Header Ads



IS பயங்கரவாதியின் கராத்தே குரு துவான் மாஸ்டர் - இலங்கையில் தொடரும் கைதுகள்

(எம்.எப்.எம்.பஸீர்)

ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­க­ளுடன் இணைந்து சிரி­யாவில் பயிற்­சி­களை முன்­னெ­டுத்­தி­ருந்த போது 2015 ஆம் ஆண்டு கொல்­லப்­பட்ட மொஹம்மட் ஷப்ராஸ் நிலாம் அஹமட் என்­ப­வ­ருக்கு கராத்தே கற்­றுக்­கொ­டுத்தார் எனக் கூறப்­படும் சர்­வ­தேச கராத்தே சங்கம் ஒன்றின் பிர­தான பயிற்­று­விப்­பாளர் ஒரு­வரை 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரிக்க நார­ஹேன்­பிட்டி பொலி­ஸா­ருக்கு பாது­காப்பு அமைச்சு அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

தேசிய உள­வுத்­துறை வழங்­கிய தக­வல்­க­ளுக்­க­மைய கொழும்பு 5, டொரிங்டன் மாவத்­தையைச் சேர்ந்த துவான் மாஸ்டர் என அறி­யப்­படும் துவான் அசார்தீன் சாலிஹீன் சல்தீன் என்­ப­வரே நார­ஹேன்­பிட்டி பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு இவ்­வாறு 90 நாட்கள் தடுத்து வைத்து விசா­ரணை செய்­வ­தற்­கான அனு­மதி பெறப்­பட்­ட­வ­ராவார்.

இந்­நி­லையில் பாது­காப்பு அமைச்­சி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்ட அந்த அனு­மதி கொழும்பு மேல­திக நீதிவான் சலனி பெரே­ரா­வுக்கு நேற்று நார­ஹேன்­பிட்டி பொலி­ஸாரால் சமர்ப்­பிக்­கப்­பட்ட நிலையில், அவரை மீள ஆகஸ்ட் நான்காம் திகதி மேற்­பார்­வைக்­காக முன்­னி­லைப்­ப­டுத்த பொலி­ஸா­ருக்கு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டது.

துவான் மாஸ்­ட­ருடன் சேர்த்து மற்­றொரு நபரும் தேசிய உள­வுத்­துறை ஆலோ­ச­னைக்­க­மைய கைது செய்­யப்­பட்டு நேற்று நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு 90 நாள் தடுப்புக் காவலின் கீழ் நார­ஹேன்­பிட்டி பொலி­ஸாரால் தடுப்பில் எடுக்­கப்­பட்­டுள்ளார். அவர் சமூக வலைத்­த­ளங்கள் ஊடாக பயங்­க­ர­வாத ஆத­ரவு பிர­சா­ரங்­களை செய்­த­தாக தெரி­வித்தே கைது செய்­யப்பட்­டுள்ளார்.

இத­னி­டையே உயிர்த்த ஞாயிறு தற்­கொலைத் தாக்­கு­தல்­களில் ஷங்ரி -லா ஹோட்­டலில் தற்­கொலைத் தாக்­கு­தல்­களை நடத்­திய தற்­கொ­லை­தா­ரி­க­ளுடன் தொலை­பே­சியில் நெருங்­கிய தொடர்பில் இருந்­த­தாகக் கூறி பம்­ப­லப்­பிட்டி பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட அப்­ப­கு­தியைச் சேர்ந்த மொஹம்மட் முபாரக் முப்ஷல் எனும் சந்­தேக நப­ரையும் 90 நாள் காவலில் எடுத்து விசா­ரிக்க பாது­காப்பு அமைச்சு அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

அத்­துடன் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்ட தெஹி­வளை ட்ரொபிகல் இன் தங்­கு­வி­டுதி தற்­கொலை குண்­டு­தா­ரி­யான அப்துல் லதீப் ஜமேல் மொஹம்­மட்டின் மாமனார் முறை­யி­லான சந்­தேக நபர் ஒரு­வரை எதிர்­வரும் ஜூன் 10 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கொழும்பு மேல­திக நீதிவான் பிரி­யந்த லிய­னகே உத்­தர­விட்டார்.

துவான் மாஸ்­டரின் கைது:ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த முத­லா­வது இலங்­கையர் என தக­வல்கள் வெளி­பப்­டுத்­தப்­பட்­டுள்ள மொஹம்மட் முஷின் இஷாக் அஹமட், மொஹம்மட் ஷப்ராஸ் நிலாம் அஹமட் ஆகிய சகோ­த­ரர்­களில், ஷப்ராஸ் நிலாம் அஹமட் சிரி­யாவில் வைத்து அமெ­ரிக்க வான் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­டி­ருந்தார். இந்­நி­லையில் கொல்­லப்­பட்ட குறித்த பயங்­க­ர­வா­திக்கு இந்­நாட்டில் வைத்து கராத்தே கலையை ‘ சென்சே துவான் மாஸ்டர் ‘ என்­பவர் பயிற்­று­வித்­துள்­ள­தாக உள­வுத்­துறை தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.


