Header Ads



திங்கட்கிழமை தாக்குதல் நடக்கலாமென, புலனாய்வுத்துறை சொல்கிறது, பயங்கரவாதத்தை ஒழிக்க முஸ்லிம்களும் விருப்பம்

திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பமென அரசு அறிவித்துள்ளது.ஆனால் அன்று தாக்குதல்கள் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறை சொல்கிறது. நான்கு மில்லியன் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமை. விஷவாயுத் தாக்குதல் நடக்கலாமென்று கூட ஒரு கதை உலவுகிறது.அரசு உண்மையை சொல்ல வேண்டும்

இவ்வாறு இன்று -10- பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது கோரிக்கை விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச. அவர் மேலும் கூறியதாவது ,

ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு உண்மைகளை வெளியே சொல்லாமல் விதிக்கப்படும் தடை ஒரு பக்கம் பாதுகாப்பு ஏற்பாடு என்றாலும் மறுபக்கம் இதனால் மக்கள் அரசை நம்பாத நிலை உள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்தும் பாதுகாப்புத் தரப்புக்கு அரசியல் தலையீடுகள் எதுவும் இருக்க கூடாது.குற்றம் செய்தவர்கள் கட்டாயம் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

சிறுவர்களுக்கான பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அரசு ஒரே குரலில் சொல்ல வேண்டும் . 19 ஆம் திருத்தத்துக்கு பின்னர் இப்போது இருபிரிவுகளாக செயற்படும் அரசியல் தலைவர்கள் ஒரு நிலைப்பாட்டில் இருந்து உண்மையை சொல்ல வேண்டும்.

வரும் திங்கள் தாக்குதல் நடக்கலாமென புலனாய்வுத்துறை சொல்கிறது.மறுபக்கம் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் நேற்று உலாவியது.உண்மையில் என்ன தான் நடக்கிறது.பாடசாலைகளுக்கு பிள்ளைகளை இன்னமும் பெற்றோர் அனுப்பாமல் இருப்பது அரசின் மீதான சந்தேகமே இதற்கு காரணம்.மத்திய வங்கி மீதான தாக்குதல் மற்றும் விமான நிலைய தாக்குதல்களின்போது கூட மக்கள் இப்படி சந்தேகம் கொண்டிருக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.அதனை கட்டியெழுப்ப வேண்டும்.நாட்டின் இந்த பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமென முஸ்லிம்களும் விரும்ம்புகின்றனர்.அதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

என்றார் மஹிந்த

7 comments:

  1. மிகப் பெரிய திட்டத்தின் ஒரு அம்சமாக மக்கள் மத்தியில் நல்லவை செய்வதைப்போன்று இந்த பெரியவரும் மக்கள் மத்தியில் பியஸைகோஸிஸ் நோயைப் பரப்புகின்றான். அரசின் சில பகுதிகளும் ஏனைய சக்திகளும் முஸ்லிம்களின் தலையில் போட்டு பயம் என்ற பீதியை மக்கள் மத்தியில் பரப்புவது மிகப்பெரிய பாவமும் அக்கிரமமுமாகும். இதற்குப் பின்னால் இருக்கும் பாரிய சக்தியையும் சூழ்ச்சியையும் சரிவர இனம்காணுவதற்கு தனிப்பட்டரீதியிலும், கூட்டாகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த பாரிய சூழ்ச்சியின் மூலத்தையும் காரணிகளையும் சரியாக இனம் காணாமல் செய்யும் எந்த முயற்சிகளும் சரியான தீர்வைக்கொண்டுவராது என்பதை பொறுப்பில் உள்ளவர்கள் சரியாக உணர்ந்து செயற்படவேண்டும்.

    ReplyDelete
  2. Very much concern about school children and country.god bless your all

    ReplyDelete
  3. Very true, when the govt.tries its best to open the schools and continue education of the children, opposition discourages with so called fear phycho-syndrome which invariably depicts the politically vacuum status of the opposition.

    ReplyDelete
  4. This is a kind of psychological warfare to keep the people in pains and panics until the proclamation for Presidential and Parliamentary elections as well. Good mechanism.

    ReplyDelete
  5. சென்ற குண்டு தாக்குதலையும் இவர்கள் இவ்வாறு அறிந்திருந்தார்கள் தான்ஆனால் அதை மற்றும் மூடி மறைத்து விட்டார்கள் மக்கள் மத்தியில் தெரிவிக்காமல்.அரசியல்வாதிகளின் நாடகங்களால் மக்கள் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  6. அனைத்து Muslim கலின் மீது இந்த பிரச்சினையை அரசும்,அடுத்த மதத்தை சேர்ந்த பாராலுமன்ர உறுப்பினர்கள்,இனவாத ஊடகங்கள் என்பன சுமத்திவிட்டு சந்தோசமடைகின்ரன.ஆனால் இலங்கையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளினை விட (வாள்,கத்தி,கம்பினை தர்பாதுகாப்புக்காக வைத்திருந்தார்கள் அல்ல) அவர்களின் பின்னால் உள்ள வெளிச் சக்தியை மறந்து விட்டார்கள்.முதலில் அது யார் என கண்டுபிடிக்க ஏன் இவர்களுக்கு இன்னும் தயக்கம்.ஆனால் மஹிந்த ஆட்சியில் இருந்திருந்தால் வெளிச் சக்தி யார் என அனவருக்கும் தெரிய வந்திருக்கும்.ஆனால் நல்லாட்சியின் நடவடிக்கை எங்கோ இடிக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.