Header Ads



அப்பாவி முஸ்லிம்களை கைது செய்துவிட்டு, நீதிமன்றத்தில் தடுமாறும் பொலிசார் (ஒரு உண்மைச் சம்பவம்)

அண்மைய தற்கொலை குண்டு தாக்குதலின் பின்னர் நாடு பூராகவும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் (PTA)கீழ் பல முஸ்லிம் அப்பாவிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவது தொடர்கதையாக மாறியுள்ளது.

பயந்து கொண்டிருக்கும் சமூகத்திற்கு விழிப்பூட்டும் முகமாக நீதிமன்றங்களில் நடைபெறும் நிகழ்வுகளை தொடர்ச்சியாக பதிவேற்ற விரும்புகிறோம்.

 (10.05.2019) அன்று தெல்தெனிய நீதவான் கலன்சூரிய முன்னிலையில் சந்தேக நபர்களாகிய திகனையைச்சேர்ந்த 3 முஸ்லிம் அப்பாவிகளின் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அந்த வழக்கின் உறையாடல் வடிவம் இதோ!

போலிசார் :- (நீதவானை நோக்கி)சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டிருக்கும் பொருட்கள் சில இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டியிருக்கிறது எனவே இவ்வழக்கின் விசாரணைகள் முடிவுறாததால் இச்சந்தேக நபர்களை இன்னும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வேண்டுகிறேன்.

எமது சட்டத்தரணி: -
அபாயகரமான ஆயுதங்களை வைத்திருப்பவருக்கு எதிராக மாத்திரமே PTA சட்டத்தின் கீழ் வழக்கிட பொலிசாருக்கு அதிகாரமுள்ளது . ஆனால் இங்கு 3 சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அபாயகரமான ஆயுதங்களாக laptop ஒன்றும் நான்கு mobile phone களும் தான் பொலிசாரால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.இவை அபாயகரமான ஆயுதங்கள் அல்ல ஆகவே இவர்களை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யவேண்டும் அல்லது பிணையில் விட வேண்டும்.

போலிசார்: கனம் நீதவான் அவர்களே , குறிப்பிட்ட laptop மற்றும் mobile phone களில் பயங்கரவாதத்துடன் தொடர்ப்புபட்ட கானொலிகளும் மார்க்க சொற்பொழிவுகளும் உள்ளது. அவை அண்மைய குண்டுவெடிப்புகளுடன் சம்மந்தப்பட்டவைகளாக இருக்கலாம். இதனால் இவர்களின் பொருட்களை பரிட்சிக்க வேண்டும்.

எமது சட்டத்தரணி: -ஒரு சாதாரணமான மனிதனின் அன்றாட பாவனை பொருட்களாக Laptop மற்றும் mobile phone கள் காணப்படுகின்றது. சாப்பாடில்லாமல் மனிதன் இருந்து விடுவான். ஆனால் lap top , mobile இல்லாமல் 5 நிமிடம் கூட அவனால் இந்த பூமியில் வாழ முடியாது. அத்தோடு சமூக ஊடகங்களில் வரும் Photos மற்றும் video கள் எமது phone களில் தானாகவே download ஆகி gallery யில் காணப்படும். இவைகள் தானாகவே வந்தவைகள் இவற்றுக்கு எவ்வாறு நாம் பொறுப்பாக முடியும். எனவே இவர்களை நீங்கள் விரும்பும் எந்த நிபந்தனைகளிலாவது பிணையில் விடுவிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

நீதவான்:- இந்த PTA சட்டத்தின் கீழ் வழக்கு முடியும் வரை இவர்களை பிணையில் விடும் அதிகாரம் எனக்குல்லை.

நீதவான் :-(போலீசாரை நோக்கி கடுமையான தொனியில்) இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களுக்கும்

இச்சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கும் என்ன சம்பந்தம் என்ற காரண காரியங்களை எதிர்வரும் 24 ம் திகதி மன்றுக்கு சமர்பிக்கவும் .

நீதவான்:-(எமது சட்டத்தரணிகளை நோக்கி) இவ்வழக்கு சம்பந்தமான உங்களது எதிர்வாதங்களை 24/05/2019 அன்று மன்றில் பதிவிடவும்.

(என்று கூறி சந்தேக நபர்களை எதிர் வரும் 24/05/2019 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். )

நீதவானின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வியர்வையால் நனைந்த போலீசார் நீதிமன்றத்தின் ஒரு பக்கத்தால் வெளியேறLaptop மற்றும் mobile phone கள் எவ்வாறு அபாயகரமான ஆயுதமாக மாறியது என்ற சிந்தனையுடன் நாம் நீதிமன்றத்தின் மறு பக்கத்தால் வெளியேறினோம்.

