May 07, 2019

இலங்கை முஸ்லிம்களின், செயற்பாட்டுக்கான தருணம் இது

இலங்கை போன்ற ஒரு பல்லின நாட்டில் இஸ்லாத்தின் வருகை பலவேறு வழிகளில் இடம்பெற்றுள்ளது, அந்தவகையில் அவை எழுச்சி அடைந்த காலப்பகுதிகளையும், வீழ்ச்சியை நோக்கி கொண்டு செல்லப்பட்ட வழிமுறைகளையும் ஆழமாக அறிய வேண்டி உள்ளது, 

#அறாபிய_இஸ்லாம், 

இஸ்லாம் அறபு மொழித்தேசங்களான மத்திய கிழக்கை அடிப்படையாக்க் கொண்டு தோன்றி இருந்தாலும் அதன் பண்பாட்டு வளர்ச்சியிலும், பரவலிலும் ஏனைய நாடுகளின் சூழல்,கலாசாரம் என்பனவற்றை அனுசரித்தே வளர்ச்சி அடைந்துள்ளது, அதன் உண்மைத்தோற்றத்தை துருக்கி, எகிப்து, ஈரான்  பாரசீக நாடுகள் போன்றவற்றில் இன்னும் அவதானிக்க முடியும், 

குறித்த நாடுகளில் இஸ்லாமிய சாம்ராச்சியங்கள் ஆட்சி  இருந்தாலும் முஹம்மது நபியின் போதனைகளுக்கு முந்திய பண்பாடுகளையும், வாழ்வியலையும் அவை  இன.னும் அழிக்கவில்லை, அவற்றுடன் இயைந்தே இஸ்லாமிய சமூகம்  தன்னை வளர்த்துக்கொண்டது,

#வஹாப்பிஷ_தோற்றம், 

அப்துல் வஹாப்பினால் உருவாக்கப்பட்ட வஹாப்பிய சித்தாந்தங்கள் அரசியலையும், ஆட்சியையும்  நபி அவர்களின் நேரடி வாரிசுகளிடம் இருந்து பறித்தெடுக்க ச ஊதிய ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டது அதில் வன்முறையும், மனித கலாசாரத்தை சிதைத்து வரலாற்றை சீரழிக்கும் போதனைகளும், நடை முறைகளும் நிறைந்து கிடக்கின்றன, அவற்றின் உலகளாவிய  மாதிரியே இன்றைய "தௌகீதிய இயக்கங்கள் " என்ற பெயரில் இயங்கு கின்றன. 

#தௌகீதும்_இலங்கையும்,

இலங்கையில் தௌகீதிய இயக்கங்கள் ஓரிறை பற்றிப்பேசுகின்ற அளவுக்கு முஹம்மது நபியைப்பற்றிப் பேசுவதில்லை, மட்டுமல்ல அவை இறையியலை  (Theology)  மட்டும் அளவுக்கு அதிகமாகப்  போதிக்கும் அமைப்புக்களாக உள்ள அதே வேளை உலகளாவிய கிலாபத் என்ற பெயரில் வன்முறையை பயான்(போதனை)  என்ற பெயரில்  அவர்களை பின்பற்றுபவர்களின் மனதில் விதைப்பதோடு அவற்றை நடைமுறைப்படுத்தவும்  முனையும் அமைப்புக்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன, 

மட்டுமல்ல இவ்வாறான தீவிர போக்குடைய இயக்கங்கள் இலங்கைக்கு எந்தவகையிலும் ஏற்படையவை அல்ல, அத்தோடு முஸ்லிம் நாடுகளிலும் இவர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்,

#அழிப்பு_வேலைகள் 

இலங்கையில் தௌகீதிய இயக்கங்களின் ஆக்கிரமிப்பு இடம்பெற்ற பின்னர் இலங்கை முஸ்லிம்கள் தமது வாழ்வியல் அடையாளங்களையும், தமது வரலாற்றையும், தொல்லியல் சான்றுகளையும் அதிகம்  இழந்துள்ளனர், அத்தோடு அவர்கள் ஏனைய சமூகங்களில் இருந்து தூய இஸ்லாம் என்ற பெயரில்  தூரமாக்கப்பட்டு ஒரு ஓரத்துச் சமூகமாகவும், இணக்கப்பாட்டு நெகிழ்வற்ற சமூகமாகவும் மாற்றுவதில் இந்த வஹாபிய  தௌகீதிய இயக்கங்கள் திட்டமிட்டு செயற்பட்டிருக்கின்றன, 

சியாறங்கள் உடைப்பு, கந்தூரி, மவ்லீது, மீலாத், கொடியேற்றங்கள், போன்ற எல்லா இன மக்களும் ஒன்றிணையும் நல்லுறவுக்கான  நிகழ்வுகளைத் தடுத்து, அவற்றிற்கு "ஷிர்க்" காபிர், எனும் கடும் போக்கு வார்த்தைப் பிரயோகங்களின் ஊடாக இலங்கையில் முஸ்லிம்களுடன் இனப் புரிந்துணர்வுடன் வாழ்ந்த ஏனைய சமூகங்களையும், பிரித்து நிராதரவான, முரண்பாட்டு  சமூகமாக முஸ்லிம்களை மாற்றினர், 

