Header Ads



3 முஸ்லிம் அரசியல்வாதிகளும், இராஜினாமா செய்யக்கூடாது

ஆளுனர்கள் ஹிஸ்புல்லாஹ், ஆஸாத் ஸாலி மற்றும் அமைச்சர் றிஷாத் தாமாக இராஜினாமா செய்ய வேண்டியதில்லை.

இந்த நாட்டில் ஒரு அரசு இருக்கிறது, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படைகள் இருக்கின்றன.

பொளத்த தர்மத்தைப் பாதுகாக்க உத்தியோக பூர்வமான நான்கு மதகுருபீடங்கள் இருக்கின்றன.

சிங்கள இனத்தைப் பாதுகாக்க 70% மக்களும் புத்திஜீவிகளும் இருக்கின்றார்கள்.

அரசியல் உள்நோக்கங்களுடன் அரசியல்வாதி பிக்கு ஒருவரும், அரசியல் அதிகார பொதுமன்னிப்பு பெற்று சிறைமீண்ட பிக்கு ஒருவரும் மேற்கொள்ளும் அச்சுறுத்தலுக்காக ஒரு சமூகத்தின் பிரதிநதிகள் தாமாக இராஜினாமா செய்வது பிழையான முன் உதாரணமாகும்.

இந்த மூவரினதும் தனிப்பட்ட அரசியலுக்கு அப்பால் இந்த இந்த விடயத்தை நாம் அணுக வேண்டும்.

நாளை இன்னுமொரு மற்றுமொரு பிக்கு முஸ்லிம் விரோத கோரிக்கையுடன் நோன்பிருக்கலாம், இது எங்கு போய் முடியும்?

நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சரவையும் அவர்கள் விடயத்தில் முடிவை எடுத்து வைத்திருப்பதா அல்லது விலக்குவதா என்பதனை தீர்மானிக்கட்டும்.

தேவைப்படின் மூவரும் முஸ்லிம் சிவில் தலைமைகளையும் கலந்தாலோசிக்கட்டும்.

ஜனாதிபதி பிரதமர் இணங்கும் பட்சத்தில் இவர்கள் மாத்திரம் நீங்காது பாராளுமன்றில் மூன்றில் இரு பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தி காபந்து அரசின் கீழ் பொதுத்தேர்தலை நடத்துங்கள்.

அரசியல் சதுரங்க ஆட்டத்தில் முஸ்லிம்களை தொடர்ந்தும் பலிக்கடா ஆக்காதீர்கள்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

8 comments:

  1. Yes. Don't resign. Let the racists bigots to do whatever they want. Buddhist extremists are having a hidden agenda in their actions.

    ReplyDelete
  2. மிகவும் சிறந்த ஆலோசனை

    ReplyDelete
  3. முஸ்லிம்களுக்கு சோதனையான காலகட்டம் இது. ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் ஆளையே கடிக்கிற அளவுக்கு பேரினவாதம் இன்று முஸ்லிம்கள் மீது வெறிகொண்டு தலைவிரித்தாடுகின்றது. அதன் வெளிப்பாடே முஸ்லிம் தலைவர்களை பதவி விலகச் சொல்லி ஊளை இடுகிறது.

    வெளிநாட்டின் இஸ்லாமிய விரோத ஏகாதிபத்தியமும் உள்நாட்டின் அரசியல் அதிகார மோகமும் அன்மை காலமாக முஸ்லிம்கள் மீது அரசியல் சதுரங்கம் ஆடத்தொடங்கியது.ஆனால் முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தி காரணமாக அந்த ஆட்டத்தை முறியடித்து ஜனநாயக முறையில் தேசிய அரசியல் நீரோட்டத்தில் பயணத்தை தொடர்ந்து செல்ல முஸ்லிம் தலைமைகளுக்கு முடிந்தது. இந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் கனவிலும் நினைத்திராத இஸ்லாத்தில் அனுமதி இல்லாத கொலைக்கார ஸஹ்ராணிய குண்டுத் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலை ஒரு வாய்ப்பாக கையில் எடுத்துக் கொண்டு முஸ்லிம் தலைமைகளை பழிவாங்கும் ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி பொய் குற்றச் சாட்டுக்களை முன்வைத்து இன்று அவர்களை பதவி விலக வேண்டும் என்று ஊளை இடுகிறது அந்த அதிகார மோகம் கொண்ட பேரினவாதம்.

