Header Ads



ஹிஜாப்பிற்கு எந்த தடையும் இல்லை -திட்டவட்டமாக அறிவித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு


பொது இடங்களில் முஸ்லிம் பெண்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வகையில் பொதுமக்கள் செயற்படக் கூடாது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் என்.டி. உடகம விடுத்துள்ள அறிக்கை குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான புர்க்கா உள்ளிட்ட ஆடைகள் மற்றும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப் அணிந்து வருகின்ற முஸ்லிம் பெண்கள் பலர் பொது இடங்களுக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்பட்டு சிரமத்துக்கு உள்ளாக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஆனால் பெண்களின் கலாசார உடையான ஹிஜாப்பிற்கு எந்த தடையும் இல்லை. இவை மனித உரிமை மீறல்களாகும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.