Header Ads



பள்ளிவாசல்களை உடைக்கப் புறப்படும் என் சோதரா...!


எங்கள் பள்ளிவாயல்கள் கட்டிடங்கள்தான்

கற்களும் மரங்களும் சிலவேளைகளில் கண்ணாடிகளும்தான்

உடைக்கப்புறப்படும் போது கவனமாய்ச் செல்லுங்கள் 

எறிந்த கற்களும் உடைத்த கற்களும் 

மீண்டும் உங்களைத்தாக்கி காயப்படுத்தலாம்...



பள்ளிகளை எரிக்கப்பட்ட புறப்படும் போது

கவனமாகச் செல்லுங்கள்

எரியும் சுவாலை உங்களை பற்றிக்கொள்ளலாம்

எரிந்து விழும் மரங்கள் உங்களை காயமும் படுத்தலாம்...



நீங்கள் தூக்கிச் செல்லும் பொல்லுகளும் வாள்களும்

நீதி நியாயம் அறியாதவை

தாக்கும் வேகத்தில் உங்களையே தாக்கலாம்

கவனமாகக் கையாளுங்கள்....



உங்களால் உடைக்கப்பட்ட கண்ணாடிகள் 

அங்கே விழுந்து நொறுங்கிப்போயிருக்கும்

பாதங்களுக்கு காலுறைகளையும்

கைகளுக்கு கையுறைகளையும் 

அணிந்து கொண்டு வாருங்கள் 

அந்தக் கண்ணாடித்துண்டுகள்

உங்களைக் காயப்படுத்தாமல் இருப்பதற்காக....



உங்களை நினைத்து சந்தோசப்படாமல்  இருக்கவும் முடியவில்லை

தொழுகைக்கு பள்ளி வராத 

என் மார்க்க சதோதரங்களை விட

நீங்கள் உயர்வுதான்

குறைந்தது சேதப்படுத்தவேனும் நீங்கள் 

பள்ளிக்கு வந்திருக்கிறீர்கள்....



என்னுயிரைப்போன்று உங்கள் உயிர்களும் 

பெறுமதியானவைதான்

பள்ளிகளை உடைக்கும் போது 

உங்கள் உயிர்கள் சேதமாகாமல் இருப்பதற்குத்தான் அவை.....



ஆ....

ஒன்றை மறந்துவிட்டேன் 

பள்ளிகளை உடைக்கப் புறப்படும்போது

முகமூடிகள் அணிவதை மறவாதீர்கள் 

நாளை என்னோடு நீங்கள் 

இந்நாட்டுப் பிரஜை என்று தயக்கமின்றி உரையாடுவதற்காக....



அப்துல் ரஷாக் ஏ காதர்

6 comments:

  1. என் சமூகமே என் கவலைகலை என் இறைவனிடமே சொல்கிறேன்

    ReplyDelete
  2. Allah Allah YAA Allah neeye pothumanavan iraivaa un veedugal neeye kaavalan neeye paarthukkol.

    ReplyDelete
  3. இந்த நேரத்தில் இந்த கவிதை தேவையா?

    ReplyDelete
  4. சிங்கள மக்களைச் சென்றடய சிங்கள மொழியில் பகிரவும்

    ReplyDelete
  5. If you can publish over whatever sinhala media it will be more awarness.

    ReplyDelete

Powered by Blogger.