Header Ads



மத்ரஸாக்களை தடைசெய்வது பற்றிய, சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன - ரணில்

இலங்கையில் உள்ள மதரஸாக்களை தடை செய்வது தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சிவில் அமைப்புகளுடனான கலந்துரையாடலிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் விவகார அமைச்சர், தற்போது, மதரஸா கல்வி நிறுவனங்களைத் தடை செய்வது தொடர்பான சட்ட திட்டங்களை உருவாக்கி வருவதாகவும், அதேப்போல் மதரஸா என்ற பெயர்களில் கற்பித்தல் நடவடிக்கைகளில்  ஈடுபட்டு வரும் வீசா அற்ற வெளிநாட்டு ஆசிரியர்களை இலங்கையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

tamilmirror

5 comments:

  1. பிரதமரின் தீர்மானத்துக்குப் பின்னால் நீண்ட திட்டங்களின் பின்னணி தென்படுகின்றது, விசாரணைகள் தேடல்கள் முடிவடைந்து உண்மையில் இந்த பயங்கரவாதிகளின் சரியான திட்டங்கள், அவற்றை அழித்து ஒழிப்பதற்கான எந்த இறுதி முடிவுகளும் எடுக்கப்பட முன்பு முஸ்லிம் பெண்களின் நிகாபில் கைவைத்துவிட்டு இப்போது மதரஸாக்களில் கைவைக்க தொடங்கியுள்ளார்கள். இதன்பின்னால் நீண்ட ஏற்கனவே வரையப்பட்ட திட்டங்கள் தென்படுகின்றன. அவை உள்நாட்டு திட்டங்களா அல்லது வெளிநாட்டு சக்திகளின் திட்டங்களை நிறைவேற்ற அரசாங்கம் குத்தகை எடுத்துள்ளதா?

    ReplyDelete
  2. எங்கே சட்டம் ஒரு பக்கமாகப் பாயுமோ அங்கே பிரச்சினைகள் தீர்க்கப்பட்தாக சரித்திரமே இல்லை.

    மார்க்கக் கல்வியைத் தடைசெய்வது அதுவும் ஒருபக்கச் சார்பகத் தடைசெய்வது பிரச்சினைகளை விரிசலாக்குமே அல்லாது தீர்வினை ஒருபோதும் கொன்டுவராது.

    ReplyDelete
  3. மத்றஸாக்கள் தடை செய்யப்படுவதாக இருந்தால் அனைத்து மதங்களுக்குமுரிய மதஸ்தானங்களும் தடை செய்ய படவேண்டும்

    ReplyDelete
  4. Hasbunallahu wanihmal wakeel.

    ReplyDelete
  5. மதரசாக்களை எந்த அடிப்படையில் தடை செய்யப் போகிறீர்கள். வேண்டுமாக இருந்தால் முஸ்லிம் புத்திஐPவிகளின் (உலமாக்கள்) அனுசரனையுடன் அதற்கு புது வடிவம் கொடுக்கப்பாருங்கள். மதரசாக்களை ஒன்றிணைத்து ஒரே பாடத்திட்டத்தின் அடிப்படையில் மார்க்கக்கல்வியை அமல் நடத்தப்பாருங்கள். முதலில் யாராக இருந்தாலும் மத நிந்தனை, மதவாதம் பேசும் அமைப்பினைத் தடை செய்யுங்கள். மீறிப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் நீதிக்குமுன் நிறுத்தி தண்டனை வழங்கப் பாருங்கள். நடக்கக்கூடியனவற்றைப் பேசி காத்திரமான முடிவுகளை மேற்கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.