#பிளவுகள்,

ஏக இறைவனை ப்பற்றி பேசும் தௌகீதிய வஹாபிகள்  புராதன இலங்கை முஸ்லிம்களை சமயத்தின் பெயரில் பல கூறுகளாக்கியதுடன்,   அவர்களுக்கிடையேயும் பல இயக்க குழுக்களாகப் பிரிந்து செயற்படுகின்றனர் , இறைவனை ஒருவனாக விளக்க வந்த அவர்களால் கூட ஒன்றாக இருக்க முடியாமல் போனது அவர்களது கொள்கையினதும், நிதிவழங்கலிலும் ஏற்பட்ட முரண்பாடுகளே காரணம்  என்றே கருத முடியும், 

#டார்வினும்_வஹாப்பும், 

மனித தோற்றமானது குரங்கிலிருந்து உண்டானதாக் கூறும் டார்வின் அவை எல்லா வகையான குரங்குகளும் அல்ல ,மாறாக எந்தக் குரங்குகள் சூழலுக்கு  ஏற்ப தம்மை  போராடி மாற்றிக்கொண்டனவோ அவை மனித நாகரீகப் படிமுறையை அடைந்தன என்றார் , 

அது போலவே இன்றைய பல்வேறுபட்ட வஹாப்பிய சிந்தனைக்குழுக்களும் தம்மை தீவிரவாதிகள் அல்ல என்றும்  நாகரீகமான போக்குடையவர்களாக்க் காட்டினாலும் அவர்களுக்கான வாய்ப்புக்கள் சரியாக கிடைக்கும் வரை மறை முகமாக போராடுகின்றனர் உரிய நேரம் வரின்  அவர்கள் தமது கீழ்த்தரமான பயங்கரவாத அநாகரிகப் பண்பாட்டை நடை முறைப்படுத்த முனைவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, இதனையே அவர்களது கடந்தகால பயங்கரவாத தாக்குதல்களும், மனித நாகரீகச் சிதைப்புச் செயல்களும் முன்னறிவிப்புச் செய்துள்ளன. 

#தீர்வு_என்ன? 

இலங்கையில்  ஒரு #மரியாதைச்_சமூகமாக (Respectable Society) முஸ்லிம்கள் வாழ்ந்தனர், இன்றும்  வாழ நினைக்கும் ஒரு நாட்டில் தீவிர, வரலாற்றுச்  அடையாளச் சிதைப்பு வஹாபிய அமைப்புக்களையும், அவற்றின் சிநதனைகளையும்    மக்கள் அடியோடு நிராகரிப்பதுடன், அரசு அவற்றை உடனடியாகத் தடை செய்வதற்கான வழி முறைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதுவும், அதற்கு இலங்கையில் சமாதானத்தையும், சக வாழ்வையும் விரும்பும் பெரும்பான்மையான முஸ்லிம்களும், ஏனைய மக்களும் தம்மாலான ஒத்துழைப்பை வழங்குவதுமே இன்றைய காலத்தின் தேவையாகும், 

இன்றேல் இவ்வாறான நாசகார சமூக அழிப்புவாதிகளின் சிந்தனைகளும், செயற்பாடுகளும் எம்மையும் ஒருநாள் இல்லாமல் ஆக்கி விடுவதோடு, இவ் அழகிய தேசத்தை, வன்முறைகளின் கூடாரமாக்கி விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனலாம்.

இனியாவது ,

, வளமான எம் தேசத்தை வருமுன் காப்போம்,

முபிஸால் அபூபக்கர்

MUFIZAL ABOOBUCKER
Senior Lecturer,
Department of Philosophy
University Of Peradeniya
Peradeniya

4 கருத்துரைகள்:

Your perceptions are half boiled, and you have to learn more, without basic knowledge you betray the community... please revise and discuss your writing with subject experts in your University.

Better be with your limit, writing and spreading about something that you have no idea is LIE.

அதி மேதாவித்தனத்தையும் கும்புடு போட்டு கூழ் குடிக்க விட்டா கானும் என்கின்ற மனநிலையும் எல்லாம் செயய்யும்.

Absolutely nonsense, unity with other religion and contra concept people nothing to do with BITH-AA. If you really beleive Islam a way of life from the Almighty Allah who created the whole universe and the all societal groups, then You have a beautiful way to follow PURE ISLAM having a good relationship with other community.
Know your basics and AQEETHA first before cook your HALF-BOILED essay.

இன்று இதே போன்ற பல கருத்துக்கள் ஒரு சிலரின் மூலம் ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது... இதை சரி காணக்கூடிய உள்ளங்கள் தயவுடன் மார்க்கத்தை ஒரளவேனும் படிக்க வேண்டும்...இது போன்ற கருத்துக்கள் பரபவுவதற்கு உதவாமல் இருப்பதும் நல்லதே....

Post a Comment