பயங்­க­ர­வாதி ஷப்­ராஸின் மக­னுக்கு குறித்த துவான் மாஸ்டர் கராத்தே கற்றுக் கொடுத்­துள்­ள­தா­கவும் இதன்­போதே ஷப்ராஸ் தனக்கும் கராத்தே கற்­றுக்­கொள்ள வேண்டும் எனக் கூறி இதனை 2008 ஆம் ஆண்டு கற்றுக் கொண்­டுள்­ள­தாக அந்த தக­வல்­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது. இந்த கராத்தே பயிற்­று­விப்பு நட­வ­டிக்­கைகள் தெமட்­ட­கொடை பகு­தியில் உள்ள தெளஹீத் பள்­ளி­வாசல் ஒன்றில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக உள­வுத்­துறை தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளன.

அப்­போது பயங்­க­ர­வாதி ஷப்ராஸ் நிலாம் அஹமட் கொலன்­னாவ பகு­தியில் சர்­வ­தேச பாட­சாலை ஒன்றின் அதி­ப­ராக செயற்­பட்­டுள்­ள­துடன் சட்­டத்­த­ர­ணி­யான அவர் பல வழக்­குகள் தொடர்பில் நீதி­மன்­றிலும் ஆஜ­ரா­கி­யுள்­ள­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யி­லேயே 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 6 (1) ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட தடுப்புக் காவல் உத்­த­ர­வுக்­க­மைய கராத்தே பயிற்­று­விப்­பாளர் துவான் மாஸ்­டரை நார­ஹேன்­பிட்டி பொலிஸார் விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இதே­வேளை துவான் மாஸ்­டரின் இரு மகன்­மாரை கறு­வாத்­தோட்டம் பொலிஸார் கைது செய்து விசா­ரித்து வரு­கின்­ற­மையும்
சுட்­டிக்­காட்டத்­தக்­கது.

பம்­ப­லப்­பிட்டி கைது:
பம்­ப­லப்­பிட்டி பகு­தியில் பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்பு வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டுக்­காக அந்த பகு­தியைச் சேர்ந்த மொஹம்மட் முபாரக் முப்ஷல் என்­பவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். அவர் ஷங்ரி -லா ஹோட்­டலில் தற்­கொலைத் தாக்­குதல் நடத்­திய இல்ஹாம் அஹமட் மற்றும் மொஹம்மட் சஹ்ரான் ஆகி­யோ­ருடன் தொலை­பே­சியில் தொடர்பில் இருந்­துள்­ள­தாக பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

அவ­ரது தொலை­பே­சி­யி­லி­ருந்து சில புகைப்­ப­டங்கள் உள்­ளிட்ட தர­வுகள் மீட்­கப்­பட்­டுள்ள நிலையில் அவரைத் தடுத்து வைத்து விசா­ரிக்க பாது­கா­ப்பு அமைச்­சி­ட­மி­ருந்து பெறப்­பட்­டுள்ள தடுப்புக் காவல் உத்­த­ரவு கொழும்பு மேல­திக நீதிவான் சலனி பெரே­ரா­வுக்கு நேற்று சமர்ப்­பிக்­கப்பட்­டது. இந் நிலையில் சந்­தேக நபரை மீள ஜூலை 22 ஆம் திகதி மேற்­பார்­வைக்­காக நீதி­மன்றில் ஆஜர் செய்ய நீதிவான் உத்­த­ர­விட்டார்.

ஷேக் பாஹிம் நிசாமின் கைது:
கொஹி­ல­வத்தை – அங்­கொட பகு­தியைச் சேர்ந்த ஷேக் பாஹிம் நிசாம் எனும் குறித்த நபர் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் வெல்­லம்­பிட்டி பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்ட நிலையில் நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் பிரி­யந்த லிய­னகே முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டார். குறித்த சந்­தேக நபர் பயங்­க­ர­வாதி ஸஹ்­ரா­னுடன் தொலை­பேசி வாயி­லாக மிக நெருங்­கிய தொடர்பில் இருந்­த­தாக வெல்­லம்­பிட்டி பொலிஸார் விசா­ர­ணை­களில் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்ள நிலையில், அது தொடர்பில் ஆராய சந்­தேக நபரின் தொலை­பேசி விபரக் கொத்தைப் பெற்றுக்கொள்ள நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டது.

அத்­துடன் குறித்த சந்­தேக நப­ரான ஷேக் பாஹிம் நிசாமின் முதல் திரு­ம­ணத்தில் கிடைத்த மகளே தெஹி­வளை ட்ரொபிகல் இன் தங்­கு­வி­டு­தியில் தற்­கொலை தாக்­குதல் நடத்­திய தற்­கொ­லை­தா­ரி­யான அப்துல் லதீப் ஜமீல் மொஹம்­மட்டின் மனைவி என பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இந்­நி­லையில் அவ­ரி­டமும் விசா­ர­ணைகள் தொடரும் நிலையில் குறித்த சந்­தேக நபரை எதிர்­வரும் ஜூன் 10 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கொழும்பு மேல­திக நீதிவான் பிரி­யந்த லிய­னகே நேற்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. For Arresting Muslims using Emergency Law.
    For Arresting Sinhalese Buddhist Racist/Terrors.. using normal law.
    .... Shit Law and Order..
    End Of Peaceful SriLanka.

    ReplyDelete

Powered by Blogger.