Header Ads



மொராக்கோ இலங்கைக்கு மேலதிக தகவல், IS திட்டமிட்ட ஏனைய தாக்குதல்களை முறியடிக்க உதவியது

இலங்கையில் இரண்டாவது சுற்று தாக்குதல்கள் இடம்பெறுவதை தடுப்பதற்காக இந்தியா மெராக்கோவுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுத்துள்ளது என  இந்தியாவின் எகனமிக்டைம்ஸ் இந்தியன் டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது

இதனை தென்னாசியாவில் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக இடம்பெற்ற வெற்றிகரமான நடவடிக்கை என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

ஐஎஸ் அமைப்பினர் குறித்து பல தகவல்களை தன்வசம் வைத்துள்ள மொராக்கோ இலங்கையில் மற்றுமொரு தாக்குதல்களை தடுப்பதற்கு இந்தியாவிற்கு தகவல்களை வழங்கியது என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

மொராக்கோ  இலங்கைக்கு மேலதிக தகவல்களையும் வழங்கியது இந்த தகவல்கள் ஐஎஸ் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த ஏனைய தாக்குதல்களை முறியடிப்பதற்கு உதவியது என விசாரணைகளுடன் தொடர்புடையவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்கள் இடம்பெற்ற சில மணிநேரத்தில் ஒன்பது தற்கொலை குண்டுதாரிகளையும் அடையாளம் காண்பதற்கான முக்கிய தகவல்களை மொராக்கோவே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் வழங்கியுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கான வலுவான கட்டமைப்புகளை மொராக்கோ  உருவாக்கியுள்ளது என தெரிவித்துள்ள இந்திய ஊடகம் அமெரிக்கா பிரான்ஸ் ஸபெயின் இந்தியாவுடன் அந்த நாடு பாதுகாப்பு உடன்படிக்கைகளை செய்துகொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

2 comments:

  1. Thanks to Morocco and especially to India.
    Now i understand why srilankan muslims always oppose India.

    ReplyDelete

Powered by Blogger.