Header Ads



ISIS வருகையினால் தமிழர்கள், எதிர்நோக்கும் சவால்கள் குறித்து தமிழ் கூட்டமைப்புடன் ஆராய்வு

புதிய சவால்களை எதிர்நோக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவரின் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது இஸ்லாமிய ஸ்டேட், அடிப்படைவாதத்தின் வருகையினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் குறித்து ஆராயப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகம் எதிர்நோக்கி வரும் புதிய சவால்களை கூட்டாக இணைந்து எதிர்நோக்குவது என இன்றைய சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. திரு மனோ கணேசனின் இந்த செயற்பாடு இனத்துவேசத்தின் மற்றொரு வெளிப்பாடா?
    இந்த நாட்டில் சிறுபான்மையாக தமிழர்களும், முஸ்லிம்களும் பெரும்பான்மை அரசிடமிருந்து பல சவால்களையும் முட்டுக் கட்டைகளையும் எதிர்நோக்கும்போது, குறிப்பாக, மனநோயால் பாதிக்கப்பட்ட சில முஸ்லிம் பெயரைக்கொண்ட பயங்கரவாதிகள் செய்த அட்டூழியம், மனிதப்படுகொலை உற்பட, எதிர்காலத்தில் மனித இனத்தை அழிக்க அந்த பயங்கரவாதிகளின் சூழ்ச்சிகளை முழு நாடும், அத்தனை கட்சிகளும் இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்துசெயல்பட்டு அந்த பயங்கரவாத த்தை ஒழித்துக்கட்ட ஒருமுகப்பட்ட திட்டத்துடன் செயல்படுவதற்குப் பதிலாக ஒரு குறிப்பட்ட இனத்துக்கு ஏற்படவிருக்கும் பாதகமான விளைவுகள் பற்றி ஆராய்ந்து மற்ற சிறுபான்மையை மறக்கடிப்பது இனவாத த்தின் மற்றொரு வடிவம்போல் தோன்றுகின்றது.அமைச்சரிடமிருந்து பகிரங்கமான பதிலை எதிர்பார்க்கின்றோம்.

    ReplyDelete
  2. No need Tamil or Muslim state at this county. We need the one country with peace & prosperity

    ReplyDelete

Powered by Blogger.