Header Ads



முஸ்லிம் பெண்களின் ஆடைக்கு, சட்டமொன்று அவசியமில்லை - இஸ்­லா­மிய ­த­லை­வர்­க­ளே தீர்­மா­னிக்க வேண்டும்

முஸ்லிம் பெண்­களின் ஆடை தொடர்பாக ஏற்­பட்­டுள்ள எதிர்ப்­பு­களை இல்­லாது செய்ய வேண்­டு­மென்றால் இஸ்­லா­மிய மதத் தலை­வர்க­ளினால் அதற்குத் தேவையான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். இதனை சட்­டத்தின் ஊடாக செய்ய வேண்டியதில்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை தொடர்­பாக எழுந்­தி­ருக்கும் சர்ச்சை குறித்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பி­டடார். இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், 

நாங்கள் அர­சாங்கம் என்ற வகையில் சகல இனங்­களும் ஒற்­று­மை­யுடன் வாழ வேண்­டு­மென்­ப­த­னையே எண்­ணு­கின்றோம். இன்று நாட்டில் சட்­டங்­க­ளுக்குள் ஒவ்­வொரு இனங்­க­ளுக்­கி­டையே சட்­டங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கார­ணத்­தி­னா­லேயே பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­றன. பொது சட்­ட­மொன்று இருக்­கின்­றது. ஆனாலும் முஸ்லிம் மக்­க­ளுக்கும், சிங்­க­ளத்தில் மலை­நாட்டில் பிறந்­த­வர்­க­ளுக்கும் என்று சட்­டங்கள் இருக்­கின்­றன. சட்­டங்­களில் சில விட­யங்கள் மற்­றைய இனங்­க­ளுக்குப் பொருந்­து­வ­தில்லை. கலா­சார அடிப்­ப­டையில் அந்த சட்­டங்கள் உரு­வா­கின்­றன. நாங்கள் ஒரே நாடு என்ற வகையில் வாழும்­போது எல்­லோ­ருக்கும் ஒரே சட்­ட­மாக இருக்க வேண்டும்.

திரு­மண சட்­டத்தை எடுத்­துக்­கொண்டால் பொது­வாக திரு­மணம் மற்றும் விவா­க­ரத்து தொடர்­பாக சட்டம் இருக்­கின்­றது. ஆனால் முஸ்லிம் தனியார் சட்­டத்­திற்குள் திரு­மணம் மற்றும் விவா­க­ரத்து தொடர்­பாக வேறு ஒரு சட்டம் இருக்­கின்­றது. அவ்­வி­டத்­தி­லேயே நாங்கள் பிரிந்தே இருக்­கின்றோம். 2009ஆம் ஆண்டு இஸ்­லா­மிய திரு­மண சட்டம் தொடர்­பாக திருத்தம் மேற்­கொள்ள மிலிந்த மொர­கொட தலை­மையில் குழு­வொன்று அமைக்­கப்­பட்­டது. அந்த குழுவின் 16 பேருக்கும் அது தொடர்­பாக ஓர் இணக்­கப்­பாட்­டுக்கு வர முடி­யாது போயுள்­ளது. நாங்கள் பொது சட்­டத்தை கொண்­டு­வர சக­லரின் ஒத்­து­ழைப்பும் அவ­சி­ய­மாக இருக்­கின்­றது.

அத்­தோடு பாது­காப்பு தரப்­பி­னரால் முஸ்லிம் பெண்­களின் ஆடைகள் தொடர்­பாக கோரிக்­கைகள் இருக்­கின்­றன. இது தொடர்­பாக இஸ்­லா­மிய தலை­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்ளோம். பெண்கள் என்ற வகையில் அவர்­களின் உரி­மைகள் மீறப்­ப­டு­வ­துடன் இந்த உடை­களால் பெரும் அசௌ­க­ரிய நிலைக்கும் தள்­ளப்­ப­டு­கின்­றனர். இந்த உடைகள் தொடர்­பாக சில இடங்­களில் பொய்­யான பிர­சா­ரங்­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் சமூ­கத்தில் ஏற்­பட்­டுள்ள எதிர்ப்­பு­களை இல்­லாது செய்ய வேண்­டு­மென்றால் முஸ்லிம் மதத் தலை­வர்­க­ளினால் அதற்குத் தேவை­யான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். மறு­பக்­கத்தில் முகத்தை மூடி ஆடை அணி­வது நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லா­கவும் இருக்­கின்­றது. இதனை சட்­டத்தின் ஊடாக செய்ய வேண்­டி­ய­தில்லை.

அதனால் இது தொடர்­பாக சகல கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்க வேண்டும். சபாநாயகரின் தலைமையில் இதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம். சிலர் தமது கலாசாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக சிந்தித்து செயற்படுவார்களாக இருந்தால் தனியான சட்டங்கள் அவசியமில்லை. நாங்கள் எல்லோரும் ஒரே நாட்டவர்கள் என்ற வகையில் செயற்படவேண்டும் என்றார்.

3 comments:

  1. Fantastic Madam; I know there are very much Sinhala well-behaved ladies but not like our Hon. Minister Talatha Atukorale. She is, of course, more than them. Very nice explanation.

    ReplyDelete
  2. sRILANKA vil samadam wara wendum andal orea vali Thani singala rata Thani bhouda rata. iduwea singala bhouda makkalukku nimmadiyai kudukkum.inda ilakkai adayum warai iearhal ooyappowadillai.

    ReplyDelete
  3. அவர்கள் செய்ய மாட்டார்கள் அந்த அளவுக்கு அறிவிருந்தால் எப்போதோ செய்திருப்பார்கள். இதை விடச் சிக்கல்கள் வருவதற்கு முன் முஸ்லீம் திணைக்களமாவது களத்தில் இறங்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.