May 04, 2019

ஹிஸ்புல்லா மீதான காழ்ப்புணர்ச்சியும், விசமப் பிரச்சாரங்களும்...!!

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மீதும் அவரது மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலும் திட்டமிட்ட வகையில் விசம பிரச்சாரங்களை சில இனவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

தீவிரவாத தாக்குதலால் முழு நாடுமே பரிதவித்துள்ள நிலையிலும் தமது சொந்த அரசியல் இலாபங்களுக்காக சமூகத்தை குழப்பும் வகையில் போலியான தகவல்களையும், கருத்துக்களையும் சிலர் வெளியிட்டு வருகின்றனர். சில கடும்போக்கு அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை தமது வங்குரோத்து அரசியலை மீள கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாகவும் - அரசியல் மூலதானமாகவும் பயன்படுத்த முனைகின்றனர்.  

ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் என்ற கோணத்தில் ஆரம்பமான மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு எதிரான பிரச்சாரம் இன்று அது பள்ளிவாசல் அல்ல பல்கலைக்கழகம்தான் என்று  புலனாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!! இருந்தாலும் விசமிகள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மீதும் அவரது அரசியல் மீதும் உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடர்ந்தும் தவறான தகவல்களையும் திரிவுபடுத்திய தரவுகளையும் வெளியிட்டு மக்களை குழப்பவே முற்படுகின்றனர். 

ஹிஸ்புல்லாஹ் என்ற தனி மனித ஆளுமைக்கு எதிரான இனவாதிகளின் போராட்டம் இன்று நேற்று ஆரம்பமானது அல்ல. வடக்கைப் போன்று கிழக்கிலிருந்தும் முஸ்லிம்களை விரட்டியடிக்க விடுதலைப்புலிகள் மேற்கொண்ட திட்டத்துக்கு அவர் முட்டுக்கட்டையாக இருந்த நாள் முதல் இன்று வரை அவர் இனவாதிகளின் பொறியாகவே உள்ளார். 

விடுதலைப் புலிகளிடமிருந்து சொந்த மண்ணையும் கிழக்கு மண்ணையும் காப்பதில் அவருக்கு இருந்த பற்றே இன்று தமிழ் அரசியல்வாதிகளுக்கு அவர் மீதுள்ள வெறுப்புக்கும் - கோபத்துக்கும் காரணம். 

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட போது அவருக்கு எதிராக போர் கொடி தூக்கிய ‘புலிக்கொடி’ ஆதரவாளர்கள் ஹர்த்தால் செய்தும் கோஷம் எழுப்பியும் எதிர்பார்த்த கனவு இன்றுவரை நனவாகவில்லை. எவர் தமே அவர்களையே மன்னித்து இன,மத பேதங்களுக்கு அப்பால் சேவை செய்த உத்தமர் ஹிஸ்புல்லாஹ்!

நாட்டில் அரங்கேறிய தீவிரவாத தாக்குதலை ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் தொடர்புபடுத்தி ஹிஸ்புல்லாஹ் மீதும் தீவிரவாத சாயம் பூசவே முஸ்லிம் விரோதிகள் முனைகின்றனர். 

ஸஹ்ரான் என்ற தீவிரவாதியுடன் தொடர்பு இருப்பதாக 2015இல் எடுத்த புகைப்படத்துடன் தொடர்புபடுத்தி நிருவுவதற்கு இனவாதிகளும் - இனவாத ஊடகங்களும் முயற்சித்தாலும் அந்த தீவிரவாதி ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக தீவிரமாகவே செயற்பட்டார் என்பது இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அன்று LTTEயின் இலக்காக இருந்த ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இன்று ISIS இன் இலக்காக இருப்பாரே தவிர அவர் அதற்கு ஒத்துழைப்பு வழங்குபர் அல்ல என்பது பாதுகாப்பு தரப்புக்கு தெட்டத்தெளிவாகியுள்ளது. இத் தலைமை கிழக்கிற்கு கிடைத்த வரப்பிரசாதமே என்பதில் ஐயமில்லை.

A.R.M. நிப்றாஸ்

5 கருத்துரைகள்:

30 வருட யுத்தத்தில் இறுதியில் கோழைகலான இந்த சொந்த இனத்தையே இறுதியில் பலிக்கடாவாக்கியவர்கலின் இனவாதத்தை யாரும் கனக்கெடுக்க வேண்டாம்

I do not agree with some politics of Dr Hizbullah. But, I agree with him with the establishment of Baticloa university. All human beings make mistakes. Politicians too do. but in this case of university establishment he has done a great job for not only Muslim community.. but also for entire Sri Lanka.. Tamil, Sinhalese and Muslim students too will benefit from this. I thank Mahinda for letting him to establish this university.
I challenge any Tamil or Sinhalese politician if they have in any influence in any where to bring that amount of money to establish this great size of university like this. I think this a huge project. It looks like Peradeniya in buildings.. So, I think that MAHINDA has done a great job for letting Dr Hizbullah to do this. why? after all it is Sri Lanka that going to benefit from this .. Today, we have more than 100.000 A/L student drops out. Why not they benefit from this? why Tamil politicians feel jealousy of it : Like dogs that do not eat straws but let not others to eat. Dr Hizbullah go ahead and do well.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க வேண்டாம். தமிழர் இவரை ஆளுநராக ஏற்க மறுப்பதற்கு காரணம் கிழக்கு மாகாணத்தில் இவர் தமிழருக்கு செய்த அட்டூழியங்களே. தமிழர் காணிகளை அடாத்தாக அபகரித்தது, தமிழ் இளைஞர்களுக்கு அரச வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டது, என்று இன்னும் பல உள்ளன, காளி கோயிலை அபகரித்தேன், முஸ்லீம்களுக்கு சார்பாக தீர்ப்பை பெற நீதிபதியையே இடம் மாற்றினேன், என இவர் மார் தட்டும் விடீயோக்கள் பல இணையத்தில் வலம் வருகின்றன. இந்நிலையில் நீர் தமிழ் அரசியல் வாதிகளை இனவாதிகள் என்கிறீர்களா? இதில் நியாயத்தை கேட்டால் புலிக்கொடி ஆதரவாளர்கள் இனவாதிகள் என்று கதை வேறு. மேலும் புலிகள் முஸ்லீம்களை கிழக்கிலிருந்து விரட்ட முயற்சித்ததும் இல்லை இவர் அதை தடுக்கவும் இல்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதை மட்டும் வைத்துக்கொண்டு அந்த அனுதாபத்தை வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதுதான் உங்கள் வேலை. ஸஹ்ரான் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக செயற்பட்டது எங்கே வெளிவந்தது? பாதுகாப்பு தரப்பிற்கு எங்கே தெட்டத்தெளிவாகியுள்ளது ? சும்மா கண்ணை மூடிக்கொண்டு பொய்யை மட்டும் எழுத வேண்டியது.
மேலும் இந்த பல்கலைக்கழகம் மீதான அதிருப்தியை சிங்கள அரசியல்வாதிகளும் தெரிவித்துள்ளனர் முடிந்தால் அவர்கள் மீதும் புலி முத்திரை குத்தி கவனத்தை திசை திருப்புங்கள் பார்ப்போம்.

Your correct hon governer go ahead

Post a comment