May 22, 2019

கண்டி அந்தோனியார் மகளிர் கல்லூரியில், ஆளுநரின் உத்தரவை மீறி அபாயாவுக்கு தடை - வீட்டுக்கு கல் அடி

கண்டி புனித அந்­தோ­னியார் மகளிர் கல்­லூ­ரியில் பணி­பு­ரியும் 7 முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கல்­லூ­ரிக்குச் செல்­வ­தற்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடையை நீக்­கு­மாறும், ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கட­மை­யாற்­று­வ­தற்கு அனு­ம­திக்­கு­மாறும் மத்­திய மாகாண ஆளுநர் உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தும் தொடர்ந்தும் குறிப்­பிட்ட ஆசி­ரி­யை­க­ளுக்கு அபாயா அணிந்து வர தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.

கண்டி புனித அந்­தோ­னியார் கல்­லூ­ரியில் கட­மை­யாற்றும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் கடந்த இரு வாரங்­க­ளாக அபாயா அணிந்து சென்­றதால் அவர்கள் கல்­லூரி பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள், பழைய மாண­விகள், பெற்­றோர்­களால் தடுத்து நிறுத்தப் பட்­டார்கள்.

தொடர்ந்து பல நாட்­க­ளாக பாடசாலை நேரத்தில் கல்­லூரி பிர­தான வாயிலில் தரித்­தி­ருந்த ஆசி­ரி­யைகள் மத்­திய மாகாண ஆளு­ந­ரிடம் முறை­யிட்­டனர். கண்டி பிர­ஜைகள் முன்­ன­ணியும் இந்தத் தடையை எதிர்த்து முறை­யிட்­டது.

இத­னை­ய­டுத்து கடந்த வாரம் மத்­திய மாகாண ஆளுநர் கல்­லூரி நிர்­வாகம் உட்­பட சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னரை அழைத்து பேச்­சு­வார்த்தை நடாத்தி முஸ்லிம் பெண்­களின் உடை தொடர்பில் ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள வர்த்­த­மானி மற்றும் சுற்று நிரு­பத்தைப் பின்­பற்­றும்­படி பாட­சாலை நிர்­வா­கத்தை வேண்­டி­ய­துடன் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வர அனு­ம­திக்­கு­மாறு உத்­த­ர­விட்டார். இந்த உத்­த­ரவு கல்­லூரி அதி­ப­ரினால் மீறப்­பட்­டுள்­ளது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இவ்­வி­வ­காரம் தொடர்பில் மத்­திய மாகாண ஆளுநர் மைத்­திரி குண­ரத்ன மத்­திய மாகாண கல்வி அமைச்சின் செய­லாளர், மத்­திய மாகாண கல்விப் பணிப்­பாளர், கண்டி வலயக் கல்விப் பணிப்­பாளர் ஆகி­யோரை அழைத்து கலந்­து­ரை­யா­ட­லொன்­றினை நடாத்­தினர்.

பாட­சா­லை­களில் முஸ்லிம் ஆசி­ரி­யை­களின் உடை தொடர்பில் ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அர­சாங்க வர்த்­த­மானி அறி­வித்­தலைப் பின்­பற்­றும்­ப­டியும், அத­ன­டிப்­ப­டையில் தடைகள் விதிக்­கக்­கூ­டா­தெ­னவும் பாட­சாலை அதி­பர்­க­ளுக்கு சுற்­று­நி­ருபம் அனுப்­பி­வைக்­கும்­படி ஆளுநர் மாகாண கல்விப் பணிப்­பா­ளரை வேண்­டிக்­கொண்டார். என்­றாலும் மாகாண கல்விப் பணிப்­பாளர் பாட­சா­லை­க­ளுக்கு உரிய பணிப்­புரை வழங்­கா­ததால் கண்டி அந்­தோ­னியார் மகளிர் கல்­லூ­ரியில் தொடர்ந்தும் அபா­யா­வுக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அபா­யா­வுக்­கான தடையை கல்­லூ­ரியின் அதி­பரே பழைய மாண­விகள் மற்றும் பெற்­றோர்கள் மூலம் அமுல்­ப­டுத்தி வரு­வ­தாக பாதிக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம் ஆசி­ரி­யைகள் தெரி­விக்­கின்­றனர்.

அபாயா அணிந்து கல்­லூ­ரிக்குச் செல்லத் தடை விதிக்­கப்­பட்­டுள்ள 7 முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கும் கண்டி மாகாண கல்விக் காரி­யா­ல­யத்தில் இன்று முதல் கையொப்­ப­மி­டு­மாறு வலயக் கல்விப் பணிப்­பாளர் பணிப்­புரை வழங்­கி­யுள்­ள­தாக கண்டி பிர­ஜைகள் முன்­ன­ணியின் செய­லாளர் ரேணுகா மல்­லி­ய­கொட ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

அபாயா அணிந்து செல்லும் முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்குச் சார்பாக கண்டி பிரஜைகள் முன்னணி செயற்படுவதாலும், அவர்களுக்கு ஆதரவாக கலந்துரையாடல்களையும் நடத்துவதால் பேராதனையிலுள்ள அவரது வீட்டுக்கு இனந்தெரியாதோர் கல் எறிந்துள்ளார்கள்.

கண்டி பிரஜைகள் முன்னணியின் செயலாளர் ரேணுகா மல்லியகொட  இது தொடர்பில் பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

6 கருத்துரைகள்:

Will police take action?

பாடசாலையிலயே இனவாதம் காட்டினால் எவ்வாறு இந்த நாடும் இந்த இளம் சந்ததியினரும் எங்கே முன்னேற போகிறார்கள்

//கண்டி பிரஜைகள் முன்னணியின் செயலாளர் ரேணுகா மல்லியகொட இது தொடர்பில் பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.//
We need to support these kind people. 90% of the Buddhist and Tamils are Good people.

Say more than 90%. we can say 98%. Even more than this figure.

ஹபாயாவிற்கான எதிர்ப்பு, ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு திருகோணமலையில் இந்து பாடசாலை ஒன்றில் ஆரம்பிக்க பட்டது. ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் மீண்டும் கம்பஹா மாவட்டத்தில் இந்து பாடசாலை ஒன்றில் அதே கோஷம் எழுப்பப் படுகிறது. அதனை தொடர்ந்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் அமைந்துள்ள அந்தோனியார் பாடசாலையில் தமிழ் மொழி பிரிவினை தனியாக ஆளும் தமிழர்களே இதனை வித்திட்டு இருக்கலாம்.

அரசாங்கத்திற்கு கட்டுப்பட வேண்டுமே தவிர தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் போல உள்ளவர்களுக்கேல்லாம் கட்டுப்பட வேண்டும் என்பது அவசியமில்லை.

Post a comment