May 22, 2019

வவுனியா அரச அதிபர் ஹனீபா மீது, பிரபா கணேசன் இனவாத குற்றச்சாட்டு

பாகிஸ்தான் அகதிகளை வன்னி மாவட்டத்திற்கு அழைத்து சென்று குடியமர்த்தியது குறித்து மேலதிக அரசாங்க அதிபருக்குத் தெரியவில்லை. எனவே அரசாங்க அதிபர் ஹனீபா தனிப்பட்ட முறையில் அகதிகளை இங்கு குடியமர்த்தியுள்ளாரா? 

அல்லது அரசியல் பலம் பிரயோகிக்கப்பட்டுள்ளதா? போன்ற விடயங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் கங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட  போதே பிரபா கணேசன் மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளை வன்னி மாவட்டத்தில் குடியேற்றுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த அகதிகளைப் பொறுத்தவரையில் இந்த அகதிகள் பாகிஸ்தான் நாட்டில் பல சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களாக இருக்கின்றதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு தெரிவித்திருக்கின்றது. அவர்கள் ஓரினச் சேர்க்கை சம்பந்தமானவர்கள் என்பதையும் நாங்கள் ஊடகங்களுடாகவும் குற்றப்புலனாய்வூடாகவும் அறிந்து கொண்டிருக்கின்றோம். 

ஆகவே இவ்வாறானவர்களை இங்கே கொண்டு வந்து குடியமர்த்தி இதனூடாக வன்னி மாவட்டத்தில் இன்று அமைதியான சூழலை சீர்குலைக்கப்பார்ப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். யுத்த காலத்தில் வன்னி மாவட்டத்திலிருந்து இந்தியாவிற்குச் சென்ற அகதிகள் இங்கு மீண்டும் வந்திருக்கின்றார்கள். 

அவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள்  அல்லது அவர்களுக்கான வாழ்வாதாரங்கள் கூட சரியான முறையில் செய்துகொடுக்காத நிலையில் பிறிதொரு நாட்டிலுள்ள அகதிகளை இங்கு கொண்டு வந்து குடியமர்த்த முயற்சிப்பது அல்லது அவர்களைத் தங்க வைக்க முயற்சிப்பது  ஒரு மோசமான விடயமாகவே நான் பார்க்கின்றேன். 

அகதிகளை இங்கு கொண்டு வந்தமை தொடர்பில் மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமாரிடம் வினவியபோது அவர் இது பற்றி எனக்குத் தெரியவே இல்லை என்று சொல்லிவிட்டார். மாவட்ட அரசாங்க அதிபர் ஹனீபா  தனிப்பட்ட முறையில் செய்திருக்கின்றாரோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது. 

அவருடன் இருக்கும் மேலதிக செயலாளருக்கே தெரியவில்லை அவர்கள் இங்கு கொண்டுவரப்பட்டது அவர்களை இங்கு கொண்டு வருவதற்கு இவ்வாறான குளறுபடிகள் எந்த அரசியல் ரீதியான அரசியல் வாதி நிர்ப்பந்தத்தைக் கொடுத்தாரோ அல்லது அனுமதியை கொடுத்தாரோ என்பதை எமது மக்களுக்கு தெட்டத்தெளிவாக வெளிப்படுத்தப்படவேண்டும். என்று  தெரிவித்துள்ளார்

2 கருத்துரைகள்:

சொந்தக் கணக்கில் 500 வாக்கு கூட கிடைக்குமோ தெரியாது.சொந்த அண்ணனுக்கு செம துரோகம்,அண்ணனுக்கு துரோகமிழைத்தனால் கட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டவர்கலின் பேச்சுக்கலினை பதிவிட்டு எமது நேர காலத்தை வீணடிக்க வேண்டாம்

பிரபா கணேசன்இ நீங்கள் சொல்வதுதான் சரியென்ற நிலைப்பாட்டிற்கு வரக் கூடாது. வுவனியாவில் அகதிகளைக் குடியேற்றுவது ஐநா களின் அகதி நிறுவனத்திற்கும் அரசுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் மூலமாகவே நடைபெற்றுள்ளது. அரச அதிபருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம். இதில் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. நாட்டிலே நடைபெற்ற அரச படுகொலைகள் மற்றும் பல குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்ட புலிப் பயங்கரவாதிகள் இலட்சக்கணக்கானோர் இன்றும் 42 நாடுகளில் தஞ்சம் புகுந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கினறனர். அவர்கள் நல்லவர்கள் என்றால் இவர்களும் நல்லவரகள்தான். அவர்கள் கெட்டவர்கள் என்றால் இவர்களும் கெட்டவர்கள்தான். கெட்ட இந்த இரு சாரார்களையும் அவரவர் நாடுகளுக்கு அனுப்புவோமா? வீணான பழிகளை அகதிகள்மீது போட வேண்டாம். சுவருக்கு எறியும் பந்து சுவரைக் கிழித்துக்கொண்டு போவதில்லை. மக்கள் மிகவும் தெளிவாகத்தான் இருக்கின்றார்கள். முதலில் உங்கள் அரசியல் சித்து விளையாட்டுகளை நிறுத்துங்கள்.

Post a Comment