Header Ads



அபாயாவை தடை செய்வோருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் பல்­வேறு சவால்­களை எதிர்­நோக்கி வரு­கி­றது. இவற்றில் முஸ்லிம் பெண்­களின் கலா­சார உடைக்கு பர­வ­லாக எதிர்ப்பு தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக முகத்தை மறைத்து முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைக்கு தடை­வி­தித்து அண்­மையில் ஜனா­தி­பதி வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்­றினை வெளி­யிட்­டி­ருந்தார். குறிப்­பிட்ட அரச வர்த்­த­மானி அறி­வித்­தலில் முழு முகம் என்­ப­தற்கு இரு­கா­து­க­ளையும் மறைக்­கக்­கூ­டாது என வரை­வி­லக்­கணம் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த வரை­வி­லக்­க­ணத்­தின்­படி ஹிஜாப் அணிய முடி­யாத குழப்­ப­நிலை உரு­வா­னது. இந்­நி­லை­யினை முஸ்லிம் சமூக பிர­தி­நி­திகள் சுட்­டிக்­காட்­டி­ய­தை­ய­டுத்து அந்த வர்த்­த­மானி அறி­வித்­தலில் கடந்­த­வாரம் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி கடந்த 13 ஆம் திகதி வெளி­யிட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­தலில் ஏதா­வது ஆடை, உடுப்பு அல்­லது துணி­ம­ணிகள் ஒரு­வரை அடை­யாளம் காண ஏதேனும் வகையில் சிர­ம­மாக்கும் வகையில் முழு முகத்­தையும் மறைக்கும் வண்ணம் பொது இடத்தில் இலங்கைப் பிர­ஜையால் அணி­யப்­ப­ட­லா­காது.  இவ்­வாறு அணி­ப­வர்கள் இலங்கை இரா­ணுவம், இலங்கை கடற்­படை, விமா­னப்­படை, பொலிஸ் அதி­கா­ரிகள் அல்­லது சிவில் பாது­காப்­புப்­படை உறுப்­பினர்கள் கேட்­டுக்­கொள்ளும் பட்­சத்தில் ஒரு­வரை அடை­யாளம் காண காதுகள் உட்­பட முழு முகத்தை மறைக்கும் எந்த ஒன்­றி­னையும் அகற்­ற­வேண்டி நேரிடும். இங்கு முழு­முகம் எனக் குறிப்­பி­டப்­ப­டு­வது நெற்­றியில் இருந்து வாய்க்கு கீழுள்ள நாடி­வரை என்­ப­தாகும். இங்கு காதுகள் உள்­ள­டங்­காது எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு முஸ்லிம் பெண்­களின் கலா­சார உடை பற்றி வர்த்­த­மா­னியில் தெளி­வான விளக்கம் வழங்­கப்­பட்­டி­ருந்தும் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜா­புக்கும் அபா­யா­வுக்கும் தடைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அரச பாட­சா­லை­களில் வைத்­தி­யசா­லை­களில் மற்றும் அரச நிறு­வ­னங்­களில் அபா­யா­வுக்கும் ஹிஜா­புக்கும் தடை விதிக்­கப்­பட்டு முஸ்லிம் பெண்கள் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றார்கள்.

பாட­சா­லைக்கு அபாயா அணிந்து செல்லும் ஆசி­ரி­யை­க­ளுக்கு பாட­சாலைக் கத­வுகள் மூடப்­பட்டு வரு­கின்­றன. அவர்கள் நுழை­வா­யிலில் நிறுத்தி வைக்­கப்­ப­டு­கி­றார்கள். அபா­யா­வுக்கு எதி­ராக பாட­சா­லை­களின் பழைய மாண­வர்கள், பாட­சாலை, அபி­வி­ருத்திச் சங்க உறுப்­பி­னர்கள் மற்றும் பெற்றோர் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­கி­றார்கள்.

அபா­யா­வுடன் புவக்­பிட்­டிய தமிழ் மகா வித்­தி­யா­லத்­துக்குச் சென்ற 11 முஸ்லிம் ஆசி­ரி­யைகள் பாட­சா­லைக்குள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. சாரி அணிந்து வரு­மாறு அவர்கள் பணிக்­கப்­பட்டு  ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டதால் அவர்கள் வீடு­க­ளுக்கு திரும்­பிச்­சென்­ற­துடன் பின்பு மேல் மகாண ஆளு­நரின் ஏற்­பாட்­டினால் இட­மாற்றம் பெற்­றுக்­கொண்­டார்கள். இதனால் அப்­பா­ட­சா­லையின் மாண­வர்­களே பாதிப்­புக்குள் ளா னார்கள்.

