Header Ads



சஹ்ரானின் முதல் தாக்குதலுக்கு, பயன்படுத்தப்பட்ட 2 மோட்டர் சைக்கிள்கள் இன்று மீட்பு


ஐ.எஸ்.ஐ.எஸ். சஹ்ரானின்  முதல் முதல் தாக்குதலான மட்டக்களப்பு  வவுணதீவில் பொலிசாரை சுட்டுக் கொலை செய்ய பயன்படுத்திய இரு மோட்டர் சைக்கிள்களை காத்தான்குடி மற்றும் ரிதிதென்னை பிரதேசத்தில் இன்று சி.ஐ.டி.யினர் மீட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கடந்த வருடம் நவம்பர் 29 ஆம் திகதி வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவரை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு கைது துப்பாக்கியை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு தலமை தாங்கிய சவுதி அரோபியாவில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த  முகமது ஆப்தீன் மில்ஹான், மற்றும் சஹ்ரானின் சாரதியான கபூர் ஆகிய இருவரும்  பயன்படுத்திய மோட்டர் சைக்கிளை காத்தான்குடியில் உள்ள மில்ஹானின் வீட்டில் வைத்தும்.

பொலனறுவை மட்டக்களப்பு எல்லைப்  பிரதேசமான ரிதிதென்னை பகுதியில் வைத்து சாரதியான கபூரின் நண்பனின் வீட்டில் வைத்து ஸ்கூட்டி ரக‍ மோட்டார் சைக்கிள்கள் ஆகிய இரு மோட்டர் சைக்கிள்களை மீட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.