Header Ads



"றிசாத் பதியுதீனுக்கு தூக்குத், தண்டனை வழங்கப்பட வேண்டும்"

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்படுமானால் அவருக்கு தூக்குதண்டனை வழங்கப்படவேண்டும்.

அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

காலியில் இன்று (26) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் ஊடாக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும். இதற்கான கட்டளையை பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுக்கவேண்டும்.

இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்றம் பொருத்தமான இடமாக அமையாது என்பதே எனது கருத்தாகும். அத்துடன், அரசியல் ஆட்டத்துக்கான களமாக அதி உயர் சபையை நாம் பயன்படுத்தக்கூடாது.

எனவே, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பாதுகாப்பு மற்றும் பொலிஸ்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

குறித்த விசாரணைகளின்மூலம், பயங்கரவாத நடவடிக்கைக்கு அமைச்சர் ரிஷாட் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்படுமானால், ரிஷாட்டுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். அதற்கு நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் முழு ஒத்துழைப்பையும் வழங்க தயார். மாறாக குற்றவாளிகளை ஒருபோதும் பாதுகாக்கமாட்டோம் என்றும் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்

1 comment:

Powered by Blogger.