புத்துணர்ச்சியையும், தைரியத்தையும் வழங்கி உள்ளது,
அந்தவகையில் இந்த முடிவு இன்றைய நிலையில் மிக முக்கியமான தந்திரோபாயம் என்பதுடன் அரசியல் புலமையையும் வெளிக்காட்டுகின்றது, அதனாலயே இனவாதிகளை மிக அதிர்ச்சிக்குட்படுத்தி உள்ளது எனலாம்.
#எதிர்கால_நடவடிக்கை
இந்த முடிவு அரசியல் அரங்கிலும், பெரும்பான்மை சமூகத்திலும் பல்வேறு குற்ற மனநிலைகளை ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தி உள்ளதுடன், முஸ்லிம்சமூகத்தினதும், அரசியலினதும் அவசியத்தையும், சர்வதேச முஸ்லிம் பலத்தையும் உணரச் செய்துள்ளது அதன்விளைவே மகா நாயக்கர்களின் அழைப்பு,
அந்தவகையில் இதுவரை காலமும் எமது அவலங்களைக் காது கொடுத்துக் கேளாத ஆட்சியாளர்களுக்கு எமது பக்க நிலைமையை தெளிவு படுத்துவதுடன்,
பௌத்த மதத்தலைவர்களையும் சந்தித்து எமது பிரச்சினைகளை தெளிவு படுத்துவதுடன், முஸ்லிம்களைப் பற்றி வீணாக பரப்பப் பட்ட வதந்திகளையும் உரிய ஆதாரங்களுடன் களைவதற்கான காலப்பகுதியாகவும் இதனைப் பயன்படுத்துவதுடன், அதற்கான சிறந்த வேலைத் திட்டங்களையும் முன்வைத்து, மீண்டும் இந்நாட்டில் ஒரு மதிப்பு வாய்ந்த சமூகமாக வாழ இந்தச் சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்துவதுடன்,எதிர்கால பேரம் பேசலை அரசியல்வாதிகள் சமூகத்தை பாதுகாக்கும் விடயங்களுக்கு பயன்படுத்துவதே இன்றைய காலகட்டத்தின் சாணக்கியமான வழி முறையாக அமையும் எனலாம்...

முபிஸால் அபூபக்கர்

5 கருத்துரைகள்:

அன்பரது கட்டுரை மேலோட்டமாகப் பார்க்க சிறப்பாக இருப்பினும் தௌஹீத்_பயங்கரவாதம் என்ற பிரயோகம் அவரது இயக்க சார்பு மத வெறித்தனத்தை தெளிவுபடுத்துகிறது. தௌஹீத் என்றால் ஏகத்துவம், ஓரிறைக் கொள்கையை விபரிக்கும் ஒரு சொற்பிரயோகம். இது இஸ்லாத்தின் அடிப்படை, ஆணிவேர்.

இவ்வாறான கட்டுரைகளில் பயங்கரவாதத்துடன் தௌஹீதை இணைத்துப் பேசுவதை பொறுப்பு வாய்ந்த ஊடகமாக முற்றாகத் தடை செய்யுங்கள்.

முபிஸாலின் கருத்துக்கள் சில முஸ்லிம் சமுதாயத்தை காட்டிக் கொடுப்பது, ஆபத்தானவை.இன்றைய சூழலில் ஆபத்தான கருத்துக்களை பரப்ப களமைத்துக் கொடுப்பது சமூகத்துக்கு நல்லதல்ல

இந்த நாட்டில் முஸ்லிம் மக்களாக வாழப் பழகுங்கள்.அல் குர்ஆனும் நபி வழியும் மாத்திரமே முஸ்லிம்களுக்குத் தேவை. வஹாபிகளால் தான் நாங்கள் எதனாலும் துடைத்து அழிக்க முடியாத பழியைச் சுமக்கிறோம். யாருக்கும் வெளியே செல்ல முடியாது. போகும் இடமெல்லாம் இழிவு படுத்திப் புறக்கணிக்கப் படுகிறோம். நோயாளிகள் வீடுகளுக்குள் இறந்து போகிறார்கள். படுபாவி வஹாபிகளே! முஸ்லிம் மக்களாக இந்த நாட்டில் வாழுங்கள். உங்கள் கேடு கெட்ட கொள்கைகளைக் தூக்கி எறியுங்கள். நாம் மீள முடியாத ஆபத்தில் சிக்கியுள்ளோம். உங்களுக்குள் ஏன்டா இன்னும் வாதங்கள்?

இந்த நாட்டில் முஸ்லிம் மக்களாக வாழப் பழகுங்கள்.அல் குர்ஆனும் நபி வழியும் மாத்திரமே முஸ்லிம்களுக்குத் தேவை. வஹாபிகளால் தான் நாங்கள் எதனாலும் துடைத்து அழிக்க முடியாத பழியைச் சுமக்கிறோம். யாருக்கும் வெளியே செல்ல முடியாது. போகும் இடமெல்லாம் இழிவு படுத்திப் புறக்கணிக்கப் படுகிறோம். நோயாளிகள் வீடுகளுக்குள் இறந்து போகிறார்கள். படுபாவி வஹாபிகளே! முஸ்லிம் மக்களாக இந்த நாட்டில் வாழுங்கள். உங்கள் கேடு கெட்ட கொள்கைகளைக் தூக்கி எறியுங்கள். நாம் மீள முடியாத ஆபத்தில் சிக்கியுள்ளோம். உங்களுக்குள் ஏன்டா இன்னும் வாதங்கள்?

இந்த நாட்டில் முஸ்லிம் மக்களாக வாழப் பழகுங்கள்.அல் குர்ஆனும் நபி வழியும் மாத்திரமே முஸ்லிம்களுக்குத் தேவை. வஹாபிகளால் தான் நாங்கள் எதனாலும் துடைத்து அழிக்க முடியாத பழியைச் சுமக்கிறோம். யாருக்கும் வெளியே செல்ல முடியாது. போகும் இடமெல்லாம் இழிவு படுத்திப் புறக்கணிக்கப் படுகிறோம். நோயாளிகள் வீடுகளுக்குள் இறந்து போகிறார்கள். படுபாவி வஹாபிகளே! முஸ்லிம் மக்களாக இந்த நாட்டில் வாழுங்கள். உங்கள் கேடு கெட்ட கொள்கைகளைக் தூக்கி எறியுங்கள். நாம் மீள முடியாத ஆபத்தில் சிக்கியுள்ளோம். உங்களுக்குள் ஏன்டா இன்னும் வாதங்கள்?

Post a comment