இது­போன்ற சம்­பவம் கண்டி அந்­தோ­னியர் மகளிர் கல்­லூ­ரி­யிலும் இடம்­பெற்­றுள்­ளது. அக்­கல்­லூ­ரியில் முகத்தை மறைக்­காது கலர் அபாயா அணிந்து சென்ற முஸ்லிம் ஆசி­ரி­யைகள் 11 பேருக்கு பாட­சா­லைக்குள் செல்லத் தடை­வி­திக்­கப்­பட்­டது. தொடர்ந்து 10 தினங்கள் அவர்கள் பாட­சா­லைக்குச் சென்று நுழை­வா­யிலில் தரித்­தி­ருத்து வீடு திரும்­பி­யுள்­ளார்கள். பழைய மாண­விகள் மற்றும் பெற்றோரே ஆசி­ரியை களுக்குத் தடை­வி­தித்­துள்­ளார்கள். மத்­திய மாகாண ஆளுநர் அவ்­வாறு தடை­வி­திக்க முடி­யாது என உத்­த­ர­விட்டும் அவர்­க­ளுக்கு அபா­யா­வுடன் பாட­சா­லைக்குச் செல்ல முடி­யாத நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

தொடர்ந்தும் அக்­கல்­லூ­ரிக்கு வெளியே பழைய மாண­விகள், பெற்றோர் எதிர்ப்­பினை வெளி­யிட்டு வரு­கி­றார்கள்.

கல்­லூ­ரியின் அதி­பரை எமது பத்­தி­ரிகை தொடர்பு கொண்டு சம்­பவம் தொடர்பில் வின­வி­யது. மாண­விகள் தொலைக்­காட்­சியில் அபா­யா­வு­ட­னான செய்­தி­களைப் பார்த்­து­விட்டு பயந்து போயுள்­ளார்கள். அபா­யா­வு­ட­னான ஆசி­ரி­யை­களைப் பார்ப்­ப­தற்கும் பேசு­வ­தற்கும் பயப்­ப­டு­கி­றார்கள்’ எனத் தெரி­வித்தார்.

குறிப்­பிட்ட ஆசி­ரி­யைகள் பல வரு­டங்­க­ளாக அங்கு கட­மையில் உள்­ள­வர்கள். அவர்­களைப் பார்த்து மாண­விகள் பயப்­ப­டு­கி­றார்கள் என்ற அதி­பரின் கருத்­தினை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. முஸ்லிம் பெண்­களின் கலா­சார உடை தொடர்பில் தெளி­வு­களை வழங்­க­வேண்­டி­யது ஒவ்வோர் அதி­ப­ரி­னதும் கட­மை­யாகும். இக்­க­டமை துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­வதால் நாட்டில்  இன ஐக்­கியம் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்பே இல்­லாமல் போய்­விடும்.

பாட­சா­லை­களில் மாத்­தி­ர­மல்ல அரச நிறுவனங்களிலும் இதே நிலைமையினைக் காணமுடிகிறது. புத்தளம் பிரதேச செயலாளர் காரியாலயத்தில் கடமை புரியும் மாற்று இன உத்தியோகத்தர்கள் முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்களின அபாயாவுக்கு எதிராக சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். நினைத்தபடி யெல்லாம் ஒவ்வொருவரும் சட்டத்தைக் கையிலெடுத்து தடைகள் விதிப்பது தவிர்க்கப்படவேண்டும். அரசு இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-Vidivelli

3 comments:

  1. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் மட்டும் இருப்பதைவிடவும் இவ்வாறான சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராகவும் இன முறன்பாட்டுக்கு தூபமிடும் சக்திகளுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கைகளுக்கான நிதியம் ஒன்றினை உருவாக்கி அதனூடாக நடவடிக்கை எடுக்க எமது சமூகத்தின் ஆற்றல் உள்ளவர்கள் முன் வரவேண்டும்.

    ReplyDelete
  2. பல்கலைக்கழகங்களில்
    எத்தகைய நிலைமை
    உண்டாகும் என்பது
    நாளை(21)தெரியவரும்.
    அல்லாஹ்வின் அருள்
    வேண்டி...

    ReplyDelete
  3. என்னத்த சொல்லி என்ன பிரயோசனம் எங்கட சோனையேனுகள் போலீசுக்கு போறதுக்கே பயந்து நடுங்குறானுகள்.

    ReplyDelete

Powered by Blogger.