May 16, 2019

நாம் தைரி­ய­மாக இருக்க வேண்டும், அல்லாஹ் எப்­போதும் எங்­க­ளுடன் இருக்­கிறான் - ரிஸ்வி முப்தி

இஸ்­லாத்தின் பெயரில் நாட்டில் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களை நடத்தி அழி­வு­களைச் செய்த நாச­கார சக்­தி­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் மற்றும் ஆத­ர­வா­ளர்­களை பாது­காப்பு பிரி­வினர் குறு­கிய காலத்தில் கைது செய்­தது போன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­களை அரங்­கேற்­றி­ய­வர்கள் எவ்­வித பாகு­பா­டு­மின்றி உடன் கைது செய்­யப்­பட்டு சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பாது­காப்பு பிரி­வி­னரைக் கோரி­யுள்­ள­தாக அதன் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

கடந்த சில தினங்­க­ளாக நாட்டின் பல பகு­தி­களில் இடம்­பெற்­று­வரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் ‘விடி­வெள்ளி’ க்குத் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற இஸ்லாம் அனு­ம­திக்­காத நாச­கார செயல்­க­ளை­ய­டுத்து அதற்கு ஆத­ர­வ­ளித்­த­வர்கள், தொடர்­பு­பட்­ட­வர்கள், உதவி வழங்­கி­ய­வர்கள் அனை­வ­ரையும் குறு­கிய காலத்தில் கைது செய்து விட்­ட­தாக பொலிஸ் மா அதிபர் உட்­பட உயர் மட்ட பாது­காப்பு பிரி­வினர் தெரி­வித்­துள்­ளார்கள்.

கடந்த சில தினங்­க­ளாக இடம்­பெற்­றுள்ள முஸ்­லிம்­களின் வீடுகள், பள்­ளி­வா­சல்கள், வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் வாக­னங்கள் மீதான தாக்­குதல் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் உடன் கைது செய்­யப்­பட வேண்டும்.

சந்­தே­கத்தின் பேரில் பாது­காப்பு படை­யி­னரால் முஸ்­லிம்­களின் வீடு­களும் பள்­ளி­வா­சல்­களும் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டது போன்று வன்­மு­றை­யா­ளர்­களின் வீடு­களும் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும். இஸ்­லாத்தில் அனு­ம­திக்­கப்­ப­டாத நாச­கார செயல்கள் அரங்­கேற்­றப்­பட்­டதன் பின்பு உலமா சபை பாது­காப்பு பிரி­வி­ன­ருக்கு அனைத்து ஒத்­து­ழைப்­பு­க­ளையும் வழங்­கி­யது.

முஸ்­லிம்­களின் சக வாழ்வு பாதிக்­கப்­பட்­டுள்ள துயரம் மிக்க இந்தச் சூழலில் நாம் தைரி­ய­மாக இருக்க வேண்டும். அல்லாஹ் எப்­போதும் எங்­க­ளுடன் இருக்­கிறான் என்று நம்­பிக்கை கொள்ள வேண்டும். முஸ்­லிம்கள் தீவி­ர­வா­தத்­துக்கு ஆத­ர­வா­ன­வர்­க­ளல்ல. இஸ்­லாத்தின் பெயரால் ஒரு சில சக்­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட நாச­கார செய­லுக்கு முழு முஸ்லிம் சமூ­கமும் பொறுப்­பா­ன­தல்ல.

இன­வா­திகள் வெறி­யோடு வந்து தாக்­கு­தல்­களை நடாத்­தி­யுள்­ளார்கள். இச்­சந்­தர்ப்­பத்தில் நாங்கள் துஆக்­களில் ஈடு­பட வேண்டும். அத்­தோடு வன்­மு­றை­களால் பாதிக்­கப்­பட்­டோரின் பிர­தே­சங்­களில் அருகில் வாழும் பாதிக்­கப்­ப­டாத மக்கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு தங்களால் ஆன பொருளாதார மற்றும் உடல் ரீதியிலான உதவிகளை வழங்கலாம். ஆலோசனைகளையும் வழங்கலாம்.

முஸ்லிம்களையும் பள்ளிவாசல்களையும் பாதுகாக்கும்படி உலமா சபை நாட்டின் ஆட்சியாளர்களையும், பாதுகாப்பு பிரிவினரையும் வேண்டியிருக்கிறது’ என்றார்.

4 கருத்துரைகள்:

ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்னையை ஏற்றுக் கொண்டான்; "உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆனாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்;. எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்;. இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்" (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்;. இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு. (195)


இதுவே அல்லாஹ்வின் உறுதி காபிர்கள் உங்கள் வீட்டை அழித்துவிட்டார்கள்,பொருளாதாரத்தை குறைத்துவிட்டார்கள்,கொன்றுவிட்டார்கள் என்று கவளைப்படவேண்டாம் உங்கள் முன்னே செய்த பாவங்களை அல்லஹ் மண்ணித்துவிட்டான்.எனக்கு இந்தபாக்கியம் கிட்டவில்லை என்று வருந்துகிறேன்.

மேலும், "எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக" என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை. (147) ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்;. இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான். (148)

குனூத் ஓதி முடிச்சிட்டீங்களா?

he is the main culprit,who holds a responsible position in the community should b neutral, he has promoted n instigated one way thinking never accommodated people with different ideas.Pretty much a average moulavi not even a scholar through political patronage n thuggery ism holding on to ACJU TOP POST.

Post a Comment