சட்டத்தரணி சறூக் - 

0771884448

6 comments:

  1. ஏப்ரலில் நடந்த மிகவுமே வெறுக்கத்தக்க அந்த நிகழ்வை காரணமாய் வைத்து மிக நீண்ட நாட்களாக முஸ்லீம் சமூகத்தின் மீது செய்ய முடியலாம் போன எத்தனையோ விடயங்களை இப்போது மிக இலகுவாக இனவாதிகள் செய்து கொண்டு இருக்கின்றார்கள்

    இந்த நடவடிக்கை எல்லாம் பார்க்கும்போது ஒரு குறுகிய கால மனா அழுத்தம் முஸ்லீம் சமூகத்துக்கு இருக்கத்தான் செய்கின்றது இருந்தாலும் இறைவன் குரானில் சொல்லுகிறான் " துன்பங்களுக்கு பின்னால் தான் இன்பம் இருக்கின்றது, நிச்சயமாக துன்பங்களுக்கு பின்னால் தன இன்பம் இருக்கின்றது"

    இந்த திருமறை வசனத்தை நாம் இன்றைய சூழலுக்கு பிரயோகித்து பார்ப்போமே அனால், நான் ஒரு தெளிவான வெற்றியை காண்கின்றேன் அது குறுகிய கால வெற்றி அல்ல நீண்ட கால வெற்றி

    இரண்டாம் உலக போருக்கு பின்னர் தான் இந்த உலகம் நிறைய மாற்றங்களை சந்தித்தது ஜப்பான் நாடு மிகவும் முன்னேற்றமான நிலைக்கு வந்தது அதே போல ஐக்கிய நாடுகள் சபை தோற்றம் பெற்றது மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு வந்தது இவ்வாறே எவ்வளவோ சொல்லலாம்

    அதை போலத்தான் இப்போது முஸ்லீம் சமூகமும், ஜப்பான் நாட்டை போன்று நாம் மிகவும் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் எழுந்து வருவதட்கு சந்தர்ப்பம் கிடைத்து இருக்கின்றது நம் எல்லோரது சிந்தனைகளிலும் ஒரு மாற்றம் தெரிகிறது சிறு சிறு மார்க்க பிரச்சனைகளை ஒரு புறம் தள்ளிவிட்டு முஸ்லீம் சமூகம் என்கின்ற அடிப்படையில் சிந்திக்க ஆரம்பித்து விட்டோம்। இது நல்ல ஒரு ஆரம்பம்

    இன்னும் நாம் கல்வி துறையிலே முன்னேற வேண்டி இருக்கிறது, எமது சமூகத்தில் திறமையான வழக்கறிஜர்கள் இருக்கிறார்கள் ஆனாலும் இன்னும் இன்னும் தேவை என்கின்ற விஷயம் உணரப்படுகின்றது,

    நமது மதரஸாக்கள் எண்ணிக்கை , பள்ளிகளின் எண்ணிக்கை குறைய போகின்றது, மதரசாக்கள் ஒருங்கிணைக்கப்படும் பள்ளிகள் ஒருங்கிணைக்கப்படும் இது ஆரோக்கியமான ஒன்று தான்। நமது பொருளாதாரம் சேகரிக்கப்பட்டு சிந்தனை சிதறல்களில் இருந்து பாதுகாக்கப்பட்டு பள்ளிக்கு கட்டுப்படும் ஒரு ஊர் அமைப்பு வரப்போகின்றது

    முஸ்லீம் பெற்றோர்கள் தமது குழந்தை மீது கவனம் செலுத்த போகிறார்கள், நமது இளைஜர்கள் எங்கு போகிறார்கள் யார் யாரோடு பழகுகிறார்கள் இணையத்தை எவ்வாறு பயன் படுத்துகிறார்கள் என்ற ஒரு கவனம் இருக்கப்போகிறது இவை எல்லாம் ஆரோக்கியமான சமூகத்திக்கான அடிப்படைகள்

    எனவே எனது உள்ளம் ஒரு ஒளி மயமான எதிர் காலத்தை இப்பொழுதே காண்கின்றது இந்த சந்தர்ப்பத்தை நம் எவ்வாறு பயன்படுத்த போகின்றோம் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்।

    ReplyDelete
  2. Thanks, really a good news.

    ReplyDelete
  3. @Yazar மனதிற்கு இதமான கருத்தை கூறியுள்ளீர். உங்களை இறைவன் பொருந்திக்கொள்வான்

    ReplyDelete
  4. Thanks for the update. We need continuously please.

    ReplyDelete
  5. @Yazarஅவர்களின் கருத்துடன் உடன்படுகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.