Header Ads



பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா


கடந்த 13 ஆம் திகதி சில இனவாதிகளால் மினுவங்கொடை மற்றும் அதனைச் சூழவுள்ள பல பிரதேச முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மற்றும் மஸ்ஜித்கள் தாக்கி சேதமாக்கப்பட்டன. இப்பிரதேசங்களைப் பார்வையிட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உயர்மட்டக்குழு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டது.

இக்குழுவில் ஜம்இய்யாவின் தலைவர், பிரதித் தலைவர், உப தலைவர்கள் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் என பலரும் அடங்குவர். இலங்கை பாதுகாப்புப் பிரிவின் ஆலோசனைக்கமைய இவ்விஜயத்தில் பொலிஸ் மா அதிபரின் முஸ்லிம் விவகாரங்களுக்கான இணைப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வை.ஜீ.ஆர்.எம்.ரிபாத் மற்றும் அல்-ஹாஜ் ஹுசைன் சாதிக் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து இழப்பீடுகள் எவ்வாறு முழுமையாக பெற்றுக் கொள்வது என்பது பற்றிய வழிகாட்டல்களையும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிய விடயங்களும் மக்களுக்கு எடுத்துக் கூறி பாதிக்கப்பட்வர்களுக்கு ஆறுதல்கள் சொல்லப்பட்டன.



No comments

Powered by Blogger.