Header Ads



சிஆ பல்கலைக்கழகத்தை மூடுவதென ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம

அரசறிவியல் பாடத்தின் ஊடாக, மலையக தமிழ் மாணவர்களுக்கு இஸ்லாம் மற்றும் அரேபிய மொழியை கற்பித்த அல் முஸ்தபா பல்கலைக்கழகத்தை தடை செய்யும் யோசனை ஊவா மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானைத் தளமாக கொண்டு இயங்கும் அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைகழகம், ஊவா மாகாணத்தின் 04 பாடசாலைகளை கேந்திரமாக கொண்டு வெளிவாரி பட்டப்படிப்பு பாடநெறியை முன்னெடுத்து வந்தது.

இதில் 400க்கும் அதிகமான தமிழ் மாணவர்கள் கற்கின்றனர்.

இந்த கற்கை நெறியின் ஊடாக இஸ்லாம் மற்றும் அரேபிய மொழி என்பன கற்பிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்த கற்கை நெறியை ஊவா மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதை ரத்து செய்யும் யோசனையை மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் இன்று முன்வைத்தார்.

இதற்கு ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஜேவிபி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆகிய நான்கு கட்சிகளும் ஆதரவை தெரிவித்த நிலையில், பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபை முதல்வர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நாங்கள் முஸ்லீம் களும் இதை ஏக மனதாக ஏற்றுக்கொள்கிறோம்

    ReplyDelete

Powered by Blogger.