Header Ads



பாராளுமன்றத்தில் தமிழ்மொழியில், நடந்த 50 ரூபா விவாதம்


தோட்­டத்­தொ­ழி­லாளர் கொடுப்­ப­னவு விவ­காரம் குறித்து சபையில் அமைச்சர் இரா­தா­கி­ருஷ்­ண­னுக்கும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளான  மஹிந்­தா­னந்த அளுத்கமகே மற்றும்  நிமல் லான்ஸா ஆகியோருக்கும்  இடையில் நேற்று சபையில் தமிழில் வாக்குவாதம் இடம்­பெற்­றது.

தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு 50 ரூபா­வைக்­கூட  கொடுக்க முடியாத அர­சாங்­கத்தில்  நீங்கள் இருக்க வேண்­டுமா என  எதிர்க்கட்சி எம்.பி.க்களான மஹிந்­தா­னந்த அளுத்கமகே, நிமல் லான்ஷா ஆகியோர் அமைச்சர் இரா­தா­கி­ருஷ்­ண­னிடம் கேள்வி எழுப்­பினர். 

அதற்கு பதில் தெரி­வித்த அமைச்சர் இரா­தா­கி­ருஷ்ணன் நீங்கள் அரசாங்­கத்தை அமை­யுங்கள்.அப்­போது பார்க்­கலாம் என்றார்.   

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­ கி­ழமை இடம்­பெற்ற அவ­ச­ர­கால சட்­டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்­ப­தற்­கான விவா­தத்­தின்­போதே  இந்தச் சர்ச்சை இடம்­பெற்­றது. 

 அமைச்சர் இரா­தா­கி­ருஷ்ணன் உரை­யாற்றத் தொடங்­கி­ய­போது குறுக்­கிட்ட எதிர்க்­கட்சி எம்.பி.யான  மஹிந்­தா­னந்த அளுத்கமகே:- தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு 50 ரூபா கூடக் ­கொ­டுக்­காத இந்த அரசில் நீங்கள் தொடர்ந்தும் இருக்க வேண்­டுமா? 50 ரூபா கொடுப்­ப­தாக சொன்­னீர்­களே. அது எங்கே?அந்த 50 ரூபா­வுக்கு ஒரு சுருட்டுக்­கூட வாங்க முடி­யாது. 

ஏன் ஒரு இறாத்தல் பாண் கூட வாங்க முடி­யாது. அரசை விட்டு எப்­போது வெளி­யே­று­வீர்கள்? 50 ரூபா­வைக்­கூட தோட்­டத் ­தொ­ழி­லா­ள­ருக்குக் கொடுக்க மறுக்கும் இந்த அர­சாங்­கத்தில்  நீங்கள் தொடர்ந்தும் இருக்க வேண்­டுமா? என தமிழ் மொழியில் கேள்­விக்­க­ணை­க­ளைத் ­தொ­டுத்தார். 

இதற்கு பதில் அளித்த அமைச்சர் இரா­தா­கி­ருஷ்ணன்:- நான் 50 ரூபா கொடுப்­ப­தாகக் கூற­வில்லை. அமைச்சர் நவீன் திஸா­நா­யக்­கதான் கொடுப்­ப­தா­கக்­கூ­றினார். அந்த 50 ரூபாவை நாம் எப்­ப­டியும் பெற்றுக்­கொ­டுப்போம். கொஞ்சம் பொறுத்­தி­ருங்கள். என்னை அரசை விட்டு வெளி­யே­யு­மாறு கூறு­கின்­றீர்கள்.

 நீங்கள் முதலில் அர­சொன்றை அமை­யுங்கள். அப்­போது நான் அரசை விட்டு வெளி­யே­று­வது தொடர்பில் யோசிக்­கின்றேன் என அமைச்சர் இரா­தா­கி­ருஷ்ணன் பதில்  கூறினார். 

இதன்­போது எழுந்த எதிர்க்­கட்சி எம்.பி.யான நிமல் லான்­ஷாவும் தமிழ் மொழியில் உங்கள் தலைவர் திகாம்­பரம் 50 ரூபா தருவேன் எனக்­ கூ­றினார் தானே என்றார். அப்­போது எனது தலைவர் திகாம்­பரம் அல்­ல­வென அமைச்சர் இரா­தா­ கி­ருஷ்ணன் மறுத்தார். 

சரி அப்­ப­டி­யானால் 6 பேரைக்­கொண்ட உங்கள் கூட்டம் தரு­வ­தாகச் சொன்­னது தானே என நிமல் லான்ஷா எம்.பி.கேட்ட­ போது, உங்கள் நீர்கொழும்பில் பல பிரச்­சி­னைகள் உள்­ளன. 

நீங்கள் முதலில் அதனைப் பாருங்கள். அங்கு கிறிஸ்தவ மக்கள் அடிபட்டுக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யுங்கள். 50 ரூபா பிரச்சினையை நாம் பார்க்கின்றோம் என அமைச்சர் இராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.

1 comment:

  1. அது போல்தான் மலையகம்,கொழும்பு,ஊவா,சப்கமுவ, இன்னும் பல தோட்டங்களில் வாழும் மக்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் உல்லன.அதற்கு இன்னும் தீர்வு இல்லை,ஆனால் சில அரசியல் வாதிகள் கிழக்கில் கட்ட பஞ்ஞாயத்து நடத்துவதை பார்க்கும் போது,சிரிப்பாகவும்,வேடிக்கையாகவும் உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.