Header Ads



முஸ்லிம்கள் ஏன் அடக்குமுறைக்கு, உள்ளாகும் சமுதாயமாகவே இருக்கிறார்கள்...?


எந்த நிமிடம் எந்தத் தாக்குதல் நடக்கும் என்று தெரியாது.

எந்தப் பகைவன் எப்படி வந்து தாக்குவான் என்றும் தெரியாது.

உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.

ஒவ்வொரு விநாடியும் திக்...திக்..திக்...

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு...

விடுகிற மூச்சைக்கூட மெதுவாக விட்டபடி...

திடீரென்று மனைவி, குழந்தைகளின் அழுகுரல் கேட்கும். அவர்கள் எதிரிகளின் பிடியில்.

வீடுகள் அபகரிக்கப்படும். வாழ்நாள் முழுவதும் பாடுபட்டுச் சம்பாதித்த பொருள்கள் பறிக்கப்படும்.

எதிரிகள் ‘போனால் போகிறது’ என்று அனுமதித்தால் கட்டிய துணியுடன் எங்காவது ஓடிச் சென்று அகதிகளாய் அபயம் தேடிக் கொள்ளலாம்.

இது எந்த நாட்டின் நிலைமை? 

இலங்கை? பாலஸ்தீனம்?

இன்றைய இலங்கை, பாலஸ்தீனம் போன்றுதான் இருந்தது அன்றைய மக்காவில் முஸ்லிம்களின் நிலைமையும்.

சொல்லொணாக் கொடுமைக்கு உள்ளானவர்களின் வாழ்க்கை பிறகு எப்படி அடியோடு மாறியது தெரியுமா?

குர்ஆன் கூறுகிறது.

“நபியே, ‘அன்ஃபால்’ பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகிறார்கள்..”(குர்ஆன் 8:1)

அன்ஃபால் என்றால் போரில் கிடைத்த செல்வங்கள் என்று பொருள்.

அன்று இருக்க வீடின்றி, குடிக்கக் கூழின்றி, அகதிகளாய் ஓடிவந்தவர்கள் இன்று எதிரிகளை வென்று வெற்றிவீரர்களாய், தம் இறைத்தூதரை நோக்கி, அன்ஃபால் பற்றி விசாரிக்கிறார்கள்.

எத்துணைப் பெரிய மாற்றம்..! 
எத்துணைப் பெரிய வெற்றி..!!
எத்துணைப் பெரிய உயர்வு..!!!

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த மக்கள் எதிரிகளின் அடக்குமுறைக்கு ஆளானவர்கள்...

கொடுமைகளுக்குப் பலியானவர்கள்...

பத்தே ஆண்டுகளில் இன்று நீதிமிகு ஆட்சியாளர்களாய் மாறிய அற்புதத்தை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.

எப்படி முடிந்தது? 

இறைமறையும் இறைத்தூதரும் தந்த பயிற்சி...!

அந்தப் பயிற்சி இன்று இல்லையா?

இருக்கிறது..இன்றும் உயிரோட்டத்துடன் இருக்கிறது.

பிறகு ஏன் முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு உள்ளாகும் சமுதாயமாகவே இருக்கிறார்கள்?

உங்களுக்கு நேரமும் ஆர்வமும் இருந்தால் குர்ஆனின் எட்டாம் அத்தியாயமான “அன்ஃபால்” அத்தியாயத்தைக் கருத்தூன்றிப் படியுங்கள். 

விடை கிடைக்கும். 
சிராஜுல்ஹஸன்

2 comments:

  1. சோதனகளுக்குப் பின் வெற்றியை நிச்சயம் அல்லாஹ் ஏற்படுத்துவான்

    ReplyDelete

Powered by Blogger.