Header Ads



பௌத்த இனவாத அமைப்புக்களுடன் இணைந்து, செயற்பட தொண்டமானுக்கு அழைப்பு

நாட்டில் வாழுகின்ற சாதாரண முஸ்லிம் மக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட கூடாது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் அமைந்துள்ள சௌமிய பவனில் வைத்து இராவணா பலய அமைப்புக்கும் இலங்கை தொழிலாளர் காங்ரஸிக்கும் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஆறுமுகன் தொண்டமான் இதனை தெரிவித்தார்.

நாட்டில் கடந்த 21ம் திகதி அசாதாரண சூழ்நிலை இடம்பெற்றது. ஆனால் மலையகத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. அதேபோல் எதிர்வரும் காலங்களில் மலையகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க இ.தொ.கா எங்கள் அமைப்போடு இணைந்து செயல்பட வேண்டும் என இராவணா பலய அமைப்பில் உள்ள தேரர்கள் என்னிடம் கூறினார்கள்.

நாங்கள் நாட்டில் சிறுபான்மையாக இருந்தாலும் இலங்கை நாடு ஒரு பௌத்த நாடு என்ற அடிப்படையில் அனைவரோடும் இணைந்தும் வாழ்வதுதான் எங்களுடைய நோக்கம் என அவர்களிடம் கூறினேன்.

இதேவேளை எந்த ஒரு தீவிரவாதத்திற்கும் நாங்கள் இடமளிக்கபோதில்லையென நான் அவர்களுக்கு எடுத்து கூறியதாக ஆறுமுகன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் ஆறுமுகன் தொண்டமான் உட்பட இராவணா பலய அமைப்பின் தலைவர் ஹித்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர், சிங்கலே அமைப்பின் பொதுச்செயலாளர் மெடில்லே பஞ்சாலோக தேரர் மற்றும் இ.தொ.கா. நிதிச்செயலாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் ஆர்.ராஜதுரை பிரதிபொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், உபதலைவர்களான கா.மரிமுத்து, பி.சக்திவேல், கருப்பையா கணேசமுர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.