    குற்றம் நிறூபிக்கப்பட்ட பின்பே ரவிகருனாநாயக்க சாகல ரத்நாயக்க போன்றவர்கள் அமைச்சுப் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்கள். இன்று பொது எதிரணியினரால் பொய்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் ஆளுணர்களான அசாத்சாலி மற்றும் ஹிஸ்புள்ளா ஆகியோர் செய்த குற்றம் நிரூபிக்கப்படாதவரை பதவி விலக வேண்டிய அவசியமே இல்லை.
    பாதுகாப்பும் சட்டமும் ஒழுங்கும் அரச நிருவாக கட்டமைப்பும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் சட்ட ரீதியான ஓர் அரசாங்கம், எதிர்கட்சிகளின் ஊளையிடுதலுக்குப் பயந்து பதவி நீக்கம் செய்தால் அல்லது பதவி நீக்கக் கோருவது எந்த வகையிலும் நியாயமாகாது.ஜனநாயகமுமாகாது.

    ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவை பதவியில் கொண்டுவருவதற்கும், பிரதமர் ரனில் அவர்களை பதவியில் அமர்த்துவதற்கும் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் தன்னை அர்ப்பணித்து ஜனநாயக ரீதியில் போராடி இந்த இருவருக்கும் முக்கிய பங்களிப்பை செய்தவர் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் என்பதை இந்தக் கட்டத்தில் அந்த இருவரும் நன்றியுணர்வுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.
    அரசாங்கம் என்ற ரீதியில் உண்ணா விரதிகளையும் இனத்துவேசம் கொண்டவர்களையும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும்,பிரதம மந்திரியும் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் எங்கள் வாதமாகவும்.
    மலேசியாவிலிருந்து...

    ReplyDelete
  4. Do not resign. This is a democratic country. you are elected by people not by any monks.

    ReplyDelete
  5. Do not resign. This is a democratic country. you are elected by people not by any monks.

    ReplyDelete
  6. not to resign at all, let them proof if our politician guilty.

    ReplyDelete
  7. பேராசிரியர் தீன் முஹமத் சேர் அவர்களின் ஆதங்கம் புரிகின்றது தங்களுக்கு விலாவாரியாக விளக்கத் தேவையில்லை. பின்வரும் விடயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
    1. பேரினச் சமூகத்தை தொடர்பு சாதனங்களும் அரசியல் வாதிகளும் மூளைச் சலவை செய்து வைத்திருக்கும் விதம்.
    2. இலங்கையில் சிறுபான்மையாக சிறைக் கூட்டுக்குள் வாழ்வதைப் போன்று முங்லீங்கள் வாழும் பிரதேசங்கள். பேரினவாதிகள் சுற்றி வழைத்தால் அவர்கள் உயிர் வாழ பௌத்த மதத்தை பின்பற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. மலேசியா சென்றதன் பின்பு எங்களுடைய situation ஐ மறந்து விட்டீர்கள் போலும்.
    3. தீர்மானம் எடுக்க வேண்டியவர்களின் அரசியல் எதிர் காலம் சிங்கள மக்கள் எல்லோரும் ஒரு பக்கம் இருக்க எதிரான தீர்மானங்கள் என்பது எதிர்கட்சிகளில் இருப்போருக்கு வலுச் சேர்க்கும். அது இன்னும் ஆபத்தில் முடியும்.
    அகழி தோண்டி யுத்தம் செய்த சம்பவத்துக்கு ஒத்த நிகழ்வு.
    அமைச்சரிடம் ராஜ தந்திர குறைபாடு காணப்படுகின்றது உங்களின் கணிப்பீடு எவ்வாறானது என்பதனை யான் அறியேன் பராபரமே.

    ReplyDelete
  8. தனி ஒரு பௌத்த பிக்கு பாராளுமன்ற
    உறுப்பினர் இந்த நாட்டின் நீதி நியாயம்
    சட்டம் ஒழுங்கு இனநல்லிணக்கம் போன்றவைகளை சவாலுக்கட்படுத்தி
    அரசியல் ஆதாயம் தேடமுற்படுவதை
    இந்தஅரசாங்கம் பார்த்துக்கொண்டிருந்தால் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற
    அத்தனை பேரயும் என்னவென்று
    சொல்வது? இதில் முஸ்லீம் அரசியல்
    வாதிகள் மட்டுமல்ல இந்த அரசால் அரசியல் நியமனம் வழங்கப்பட்ட அத்தனை முஸ்லீம் அதிகாரிகளும்
    பதவி திறந்து ஒற்றுமையை காட்டுவதே
    முன்மாதிரியாகும்.

    ReplyDelete

Powered by Blogger.